நீதிங்க...நேர்மைங்க...’என்று மேடைதோறும் முழங்கிவரும் இயக்குநர் தங்கர்பச்சானின் இன்னொரு முகம் அவருடன் பணியாற்றி வருபவர்களுக்கு வெகு பரிச்சயம். குடும்ப உறவுகளின் மேன்மையை, மனிதர்களின் நேர்மையை உரக்கப்பேசும் படம் என்று தங்கரால் அறிவிக்கப்பட்டு, இவ்வாரம் ரிலீஸாகியிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’படத்தின் தயாரிப்பாளர், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட ‘நியோமேக்ஸ்’துரை. வீரசக்தி. இவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு, இவர் தலைமறைவாக இருக்க, தானே படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார் பச்சான்! # இருளிலே தெரிவது மோசடியா..! 2010ல் வெளியான ‘பையா’வுக்குப் பின்னர் அய்யா லிங்குசாமி இயக்கிய அத்தனை படங்களும் தோல்வியடைந்த நிலையில், கடைசியாக வெளியான தமிழ், தெலுங்கு ‘வாரியர்’இவரது கேரியரையே கேள்விக்குறியாக்கிவிட்டது. இதற்குப் பின்னர் சில நடிகர்களிடம் கால்ஷீட் வாங்க எடுத்துக்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிய, கடுமையான கடன் தொல்லையில் சிக்கித்தவிக்கிறார் லிங்கு. எதற்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா? சமீபத்தில் ஒருநாள் தனது நிலைமை குறித்து ஆழ்ந்த யோசனையில் இருந்தபோது, அடுத்தடுத்து மனக்கண் முன்னால் ஜக்கியும், நித்தியும் ஃப்ளாஷ் அடிக்க, ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் சாமியாராக முடிவெடுத்து, அதை பொதுமக்கள் மத்தியில் பிரசாரமும் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஆசிரமம்கூட விரைவில் தயாராகிவிடும் என்கிறார்கள்! # கத்துக்கிட்ட மொத்த வித்தையும் வீணாப் போச்சா, சோணாமுத்து?! ரஜினியின் ‘லால் சலாம்’பட போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்தநிலையில், படத்தின் இயக்குநரும் மகளுமான ஐஸ்வர்யாவிடம், சில தினங்களாக ரஜினி முகம் கொடுத்தே பேசுவதில்லையாம். காரணம் இதுதான்… 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட படத்தின் பட்ஜெட் தற்போது டபுள் ஆகிவிட்டது. இதனால், ரஜினிக்குத்தரவேண்டிய சம்பளத்தை, படத்தின் வியாபாரத்தைப் பொறுத்தே தரமுடியும் என்று தயாரிப்பு தரப்பு ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துவிட்டதாம். #அப்பா, இது தப்பா… விஜய்யின் மகன் ஜேஸன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பதும், முதல் பட வாய்ப்பே அவருக்கு லைகா நிறுவனத்தில் கிடைத்திருப்பதும் தெரிந்த நியூஸ். தெரியாத செய்தி, அந்த படத்தின் ஹீரோ, வில்லன் யார் என்பது. லைகா அதிபர் சுபாஸ்கரனை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போடுவதற்கு முன்னர் சஞ்சய் சந்தித்து கதை சொன்னது விஜய் சேதுபதிக்கு. இப்போதைய நிலவரப்படி சஞ்சயின் கதையில் ஹீரோவும், வில்லனும் விஜய் சேதுபதியேதான் என்கிறார்கள். இப்படத்தில் இன்னொரு மினி ஆச்சர்யம் விஜய் மகன் இயக்கும் படத்தின் பி.ஆர்.ஓ. அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா! # வாவ், வாரிசின் வாரிசு! சீக்ரெட் சொந்த இயக்கத்தில் நடித்துவரும் படத்துக்கு அடுத்தபடியாக தெலுங்கின் டாப் இயக்குநரின் படத்தில் ஒல்லிப்பிச்சான் நடிப்பதாக இருந்தார் அல்லவா? இவரை வைத்து மட்டுமே அறிவிக்கப்பட்ட அந்த பிராஜக்டுக்கு ஆந்திர ஏரியாவில் சுத்தமாக பிசினஸ் இல்லாததால், திடீரென ஐந்தெழுத்து ’ஜுனா’நடிகரையும் கமிட் பண்ணியிருக்கிறார்கள். ‘ஸோலோ ஹீரோன்னு நம்பித்தானே ஓகே. சொன்னேன். திடீர்னு ஏமிரா இதி?’ என்று கதறுகிறார் வி.ஐ.பி!