‘ஜெயிலர்’படத்தை ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்து புதிய சாதனை படைக்கவேண்டும் என்பது ரஜினியின் ஆசை. இதை நிறைவேற்றுவதற்காக இதுவரை 800க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் கன்ஃபர்ம் செய்யப்பட்டுள்ளனவாம். இப்பட ரிலீஸ் தினத்தன்று வேறு படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் ஆயிரம் தியேட்டர்கள் என்ற சாதனையும் சாத்தியமே என்கிறார்கள். ஞாயிறு முதல் ரிசர்வேசன் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கும் 4 தினங்கள் முன்னரே ஏகப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்க்காக டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. ஜெயிலரின் ட்ரெயிலர் பார்த்த பலரும் இது ’நோபடி’ என்ற ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி என்கிறார்கள். நண்பன் என்டர்டெயின்மென்ட் என்ற புதிய பட நிறுவனம் தமிழ்த்திரையுலகில் புதிதாக அகலக்காலடி எடுத்து வைத்துள்ளது. ‘இப்படி ஒரு நிறுவனம் தொடங்கியிருக்கிறோம். படங்கள் தயாரிக்கவிருக்கிறோம்’ என்ற அறிவிப்புக்காகவே இவர்கள் செலவு செய்த தொகை மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் என்கிறார்கள். சென்னை ட்ரேட் சென்டரில் நடந்த அறிவிப்பு விழாவுக்கு வந்த அனைத்து திரையுலக வி.ஐ.பி.களுக்கும் பணமுடிப்பு கொடுக்கப்பட்டது என்றாலும் இவர்களால் பெரும் லாபம் சம்பாதித்தவர் தமன்னாதானாம். சக டான்சர்களுடன் ஒத்திகையில்கூட கலந்துள்ளாமல் ஐந்து நிமிடம் மேடையில் ஆடிய தமன்னா வாங்கிய பேமெண்ட் 60 லட்சம் என்கிறார்கள். நோ கமெண்ட்ஸ்! மேற்கண்ட பிட்டில் இப்படி ஒரு ஜாக்பாட் அடித்த தமன்னா, ‘ஜெயிலர்’ ட்ரெயிலரில் தனது சிங்கிள் ஷாட் கூட இல்லாததால் படு அப்செட் ஆகியிருக்கிறார். இதே ட்ரெயிலரில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உட்பட பல நட்சத்திரங்கள் இடம்பெறவில்லை. காரணம், சாட்சாத் சூப்பர் ஸ்டாரே என்கிறார்கள். முதல் லிரிக்கல் பாடல் ‘ நூ காவாலய்யா’ வெளியானபோது அதில், ரஜினியை ஓவர்டேக் பண்ணி, ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டவர் தமன்னா. அதனால் அப்செட் ஆன ரஜினி, இனி வரக்கூடிய அனைத்து விளம்பரங்களிலும் தன்னை முன்னிறுத்தி மட்டும் செய்தால் போதும் என்று இயக்குநர் நெல்சனுக்கு கட்டளை இட்டாராம். ஜெயிலரின் கட்டளையை சூழ்நிலைக் கைதி மீற முடியுமா? அகில இந்திய இளையராஜா ரசிகர் மன்றத் தலைவரும் பிரபல இந்திப்பட இயக்குநருமான பால்கி இயக்கத்தில் ராஜாவின் பயோபிக் வரவிருப்பதாக கசியும் தகவல்கள் உண்மையே. அதில் ராஜாவாக நடிக்கப் போவது தனுஷ். ஆனால், அது சாத்தியப்பட குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும் என்கிறது தனுஷ் வட்டாரம். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘டி 50’, அடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவுடன் இணையும் பான் இண்டியா படம், மதுரை அன்பு தயாரிக்கும் ‘டி 52’, அடுத்து அண்ணன் செல்வராகவன் தலையில் அடித்து சத்தியம் செய்திருக்கும் ‘டி53’ என்று இரண்டு வருடங்களுக்கு மூச்சுவிட முடியாத அளவுக்கு படுபிசியாக இருக்கிறார் தனுஷ். எனவே ‘ராஜா தி ராஜா’ 2025-க்கு முன் சாத்தியமில்லை. சீக்ரெட் பிரம்மாண்ட நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். அதில் பெரும்பாலானோருக்கு சம்பளம் லட்சத்து சொச்சம். ரெய்டுக்குப் பிறகு நிறுவனத்தின் பட வியாபாரம் டல்லடித்து வரும் நிலையில் பாதிக்கும் மேல் ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாம். அச்சத்தில் இருக்கிறார்கள் ஊழியர்கள்!