`கோடு மொத்தத்தையும் அழி... பந்தயத்தை முதல்லேர்ந்து ஆரம்பிக்கலாம்' - நடிகர் சூரியின் பரோட்டா காமெடியைபோல, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட அமைப்பை கூண்டோடு கலைத்துவிட்டு, புதிய ஆட்டத்தை ஆடத் தொடங்கியிருக்கிறார், பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.‘உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு முழுமையாக கலைக்கப்படுகிறது. புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க கட்சியின் மாநில அமைப்புக்குழுச் செயலாளர் தருமபுரி சண்முகம் தலைமையில் குழு அமைப்படும்’ என கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார், டாக்டர் ராமதாஸ்.``ஏன் இப்படியொரு முடிவு?" பா,ம.க. நிர்வாகிகளிடம் கேட்டோம். “கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பா.ம.க.வில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன், மாவட்ட தலைவர் தமிழ்வாணன், தேர்தல் பணிக்குழு செயலாளர் அன்பழகன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.கே.சாமி, மாவட்டச் செயலாளர் டாக்டர் ராஜா என பல கோஷ்டிகள் உள்ளன..டாக்டர் ராஜா, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இருப்பினும், தேர்தலில் நிறைய செலவு செய்ததால் அவரை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டச் செயலாளராக ராமதாஸ் அறிவித்தார். அவரும், `அடுத்த தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியைக் கைப்பற்றி எம்.எல்.ஏ. ஆகிவிட வேண்டும்' என்று காய்களை நகர்த்தினார்.இதற்காக, ஏ.கே.சாமியோடு கைகோத்து கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் உட்பட சிலரை ஓரம்கட்டத் தொடங்கினார். மூங்கில்துறைப்பட்டைச் சேர்ந்த வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகி ஏ.சீனிவாசன் என்கிற ஏ.எஸ்.வாசன் வசதியானவர். `அவரை வளரவிட்டால் தனது எம்.எல்.ஏ கனவுக்கு வேட்டு வைத்துவிடுவார்' என்று நினைத்தார், ராஜா..இந்நிலையில், ஏ.எஸ்.வாசன் தனது வணிக வளாகத்தை திறந்து வைக்க வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழியை அழைத்தார். ஆனால், அருள்மொழியை வரவிடாமல் ராஜா தடுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து மூங்கில் துறைப்பட்டில் பா.ம.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் வாசன், ராஜா கோஷ்டிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில், வாசனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கிவிட்டார்கள்.இவையெல்லாம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு லேட்டாகவே தெரிந்திருக்கிறது. அதைத்தொடர்ந்தே கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டத்தைக் கலைத்திருக்கிறார்" என்கின்றனர்.``இதுதான் காரணமா?" என டாக்டர் ராஜாவிடம் கேட்டோம்.”நான் அரசியலுக்கு புதுசு. பழைய நிர்வாகிகள் சொன்னதைக் கேட்டு செயல்பட்டுவிட்டேன். தற்போது கோஷ்டி அரசியல் இல்லாமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபட இருக்கிறோம்" என்றார்.கோஷ்டி பூசல் இல்லாமல் அரசியலா? - பி.கோவிந்தராஜு