`நாங்குநேரியைப்போல அடுத்த சம்பவம் அரங்கேறிவிடக் கூடாது' என்ற பதற்றத்தில் கிராம சுவர்களில் சாதி அமைப்புகளின் வண்ணங்களை அழிக்கும் பணியில் போலீஸார் அதிரடி காட்ட, “நல்ல முயற்சிதான், அதேசமயம், வண்ணங்களை மட்டும் அழித்தால் போதாது, மக்களின் எண்ணங்களில் மாற்றம் கொண்டுவர முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்!தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “ஆகஸ்ட் 15ம் தேதியன்று தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மேலாத்தூர் கிராமப் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்துகொண்டார். அதில், `ஊராட்சியில் உள்ள கிராமங்களில் சமுதாயத் தலைவர்களின் பெயர்களைத் தாங்கியிருக்கும் தெருக்களின் பெயர்களை நீக்கிவிட்டு புதிய பெயர் சூட்ட வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை உடனடியாக நிறைவேற்றும்வகையில் பல்வேறு தெருக்களின் பெயர்கள் பொதுப் பெயர்களாக மாற்றப்பட்டன..உதாரணத்துக்கு நாடார் தெரு, தேவர் தெரு என்று சாதிப் பெயர்களில் இருக்கும் தெருக்களின் பெயர்களுக்கு தலைவர்களின் பெயர்களை வைக்க அறிவுறுத்தப்பட்டது. அவை, காமராஜர் தெரு, அம்பேத்கர் தெரு என பெயர் மாற்றப்பட்டன.கலெக்டரை தொடர்ந்து போலீஸ் எஸ்.பி. பாலாஜி சரவணனும் களத்தில் இறங்கினார். கிராமங்களில் சாதி அமைப்புகளின் வண்ணங்களை சுவர்களில் ஓவியமாக வரைந்துள்ளதாக உளவுத்துறை போலீஸார் எஸ்.பி.க்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக, அந்த அடையாளங்களை அழிக்குமாறு மாவட்டம் முழுவதிலும் உள்ள கிராமங்களுக்கு போலீஸ் படையை அனுப்பினார் எஸ்.பி. பாலாஜி சரவணன். சில கிராமங்களில் மக்களே முன்வந்து சாதி அடையாளங்களை அழித்தனர். ஒரு சில நாட்களிலேயே மாவட்டம் முழுவதும் இருந்த சாதி அடையாளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன” என்றனர்..தூத்துக்குடி போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “எஸ்.பி. பாலாஜி சரவணனின் அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 21ம் தேதி 1731 இடங்களில் இருந்த சாதி அடையாளங்கள் போலீஸாரால் அழிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 24ம் தேதி ஒரேநாளில் மட்டும் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம் உள்ளிட்ட 197 இடங்களில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளைநிற பெயிண்டால் சாதி அடையாளங்களை அழித்தனர். இதுவரை, 2519 இடங்களில் இருந்த சாதி அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், சாதி அடையாளம் உள்ள இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்றனர்.கிராம மக்களே முன்வந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து கலெக்டர் செந்தில்ராஜிடம் கேட்டோம். “சுதந்திர தினத்தன்று மேலாத்தூர் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அந்தப் பஞ்சாயத்தில் இருக்கும் தெருக்களின் பெயர்களில் இருக்கும் சாதி அடையாளங்களை அழித்தோம். இது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது..இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி, மாவட்டத்தில் இருக்கும் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் சாதிப் பெயர்களில் இருக்கும் தெருக்களின் பெயர்களை மாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்புடன் இது செய்து முடிக்கப்படும்” என்றார் உறுதியாக.மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாலாஜி சரவணனிடம் பேசியபோது, “கடந்த ஒரு வருடமாக, ‘மாற்றத்தைத் தேடி’ என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், கிராமம் கிராமமாக சென்று மக்களிடம், `மது அருந்த மாட்டேன்', `குற்ற வழக்குகளில் சிக்கமாட்டேன்’ என்று உறுதிமொழியை எடுத்துவருகிறோம். இதுவரை 3,500 கூட்டங்களை நடத்தியதில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் உறுதிமொழி எடுத்துள்ளனர். இந்தப் பணி தொடரும்” என்றார், உற்சாகத்துடன்..``அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பலன் தருமா?" என மக்கள் மேம்பாட்டு கழகத்தின் அமைப்பாளர் வக்கீல் அதிசயகுமாரிடம் கேட்டோம். “இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதி அடையாளங்களை அழிப்பதால் சாதி வன்மம் ஒழிந்துவிடும் என்பது தவறான பார்வை.அதிகாரிகள் சொல்வதால் இப்போது அழிப்பார்கள். ஆனால், மீண்டும் மீண்டும் எழுதும் நிலைதான் ஏற்படும். சாதி வன்மம் அழிய வேண்டும் என்றால் பள்ளிக்கூடத்தில் இருந்தே மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களின் மனதை மாற்ற வேண்டும். அதன்மூலம், சாதி கட்டமைப்பை உடைக்க வேண்டும்..சுவரில் உள்ள சாதி அடையாளங்களையும் தெருப் பெயர்களையும் அழித்துவிட்டால் மக்கள் மனதில் உள்ள சாதி வன்மம் அழிந்துவிடுமா? எனவே, அதிகாரிகளின் அதிரடி முயற்சிகள் சாதியை ஒழிக்க கைகொடுக்கப் போவதில்லை. அன்புதான் கைகொடுக்கும். அதைப் பள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும்” என்றார்.மாற்ற வேண்டியது வண்ணங்களை மட்டுமல்ல… எண்ணங்களையும்தான்! - எஸ்.அண்ணாதுரை