Reporter
சுவாமி வம்பானந்தா : ராமநாதபுரத்தை குறிவைக்கும் மோடி?
“நிஜம்தான். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே முதல்வரின் டென்ஷன் அதிகரித்து வருகிறது. அதேநாளில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னை அயனாவரத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். கூட்டம் முடிந்ததும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டார் முதல்வர். அப்போது அவரிடம் அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக கேட்டு தெரிந்துகொண்டார்.