`சோத்துக்கே வழி இல்லாம இருப்பாம்பாரு... அவனைப் புடி... அவன்தான் நமக்கு வெட்டிக் கொடுப்பான்' -`காடு' திரைப்படத்தில் வரும் இந்த வசனத்துக்கும் செம்மரக் கடத்தலுக்கும் ஏக பொருத்தம். அதிலும், ஆந்திராவில் கைதான தமிழர்களை மூளைச்சலவை செய்து மரம் வெட்டப் பயன்படுத்தியதாக வெளியான தகவல், அதிர்ச்சி ரகம்.``என்ன நடந்தது?'' என ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சக்கரவர்த்தியிடம் பேசினோம். ``கடந்த ஞாயிற்றுக்கிழமை, டி.எஸ்.பி செஞ்சுபாபு தலைமையில் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸார், திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முயற்சித்தும் முடியாததால் விரட்டிப் பிடித்தோம். அந்தக் காரில் இருந்து ஒன்பது செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.பிறகு, அன்னமய்யா மாவட்டத்தில் மூன்று பைக்குகளில் செம்மரம் கடத்தியவர்களைப் பிடித்தோம். இதேபோல், கடப்பா மாநிலம் பாலப்பள்ளியில் இரு கார்களில் கடத்தப்பட்ட 21 செம்மரங்களைக் கைப்பற்றினோம். மீட்கப்பட்ட செம்மரங்களின் மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய். இந்தக் கடத்தலில் ஈடுபட்ட 48 பேரைக் கைது செய்துள்ளோம். இவர்கள் அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இவர்களில் ஆறு பேர் ஏற்கெனவே செம்மரத் திருட்டில் கைதாகி ஜாமீனில் வந்தவர்கள். அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய உள்ளது" என்றார்.``ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கட்டைகள் திருட்டில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே கைதாவது ஏன்?'' என்று காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். “சர்வதேச சந்தையில் தங்கத்துக்கு அடுத்தபடியாக உச்சபட்ச மார்க்கெட் இருப்பது, செம்மரக்கட்டைகளுக்குதான். ஒரே ஒரு கோடரி அல்லது ரம்பமும் கொஞ்சம் தைரியமும் இருந்தால் போதும், ஒரேநாளில் லட்சாதிபதி, ஏன் ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம். செம்மரக் கடத்தலுக்குக் காரணம் இந்தப் பணத்தாசைதான். ஒரே சமயத்தில் 48 பேர் கைதானதால் விவகாரம், இப்போது பரபரப்பாகி இருக்கிறது. ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சுமார் 15,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனுடன் இதனை ஒப்பிட்டால் இது சாதாரண எண்ணிக்கைதான்'' என அதிர்ச்சி கொடுத்தவர்,``திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சுமார் எட்டு லட்சம் ஏக்கர் வனப்பகுதிகளில் விலையுயர்ந்த செம்மரங்கள் வளர்கின்றன. திருப்பதி சேஷாசலம், ஏர்ப்பேடு பகுதிகளில் விளையும் ஒரே ஒரு மரம், ஒரு கோடி ரூபாய்வரை விலை போகும். இங்கிருந்து மரங்களை வெட்டிக் கடத்த கைதேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இதில், போலீஸாரிடம் சிக்குபவர்கள் பெரும்பாலும் கத்துக்குட்டிகள்தான்.செம்மரக்கடத்தலில் ஈடுபடும் பெரும் புள்ளிகளுக்குத் தரகர்களாக இருப்பவர்கள், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் சாதாரண இளைஞர்கள்தான். இவர்கள் தங்களின் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யவும் டூ வீலருக்கு பெட்ரோல் போடவும் காசில்லாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களை மூளைச் சலவை செய்து மரம்வெட்ட அழைத்துப் போகிறார்கள். இதில், எந்தவித அனுபவமும் இல்லாமல் மரம் வெட்ட வந்து சிக்கிக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்..செம்மரக் கடத்தல்காரர்களைக் கைது செய்து சிறை தண்டனை மட்டுமே வழங்கிவந்த போலீஸ், என்கவுன்டர் வரை போனதுகூட அவர்களின் அட்டூழியத்தால்தான். வனத்துறை அதிகாரிகளான கருணாகர், ஸ்ரீதர், டேவிட் ஆகிய மூவர் கொல்லப்பட்டதுதான் பிரதான காரணம். அதனாலேயே 2013ல் சேஷாசலம் வனப்பகுதியில் திருவண்ணாமலை, வேலூரைச் சேர்ந்த 15 பேர் ஒரேநேரத்தில் என்கவுன்டர் செய்யப்பட்டார்கள். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒருமுறை கடத்தல்காரர்களிடமிருந்து இருபதாயிரம் டன் செம்மரங்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ஐம்பதாயிரம் கோடி. அதுவே உலக சந்தையில் இரண்டு லட்சம் கோடிக்கு மேல் போகும். அதனால், கடத்தலைத் தடுக்க சிறப்பு படைகள் அமைத்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார், அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதனால் கோபம் கொண்ட கடத்தல்காரர்கள் திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு வந்த நாயுடுவை காரோடு கொல்ல சதித்திட்டம் தீட்டி குண்டு வைத்தனர். ஆனால், அவர் அதிலிருந்து தப்பித்தார். அதன்பிறகுதான் போலீஸார் செம்மரக் கடத்தல்காரர்களிடம் கொடூர முகத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள்” என்றார். “சில ஆண்டுகளுக்கு முன் சீனாவைச் சேர்ந்த லின் வின் பின் என்பவன், சேஷாசலம் வனப்பகுதியில் பிடிபட்டான். அப்போது அவன் வெட்டியதாக 45 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களைக் கைப்பற்றினர். அவனது பாஸ்போர்ட், விசாவை ஆராய்ந்ததில், தொழில் வளர்ச்சிக்காக இந்தியா வந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.ஒருவேளை, மரங்களை வெட்ட புதிய தொழில்நுட்ப பிளேடுகள் அல்லது கருவிகளைத் தயாரிப்பதில் பரிசோதனை செய்துபார்க்க அவன் வந்திருக்கலாம். அப்படியொரு கருவி மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், ஆந்திரச் செம்மர வனங்கள் வெகுசீக்கிரமே அழிந்துவிடும்” என்று பீதியை கிளப்புகிறார், திருப்பதி வன அதிகாரி ஒருவர்.தமிழர்கள் கைதாவது குறித்து, வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமியிடம் பேசியபோது, ``ஆடம்பரமான வாழ்க்கை. சொகுசான வாகனங்கள். தேவையான போதை, விருப்பமான மகிழ்ச்சி என்று எல்லாவகையிலும் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்கள். விளக்கில் விழும் விட்டில்களைப் போல மரம்வெட்ட செல்கிறார்கள். அவர்கள்தான் கைது வலையிலும் சிக்கிக் கொள்கிறார்கள்.இதைத் தடுக்க, எல்லா கிராமங்களிலும் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த ஆலோசித்து வருகிறோம். கூடவே, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.சீக்கிரம் நடைமுறைப்படுத்துங்க சார்! - அன்புவேலாயுதம்