தளபதி 68’ ல் அஜித்தும் நடிக்கிறாராமே? முழுக்க முழுக்க அரசியல் படமாமே? மீண்டும் த்ரிஷாவாமே? போன்ற மைக்குகளிடமிருந்து தப்பிக்க பொட்டி, புட்டிகளைக் கட்டிக்கொண்டு, ஜஸ்ட் மூன்றே உதவி இயக்குநர்களுடன், கொடைக்கானலின் கண்காணா லொகேஷனுக்குக் கிளம்பிவிட்டார் வெங்கட்பிரபு. இனி அவர் சென்னை திரும்ப அட்லீஸ்ட் 40 நாட்களாவது ஆகும். அவர் கிளம்புவதற்கு முன் ‘தளபதி 68’க்கு கமிட் பண்ணப்பட்டவர்கள் ஜஸ்ட் மூன்றே டெக்னீஷியன்கள்தான். இசை: யுவன் ஷங்கர் ராஜா, ஸ்டண்ட் மாஸ்டர்: திலீப் சுப்பராயன், ஆர்ட் டைரக்டர் : ராஜீவன். # டு பி கண்டினியுட்.தமிழில் வேற லெவல் ஹிட் என்று தெலுங்கு மீடியாவுக்கும், தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் என்று தமிழுக்கும் பரஸ்பரம் செய்தி கிளப்பியும் ‘பிச்சைக்காரன்2’ செல்ஃப் எடுக்கவில்லை. அதனால், கொஞ்சம் விபரீதமாக யோசித்து, கடந்த வாரம் உதவி இயக்குநர்களைப் பாடாய்ப்படுத்தி, 100 ஒரிஜினல் பிச்சைக்காரர்களைப் படம் பார்க்கவைத்தார்கள். அப்படி அவர்கள் படம் பார்க்கிற செய்தி யூடியூபில் வைரல் ஆனால் நன்றாக இருக்குமே என்று 50க்கும் மேற்பட்ட யூடியூபர்களுக்கு அழைப்பு விடுக்க, மொத்தமே நாலைந்துபேர்தான் வந்திருந்தார்களாம். கேட்டால், ‘பிச்சைக்காரங்களுக்கு பிரியாணி சொன்ன அதே கடையிலதான் நமக்கும் பிரியாணி சொல்லியிருக்காங்கப்பா’ என்று வருகிறது முனகல் சத்தம். # பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்.‘வாழ்க்கை ஓர் அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்' என்கிற உற்சாக அறிவிப்புடன் ’ஏகே மோட்டோ ரைட்’என்கிற சுற்றுலா நிறுவனத்தை அறிவித்திருக்கிறார் அஜித். ரூ 20 லட்சம் முதலீட்டுத்தொகையாக அறிவித்து கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் இந்நிறுவனத்தை மே 17ம் தேதி அன்று பதிவு செய்துள்ள அஜித், அதில் தனது மனைவி ஷாலினியை தொழில் பார்ட்னராக அறிவித்துள்ளார். வருடத்துக்கு ஒரு படம் என்பதை இன்னும் குறைத்து இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் என்னும் முடிவெடுத்த பிறகே இந்த நிறுவனத்தை தொடங்கும் முடிவை அறிவித்தாராம் அஜித். # ரைட்டு, ஸ்டார்ட்டு, புல்லட்டு! நடிகை ஷிவதாவின் கணவராக, ஐஸ்வர்யா ராஜேஷின் முன்னாள் காதலராக ஜெய் துடித்திருக்கும் படம் ‘தீராக் காதல். லைகாவின் தயாரிப்பில் இந்த வாரம் ரிலீஸாகும் இப்படத்தின் அத்தனை விளம்பரங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயரும் புகைப்படங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டு, தான் டம்மியாக்கப்பட்டுள்ளதாக சந்திக்கிற அத்தனை பேர்களிடமும் புலம்பிக்கொண்டிருக்கிறார் ஜெய். இந்த தகவல் தயாரிப்பு நிறுவனத்துக்குப் போகவே ஜெய்யின் மேனேஜருக்கு போன் போட்டு, ‘ ஜெய்ன்னா யாருன்னு கேக்குறாங்க. பட ரிலீஸ் தினத்துல பத்து இருபது பேராவது வந்து படம் பாக்கணும்னு நினைக்கிறோம். அதனாலதான் ஐஸ்வர்யா பேரு டாப்புல ’ என்று தீராக் கோபத்துடன் பதில் அளித்தார்களாம். # வொய் ஜெய் வொய்?சீக்ரெட்நாலெழுத்து தனன்னா நடிகை, தெலுங்குப் படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஐந்து கோடி கேட்டதாகவும், அதைக் கேட்ட தயாரிப்பாளருக்கு லேசான நெஞ்சு வலி வந்ததாகவும் செய்திகள் வந்தன. இப்போது அந்த செய்திகளை மறுத்து ஆக்ரோஷமாக ட்விட் பண்ணிக்கொண்டிருக்கிறார் நடிகை. ஆனால், அப்படி ஒரு செய்தியைப் பரப்பியதே சாட்சாத் அந்த தனன்னா தரனனனாவேதானாம். # புதுப்படம் வராம சும்மா உட்கார்ந்திருக்கேன் பாஸ் மொமன்ட்!