கர்நாடகாவில் 224 தொகுதிக்கும் கடந்த 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் 2165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3,88,51807 வாக்காளர்கள் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் 36 மையங்களிளும் ஒட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒட்டு எண்ணிக்கை தொடங்கிய ஒரு சில நேரங்களில் எந்த கட்சி முன்னிலையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஓட்டு எண்ணிக்கையில் மதியத்துக்குள் எந்த கட்சி முன்னிலை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகிறது என்பது தெரியும். பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இல்லாமல் போய்விட்டால், கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உள்ளது. 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ்,மதசார்பற்ற ஜனதா தளம், இந்த மூன்று கட்சிகளுக்கும் மும்முனை போட்டி நிலவி வருகிறது.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் 120 இடங்களிலும்,பா.ஜ.க 72 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களிலும் மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பேசிய கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை, ” பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். மக்களுடைய தீர்ப்பு வெளியாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாராசாமி, "முடிவு எதுவாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். இதுவரை கூட்டணி குறித்து எந்த கட்சியும் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. 30 முதல் 32 தொகுதி வரை நாங்கள் கண்டிப்பாக வெல்லுவோம்" என தெரிவித்துள்ளார்.
- இரா.விமல்ராஜ்