* விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்து, செந்தமிழ் உணர்வாளர்களின் கூப்பாடால் பின்வாங்கிய, முத்தையா முரளிதரனின் பயோபிக்கான ‘800’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. முரளி கேரக்டரில் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ நடிகர் மதுர் மிட்டல் நடிக்க, முரளியின் மனைவி மதிமலர் கேரக்டரில் மஹிமா நம்பியார் நடிக்கிறார். ஐபிஎல் சீஸனிலேயே படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ள நிலையில், முரளிதரன் ராஜபக்ஷேவுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காட்சிகள் பற்றி படக்குழுவினரிடம் காரசார விவாதம். அக்காட்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் படம் சுவாரசியமாக இல்லை. அக்காட்சிகளை வைத்தால் தமிழகத்தில் படம் ரிலீஸாவதில் சிக்கல் வரும். என்னதான் செய்வதோ என்று குழம்பித் தவிக்கிறார்களாம்.* திடுதிப்பென்று தான் கர்ப்பமாக இருப்பதாக இலியானா இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருப்பதால், தொடர்ச்சியாக ஹார்ட்டின் விட்டுக்கொண்டிருந்த, அவரது ஃபாலோயர்களில் பாதிப்பேருக்கு ஹார்ட் அட்டாக். ஆண்ட்ரூ என்பவருடன் சில காலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அந்த உறவை 4 வருடங்களுக்கு முன்பே முறித்துக்கொண்ட இலியானா, அடுத்து தனது காதலர், அன்பர், நண்பர், பக்கத்து தெருவில் இருப்பவர் என்று யாரையுமே அறிமுகப்படுத்தாத நிலையில், ‘உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா, அவர் பேர் என்ன? எந்த ஊர்? என்று அநாகரிகமான முறையில் கேள்வி கேட்டு அவரை டென்சன் ஆக்கிவருகிறார்கள் நெட்டென்ஷர்கள்..* ’பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் நடிகர் சித்தார்த்தை நாயகனாக வைத்து ‘சித்தா’ என்ற அடுத்த படத்தைத் துவங்கியிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் சித்தார்த் என்றே அறிவித்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் நிஜத் தயாரிப்பாளர், 5 வருடங்களுக்கும் மேலாக படத்தயாரிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்தானாம். பெண் பிள்ளைகளிடம் அப்பா, அம்மாவை விட சித்தப்பாக்கள் எவ்வளவு பிரியமாக நடந்துகொள்வார்கள் என்பதைச் சொல்லவரும் இப்படத்தில் ஆஸ்கார் ரவி நேரடியாகக் களம் இறங்காவிட்டாலும் அவரது பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள் என்று பலரும் வலம் வருகிறார்கள்.* சிம்பு இருக்கிற இடத்தில் வம்பு இல்லாவிட்டால் எப்படி? ராஜ்கமலில் மிகவிரைவில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இவர் நடிப்பதாக இருந்த படம் ‘எஸ்.டி.ஆர் 48’ துவங்கப்பட உள்ள நிலையில், ‘என் கிட்ட கை நீட்டி வாங்கின ’வெந்து தணிந்தது காடு 2’ அட்வான்ஸுக்கு என்ன பதில்?’ என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பஞ்சாயத்து ஆரம்பித்திருக்கிறாராம். இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ‘அன்பானவன் அடங்காதவன் அநியாயத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியவன்’ படப் பஞ்சாயத்தை கவுன்சில் மூலம் தூசு தட்ட ஆரம்பித்திருக்கிறாராம். மூன்றாவது பஞ்சாயத்தை கமலிடம் கொண்டுபோயிருப்பவர் வம்புவின் வாப்பா டி. ஆர். ‘அவன் ஏதோ 10, 12 கோடி சம்பளம் வாங்குறதா சொல்றாங்க. இதுவரைக்கும் என்கிட்ட ஒரு அஞ்சு ரூபா காயினைக்கூட காட்டுனதில்ல’. நெஞ்சு வலிக்குதைய்யா....சீக்ரெட்* இரண்டெழுத்து காஷ்மீர் படத்தயாரிப்பாளர் மிக விரைவில் படத்திலிருந்து தூக்கி அடிக்கப்படக்கூடும் என்று, ஒரிஜினல் தயாரிப்பாளரான ஹீரோ தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது. இதே காம்பினேஷனின் முந்தைய மூன்றெழுத்து படத்தில் ’லாபமே இல்லை. ஜஸ்ட் எஸ்கேப்தான் ஆனோம். அதனால் இந்தப் படத்தையும் ஓரளவு விலை குறைத்து எங்களுக்கே கொடுக்கவேண்டும்’ என்று விநியோகஸ்தர்கள் நச்சரிப்பதால் லலிதமான இந்த முடிவை எடுக்கவிருக்கிறாராம் ஹீரோ.