-ஆர்.விவேக் ஆனந்தன் நூற்றாண்டைக் கடந்த பள்ளியின் எழுச்சி...எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால் அந்த இறைவன் இருக்கும் இடம் கோயில்தானே? படித்து முடித்து பெரிய பதவியில் இருக்கும் எத்தனை மாணவர்கள் அப்படி நினைக்கிறார்கள்? இதோ ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மனமுவந்து தாராள நிதியை அள்ளித்தர, புத்தம் புது கோயிலாக ஒரு பள்ளி எழும்பி வருவதுதான் ஆச்சரியம் கலந்த வியப்பு..மயிலாடுதுறையில் உள்ள டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப் பள்ளியின் வயது 123. இதுதான் மாவட்டத்திற்கு பெருமை என்றாலும் கட்டிடம் நீண்டகாலமாக பொலிவிழந்து காணப்பட்டது. இதை சரி செய்ய நினைத்தன சில நல்ல உள்ளங்கள்... இதையடுத்து, உலகெங்கிலும் உள்ள இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து நிதி திரட்டும் பணியில் பள்ளியின் முன்னாள், இந்நாள் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் ஈடுபட்டார்கள்.பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் பத்மநாபன், இந்நாள் தலைமையாசிரியர் காஞ்சிநாதன் ஆகியோர் அந்த மகிழ்வான செய்தியை நம்முடன் பகிர்ந்துகொண்டனர். “1901ம் வருடம் இந்தப் பள்ளி ஓட்டுக் கட்டிடமாக தொடங்கப்பட்டபோது 500 மாணவர்களாக இருந்து இப்போது 2,200 மாணவர்கள் படிக்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. பழைய பள்ளிக் கட்டிடம் இடிந்துவிடும் நிலையில் இருந்ததால் பள்ளியின் செயலர் விஜயகுமார் தலைமையில் 15 கோடி ரூபாயில் புதிய கட்டிடம் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.2021 ஜனவரி 25ம் தேதி புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. நிர்வாகத்தில் இருந்த குறைந்தபட்ச தொகையைக் கொண்டு கட்டிடப் பணி துவக்கப்பட்டது. இந்நிலையில்தான் நாங்களே எதிர்பாராத சூழலில் கட்டிடம் கட்டப்படும் தகவல் அறிந்த முன்னாள் மாணவர்கள் சிலர் அவர்களாகவே விரும்பி வந்து 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை நன்கொடையாக கொடுக்க ஆரம்பித்தனர்.தொடர்ந்து பெங்களூரு மற்றும் சென்னையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தினோம். அப்போது நிறைய பேர் போட்டி போட்டுக்கொண்டு நிதி உதவி செய்ய முன்வந்தனர். எங்கள் முன்னாள் மாணவர்களில் சென்னை போலீஸில் உதவி கமிஷனர்கள் இருவர், துணை கமிஷனர் ஒருவர், டாக்டர்கள் என இருக்கிறார்கள்..அதோடு சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ததன் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிதி வந்துகொண்டே இருக்கிறது. ஊடகத் துறையில் உள்ள முன்னாள் மாணவர் ஒருவர், தனது பங்களிப்புடன், மற்றவர்களின் பங்களிப்பிற்காக தன்னால் இயன்ற மற்ற ஊடக உதவிகளையும் செய்துவருகிறார். முன்னாள் மாணவர் ஒருவர்தான் பள்ளி கட்டுமானத்தை கட்டுகிறார். பள்ளி அறைக்கு பணம் கொடுப்பவர்கள் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களின் பெயரை சூட்டிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளோம். இதில் சில மாணவர்கள் தங்கள் பங்களிப்பில் கட்டப்படும் அறைக்கு தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களின் பெயரையே சிபாரிசு செய்திருப்பது ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறது. இதனை வெறும் கட்டிடமாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. புனிதமான கோயிலாக நினைத்துதான் கட்டுகிறோம்” என்றவர்கள், சில சுவாரஸ்ய சம்பவங்களையும் குறிப்பிட்டனர். “ஒரு முன்னாள் மாணவர் அவராகவே விரும்பி வந்து பள்ளிக் கட்டிடத்திற்குத் தேவையான கதவுகள், ஜன்னல்கள் செய்வதற்காக பல லட்சம் மதிப்பிலான மரங்கள் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இவரது தங்கை ஒருநாள் பள்ளிக்கு வந்தார். நாங்கள் கேட்பதற்கு முன்பே இயல்பாக செக் புத்தகத்தை எடுத்து நாங்கள் எதிர்பார்க்காத ஒரு பெரிய தொகையை பூர்த்தி கொடுத்து எங்களை அசத்தினார்” என்றனர் பெருமையாக. தொடர்ந்தவர்கள், “இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்றை நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும். பள்ளி ஆசிரியர்களும், ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ஆன முன்னாள் ஆசிரியர்களும் கட்டிடப் பணிக்காக 90 லட்ச ரூபாய் கொடுத்து உதவினர் என்பதுதான். ஒரு குறிப்பிட்ட வங்கி 50 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறது. இதுவரை எங்களுக்கு சுமார் 8 கோடி ரூபாய் வரை கிடைத்திருக்கிறது. மீதமுள்ள தொகை விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நிச்சயம் பள்ளி கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் ஒவ்வொரு மாணவர்களின் பெயரைச் சொல்லும். இந்த வருட இறுதிக்குள் கட்டி முடித்துவிடுவோம்” என்றனர் மகிழ்ச்சிக் குரலில்.இதேபோல் அனைவரும் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்யலாமே...!.பாக்ஸ் கலையரங்கம் வந்தாச்சு... காம்பவுண்ட் எப்போது? கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி 1921-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டோடு அப்பள்ளி நூறாண்டு கண்டதை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் முன்னாள் மாணவர்களுக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து, முன்னாள் மாணவர்களான நகர்மன்ற முன்னாள் தலைவர் இலக்குணன், ஓய்வுபெய்ய ஏ.இ.ஓ. அருணாசலம் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒன்றை ஆரம்பித்தனர். இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்க நினைவு வளைவு ஒன்றையும் கலையரங்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்று கூறியதன் பேரில், முன்னாள் மாணவர்கள் பங்களிப்புத் தொகையான 39 லட்சம் ரூபாயுடன் மாநில அரசின் தொகையையும் சேர்த்து 1 கோடியே 20 லட்சம் நிதியில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை சமீபத்தில் அமைச்சர் சி.வி.கணேசனும் முன்னாள் மாணவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியுமான புகழேந்தியும் திறந்து வைத்தனர். அப்போது பேசிய நீதிபதி புகழேந்தி, “நம் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் இல்லாததால் இங்கே கஞ்சா வியாபாரிகள் உள்ளே நுழைந்து விடுகிறார்கள் என்ற தகவல்கள் வருவதாகச் சொன்னார்கள். பெற்றோர்களும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும்” என்று பேசினார். சீக்கிரம் காம்பவுண்ட் சுவர் கட்ட அரசு முன்வரட்டும்.