இசைவெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்ளும் சினிமாக்காரர்கள் மத்தியில், தலைப்புச் செய்தியில் இடம்பெறும் அளவுக்கு ஹாட்டாக யார் பேசுவது என்று ரகசிய போட்டியே இருக்கும். அப்படி சமீபத்தில் நடந்த ‘தமிழ்க்குடிமகன்’ பட விழாவில் சமூகத்தில் சாதியை ஒழிப்பது எப்படி என்று அப்பட நாயகன் சேரன் தொடங்கி அமீர், தங்கர் பச்சான், மாரி செல்வராஜ் வரை ஆலோசனைகளை அள்ளி அள்ளி வழங்கினார்கள். ஆனால், இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டவர் வழக்கம்போல் தங்கர் பச்சான் தான். “குப்பையா இருக்குன்னு தெரிஞ்சும் ஏன் அந்தப் படத்தைப் பாக்குறீங்க?” என்று ஜெயிலரின் உச்சந்தலையில் ஒரு போடு போட்டு, “நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் தான்யா ஹெட் மாஸ்டர்” என்று நிரூபித்துவிட்டார்.படத்தின் இளம் நாயகன் அசோக் செல்வன் திருமண வேலைகளில் பிசியாகிவிட ‘போர் தொழில்’ஹிட்டானதன் பலனை முழுமையாக அனுபவித்துக்கொண்டிருக்கிறார் யங் ஸ்டார் சரத்குமார். கைவசம் சுமார் ஒரு டஜன் படங்கள் உள்ள சரத்தின் அடுத்த ரிலீஸ் ‘பரம்பொருள்’. மறுபடியும் ஒரு சிலை கடத்தல் கதை. மிக சிறிய பட்ஜெட் படமாகத் தொடங்கிய பரம்பொருள், சரத் உள்ளே வர, யுவன் இசையமைக்கத்துவங்க, அனிருத்தும் யுவனும் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடியுள்ள நிலையில், பெரும் பட்ஜெட் படமாக மாறிவிட்டதாம். யுவனுக்கு இசையமைக்க மூன்று கோடி ரூபாய் போக, குறிப்பிட்ட பாடலில் நடனம் ஆட அனிருத்துக்கும் யுவனுக்கும் தலா ஒரு கோடி கொடுக்கப்பட்டதாம். பெரும்பொருள்தாங்க.அஜித்தின் ‘விவேகம்’ பட ரீமேக்கான ‘போலா சங்கர்’ ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்துக்கு அடுத்த நாள் ரிலீஸாகி, சிரஞ்சீவின் கேரியர் வொர்ஸ்ட் என்று அவரின் ரசிகர்கள் கண்ணீர் விட்டுக் கதறும் அளவுக்கு, படு மோசமான ஃப்ளாப். இந்த பரிதாப தோல்வியால் சிரஞ்சீவியை விட அவருக்கு தங்கையாக நடித்த கீர்த்தி சுரேஷ் துவண்டு போய் இருக்க, காஷ்மீரில் சிவகார்த்திகேயனுடன் படப்பிடிப்பில் இருக்கும் சாய் பல்லவி இந்த தகவலைக் கேட்டு பெருமூச்சு விட்டாராம். ஏனென்று விசாரித்தால், இதே தங்கை ரோலில் முதலில் கமிட் ஆகி இருந்தவர் சாய்பல்லவிதான். சின்ன டெக்னிக்குடன் சிரஞ்சீவியை சந்தித்து அதைத் தட்டிப் பறித்தார் கீர்த்தி சுரேஷ். இப்போது தப்பித்தார் சாய்பல்லவி!அஜித்தின் ‘விடா முயற்சி’தொடர்ந்து தாமதமாவது மர்மமாகவே இருக்க, ஆகஸ்ட் 15 அன்று படம் குறித்த அப்டேட் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டியிருந்தது. ஆனால். அன்றைய தினமோ, அந்நிறுவனம் வெறுமனே சுதந்திர தின வாழ்த்தை மட்டும் வெளியிட்டு, அஜித்தின் அழைப்புக்காக தேவுடு காத்துக்கொண்டிருக்க, விஜய்யின் ‘லியோ’ குழுவினர் படத்தின் முக்கிய வில்லனான அர்ஜுனின் ஹரால்டு தாஸ் பாத்திரத்தின் முதல் பார்வையை வெளியிட்டு, ‘எங்களுக்குப் போட்டி ஜெயிலர் இல்ல. நாங்க மோதுறது அஜித் கூட மட்டும் தான்’ என்று நாசூக்காக காட்டியுள்ளனர்.சீக்ரெட்பல கட்டிப்புடி, முத்தக்கடி சம்பவங்களுக்குப் பேர்போன கருத்தான இசைத்தம்பி திரைப்பட, அரசியலில் உச்சத்தில் இருக்கும், ஒளிமயமான குடும்பத்துப் பெண்ணை விரைவில் மணக்கவிருக்கிறாராம். இந்த ஏற்பாட்டிற்கு நடுநாயகமாக நின்று உறவுப்பையனை குடும்பத்தலைவனாக மாற்றிய பெரியவர், ‘என் மருமகன் மாதிரி, பேரைக் கெடுத்துக்காம ஒழுக்கமா வாழ்ந்து என் பேரைக் காப்பாத்து’என்று அட்வைஸ் பண்ணியிருக்கிறாராம்!