-ஷானு`நீர்நிலைகளை அழித்து சாலைகள் போட்டுவிட்டால் சோற்றுக்கு எங்கே போவீர்கள்?' எனக் கேள்வியெழுப்பியதோடு, `முதல்வர் வீட்டு வாசலில் மனைவியோடு தீக்குளிப்பேன்’ என்று விவசாய சங்கத் தலைவர் ஒருவர் விடுத்த அறைகூவலால், பதறிக் கிடக்கிறது திருச்சி..``ஏன் இப்படியொரு மிரட்டல்?'' என விவசாய சங்கத் தலைவர் சின்னதுரையிடம் கேட்டோம். “நீலகிரி மாவட்டம் கூடலூர் தொடங்கி கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வரை செல்லும் என்.ஹெச். 67 தேசிய நெடுஞ்சாலை, திருச்சியை கடப்பதற்காக அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கிறார்கள். `இது நகருக்குள் போக்குவரத்தைக் குறைக்கும் நல்ல திட்டம்தான். ஆனால், நீர்நிலைகளை அழிக்காமல் அமைக்க வேண்டும்' என்பதுதான் எங்கள் கோரிக்கை.புங்கனூர் ஏரி, கள்ளிக்குடி ஏரி, கொத்தமங்கலம் ஏரி, பஞ்சப்பூர் ஏரி, கே சாத்தனூர் பெரியகுளம், கே சாத்தனூர் கணக்கன்குளம், ஓலையூர் ஏரி, கும்பக்குடி ஏரி, சூரியூர் ஏரி, எலந்தபட்டி ஏரி, பழங்கனாங்குடி ஏரி, துவாக்குடி பெரியகுளம், துவாக்குடி பறந்தான்குளம் என மொத்தம் 13 நீர்நிலைகளை முழுசா அழிச்சுட்டாங்க.ஏற்கெனவே 2009ம் ஆண்டு புங்கனூர் ஏரி, கள்ளிக்குடி ஏரி, கொத்தமங்கலம் ஏரி மூன்றையும் அழிக்கும் வேலைகளை அதிகாரிகள் செய்யவே, போராட்டம் நடத்தி, வழக்கு தொடுத்தோம். இதையடுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக நீரியல் துறை இயக்குநர் கருணாகரன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது..அதன்படி, ‘ஏரிகளை அழிக்கக்கூடாது. ஏரியில் மண்ணைக் கொட்டக்கூடாது. ஏரி வழியாகத்தான் சாலை செல்லவேண்டும் என்றால் தூண் அமைத்துக் கொண்டுபோக வேண்டும். இல்லாவிட்டால் ஏரியை விட்டு வெளியேற வேண்டும்’ என்ற உத்தரவை வாங்கினோம்.தீர்ப்பின்படி அப்போதைய கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், பணிகளை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், அதன்பிறகு வந்த கலெக்டர் சிவராஜ், கொரோனா பொதுமுடக்கத்தை பயன்படுத்திக்கொண்டு செயற்பொறியாளர் பாஸ்கர், மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி துணையுடன் அத்தனை ஏரிகளையும் அழிச்சுட்டாங்க. அதனால, திரும்பவும் போராட்டத்தைத் தொடங்கினேன்'' என்றவர்,``கானக்கிளியநல்லூர் பகுதியில் விவசாயம் செய்யும் கே.என்.நேரு, `எங்கள் தாத்தா ஒரு விவசாயி' என்று பெருமைபேசும் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இங்கே அமைச்சர்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது விவசாயத்துக்கு அடிப்படை ஆதாரமான நீர் ஆதாரங்களை அழிக்கிறார்கள். ஏரிகளைக் காக்கும் வகையில் சாலைப் பணிகளை மாற்றியமைக்கவில்லை என்றால், முதல்வர் வீட்டின் முன்பு மனைவியுடன் தீக்குளிப்பேன். ஏரிக்காக எங்களை எரித்துக்கொள்ளவும் தயங்க மாட்டோம்” என்றார் ஆவேசமாக.விவசாயியின் கோரிக்கை குறித்து திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரிடம் கேட்டபோது, “இது மாநில அரசின் கொள்கை முடிவு சார்ந்தவை. `மாவட்ட அளவில் செய்யக்கூடிய விஷயங்களை கட்டாயம் செய்கிறேன்' என்று சின்னதுரையிடம் கூறியிருக்கிறேன். இந்த வருடமே 300 கிலோமீட்டர் அளவுக்கு நீர்நிலைகளை தூர்வாரி சுத்தப்படுத்தி இருக்கிறோம். நீர்நிலைகள் ஆக்ரமிக்கப்பட்டிருந்தால் அதனை அகற்றிவிடுவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறோம். ஆனாலும், அவர் தொடர்ந்து போராட்டங்களை அறிவிக்கிறார்” என்றார்.நீர்நிலைகளை காத்தால் ஊருக்கு நல்லதுதானே!