மூன்று தினங்களுக்கு முன்பு இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாள் வெகுவிமரிசையாக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 30 இயக்குநர்கள் கலந்துகொண்டனர். டேக் டைவர்ஷன், இப்படி நடக்கும் இயக்குநர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர்கள் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜு ஆகியோரை திட்டமிட்டே தவிர்க்கிறார்களாம். டேக் டைவர்ஷன், மாரி செல்வராஜுன் அடுத்த படம், திரையுலகில் எப்படியெல்லாம் சாதி ய பாகுபாடுகள் இருக்கின்றன என்பதைப் பற்றிதானாம்! ’லியோ’வின் பேட்ச் ஒர்க்கு முடிந்து ரீரெகார்டிங் தொடங்கியுள்ள நிலையில், விஜய்யும் த்ரிஷாவும் நார்வே நாட்டில் ஜோடியாக ஷாப்பிங் போனதாக வெளியான புகைப்படம், அப்பட தயாரிப்பாளர் லலித்துக்கு தர்மசங்கடமாக மாறியுள்ளது. அந்தப் புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நபரைக் கண்டுபிடித்து வழக்கு தொடரவேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளாராம். இதே ‘லியோ’குறித்து மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு செய்தி… இப்படத்தின் க்ளைமாக்ஸில் கமல் ஒரு சிறு வேடத்தில் எட்டிப்பார்க்கிறார். பட ரிலீஸுக்கு முந்தைய வாரம் வரை இச்செய்தி சீக்ரெட்டாகவே இருக்கும்! ‘குட்டிபுலி’தொடங்கி ‘தேவராட்டம்’, ‘விருமன்’வழியாக ‘காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’ வரை வந்து சேர்ந்திருக்கிற இயக்குநர் முத்தையாவின் கேரியர் கிராஃப், கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆகியுள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களாக அடுத்த படத்துக்குக் கதை சொல்ல எந்த ஹீரோவைத் தேடினாலும், இரண்டாவது அழைப்பிலேயே தொடர்பு எல்லைக்கு அப்பால் ஓடிவிடுகிறார்களாம். கடைசியாக, தலைவிரி கோலமாக அலைவாரே அந்தக் காமெடி நடிகருக்குக் கதை சொல்ல தொடர்பு கொண்டபோது, ‘அதான் போதும் போதும்ங்குற அளவுக்கு சாதிப்பெருமை பேசிட்டாரே, கொஞ்சநாள் நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே?” என்று ஓப்பனாகவே கமென்ட் அடித்தாராம்! பிரம்மாண்ட படங்கள் எடுத்த கே.டி.குஞ்சுமோன் சுமார் 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தயாரிக்கும் படம் ‘ஜென்டில் மேன் 2’. ஆகஸ்ட் 19 அன்று இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குநர் ஷங்கர், நடிகர் பிரபுதேவா உட்பட ஒரு பிரபலம்கூட கலந்துகொள்ளவில்லை. ஜென்டில் மேன்களை வலைவீசித் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத இடம் தமிழ் திரையுலகம்! சீக்ரெட் தனது அடுத்த படத்தின் வசூல், சூப்பர் நடிகரின் பட வசூலை மிஞ்ச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அரசியல் நடிகர். அப்படியானால், போட்டிகள் குறைவாக இருக்கவேண்டும் என்று நெருங்கிய வட்டாரம் ஆலோசனை கொடுத்ததை அடுத்து, தீபாவளிக்கு சில வாரங்கள் தள்ளி ஸோலோவாக தனது படத்தை ரிலீஸ் செய்யலாமா என்று ஆலோசித்துவருகிறார் அரசியல் நடிகர்!