Reporter
வம்பானந்தா : சி.பி.ஐ-க்கு தடா... சி.ஆர்.பி.எஃப்-க்கு கூடுதல் அதிகாரம்... ஜார்ஜ் கோட்டை Vs செங்கோட்டை முற்றும் போர்!
அமித்ஷா தமிழகம் வந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் பிரதமர் மோடியை டென்ஷாக்கி இருக்கிறது. இதையடுத்து மத்திய உள்துறைச் செயலகத்தில் இருந்து தமிழக காவல் துறையிடம் விளக்கம் கேட்டார்களாம். அவர்களும் உக்கிரத்தை தாங்க முடியாமல் ஏதேதோ சொல்லி கூல்படுத்தியுள்ளனர். அதன் பிறகே மோடியின் கோபம் சற்று தணிந்துள்ளது.