விக்ரமாதித்யன்-வேதாளம் கதைபோல கோடநாட்டை முன்வைத்து நடக்கும் சர்ச்சைகள் ஓயாதுபோல. `கொலை, கொள்ளை நடந்தது பணத்துக்காக அல்ல, கனகராஜின் மரணமும் விபத்து அல்ல' எனக் குற்றம்சாட்டப்பட்ட தரப்பு கொளுத்திப் போட, மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறது, கோடநாடு.சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘நாங்கள் ஆட்சியில் அமர்ந்த அடுத்த நிமிடமே கோடநாடு வழக்கின் உண்மைக் குற்றவாளி எந்தக் கொம்பனாக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்’ என முழங்கினார், ஸ்டாலின். ஆனால், ஆட்சியில் அமர்ந்து இரண்டு வருடங்களான பிறகும். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.`கோடநாடு வழக்கை வைத்து எடப்பாடி பழனிசாமியின் அரசியலுக்கு தி.மு.க. அணை கட்டும்' என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் பழனிசாமியோ ‘அரசியல் எழுச்சி மாநாடு’ நடத்திவிட்டு, அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறார். இந்தசூழலில், கோடநாடு வழக்கில் அதிரடி திருப்பமாக, குற்றம் சுமத்தப்பட்ட தரப்பின் வழக்கறிஞர்களில் ஒருவரான விஜயன், சில முக்கிய விவகாரங்களை குமுதம் ரிப்போர்ட்டரிடம் பகிர்ந்துகொண்டார்.ஊட்டியில் அவரை சந்தித்தோம். “சம்பவம் நடந்தது முன்னாள் முதல்வர் ஒருவரின் பங்களாவில். அதனால் அத்தனை உண்மைகளும் பின்னணி நபர்களும் பொதுமக்களின்முன் பட்டியலிடப்பட வேண்டியது அவசியம். முதலில் ஒரு அடிப்படை உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும்..அதாவது, கோடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளை நடைபெற்றது பணத்துக்காக அல்ல. பல முக்கியமான ஆவணங்களையும் சி.டி.க்கள், பென் டிரைவ்ஸ் போன்றவற்றைத்தான் அங்கிருந்து எடுத்துள்ளனர்.இதை, அ.தி.மு.க. ஆட்சியின்போது ‘கோடநாடு குற்றவாளிகள்’ என்று முத்திரையிடப்பட்ட நபர்கள், ஊடக புலனாய்வுகளில் இருந்தும் ஆதாரங்களுடன் தந்திருக்கும் தகவலின் அடிப்படையிலேயே சொல்கிறேன். பங்களாவில் திருடப்பட்டது காண்டாமிருக பொம்மையையும் வாட்ச்களையும் போலீஸார் காட்டியது, கரடிவிடும் வேலையே தவிர வேறில்லை” என்றவரை இடைமறித்து, ``அப்படியானால் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்தது என்ன?'' எனக் கேட்டோம்.”ஜெயலலிதாவின் ஆளுமைத்திறனை தேசம் அறியும். அரசியல் அனுபவம் வாய்ந்த ஆண்களையும் தனது விரல் அசைவின்கீழ் வைத்திருந்தார். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஜெயலலிதா கைப்பட எழுதி வாங்கி வைத்திருந்த ஆவணங்கள்தான் அவை.அதாவது, அன்றைய அ.தி.மு.க.வின் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருந்தவர்களின் சொத்து விவரங்கள், அவர்களின் குடும்ப நபர்கள் மற்றும் பினாமிகளின் விவரங்கள், அவர்களின் பெயரில் உள்ள சொத்து விவரங்கள் போன்றவை அந்த ஆவணங்களில் துல்லியமாக இருந்திருக்கின்றன.இதுபோக, மேற்படி முக்கிய புள்ளிகள் செய்த தவறுகள், அவர்களின் பலவீனங்கள், அவர்கள் மீதான வழக்குகள் பற்றிய விவரங்கள், அவர்கள் செய்த தவறுகள் என்று சகலமும் விவரிக்கப்பட்ட ஆவணங்களும் ஒப்புதல் வாக்குமூலமாக தயாரிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கையெழுத்தும் போட்டு தந்திருந்தனர்.அ.தி.மு.க.வில் ஜெயலலிதா, சசிகலாவைத் தவிர மற்றபடி கோலோச்சிய அத்தனை நபர்களின் முழு ஜாதகமும் அந்த ஆவணங்களில் இருந்துள்ளன. இதுபோக, அத்தனை பேரும் தங்களின் அமைச்சர், எம்.எல்.ஏ., மாநில நிர்வாகிகள், எம்.பி. போன்ற பதவிகளை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்ட, ஆனால் தேதியிடப்படாத கடிதங்களும் அதில் இருந்துள்ளன. இந்த ஆயுதங்களை வைத்துக்கொண்டுதான் ஜெயலலிதா அத்தனை பேரையும் தன் ஆளுகையில் வைத்திருந்திருக்கிறார்..தலைமையின் சொல்லை மீறி நடந்தால் சம்பந்தப்பட்ட நபரின் சொத்து விவரங்கள் லீக் செய்யப்படுவதோடு, ராஜினாமா கடிதமும் வெளியாகும். இதுதான் அந்த ஆயுதங்களின் பிரயோகம். இதற்குப் பயந்துதான் தலைமையின் வார்த்தைகளுக்கு அவர்கள் பணிந்திருக்கிறார்கள். அதேவேளையில், `எழுதித் தரமாட்டோம்' என்று சொல்லியிருந்தால் எந்த பதவியும் அவர்களுக்குக் கிடைத்திருக்காது என்பதும் உண்மை.அந்த ஆவணங்களில் உள்ள உண்மைகளை வெளியிட்டால் அ.தி.மு.க.வில் கோலோச்சிய, கோலோச்சுகிற சில நபர்களின் அரசியல் வாழ்க்கையையே முடித்துகட்டிவிடும். இப்பேர்ப்பட்ட ஆவணங்களை கைப்பற்றத்தான் அந்தக் கொள்ளை நடந்திருக்கிறது. உள்ளபடியே கனகராஜை தவிர வேறு யாருக்கும் ஜெயலலிதாவின் பங்களாவில்தான் கொள்ளை அடிக்கப்போகிறோம், ஆவணங்களை எடுக்கப்போகிறோம் என்று தெரிந்திருக்கவில்லை.‘ஒரு எம்.எல்.ஏ. வீட்ல பணம் அடிக்கப்போறோம்’ என்று சொல்லித்தான் கனகராஜ் இவர்களை கூட்டிச் சென்றிருக்கிறார். பங்களா வாசலில் காவலாளி முழு விசுவாசத்துடன் எதிர்ப்புக் காட்ட, அந்தக் கொலையும் நடந்திருக்கிறது. ஜெயலலிதாவின் அறைகளை உடைத்து உள்ளேசென்று, அலமாரி போன்ற அமைப்பை உடைத்து உள்ளே இருந்த மேற்சொன்ன ஆவணங்களைக் கைப்பற்றி, அள்ளியிருக்கிறார்கள். பிறகு வெளியே வந்து வாகனங்களில் ஏறி தப்பியிருக்கிறார்கள்..கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஒரு செட் ஆவணங்களை ஈரோடு மாவட்டம் பெருந்துறையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு நபரிடம் கொடுத்துவிட்டே சேலம் நோக்கிச் சென்றிருக்கிறார் கனகராஜ். எனவே, பெருந்துறை பகுதியில் அ.தி.மு.க. புள்ளிகளுக்கு நெருக்கமான நபர்கள் யார் இருக்கிறார்கள்? என்று கவனிப்பதும் அவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டிய பொறுப்பும் சி.பி.சி.ஐ.டி.க்கு இருக்கிறது.கோடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட அதிமுக்கிய ஆவணங்கள் அனைத்தும் இப்போது யார் யார் கைகளில் எங்கெங்கு இருக்கின்றன என்று கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பும் காவல்துறைக்கு இருக்கிறது.அதேபோல், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சுட்டிக் காட்டப்படும் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் அகால மரணம் அடைந்ததும் விபத்தால் அல்ல, அது விபத்துபோல் நடத்தப்பட்ட கொலை என்றே வலுவாக சந்தேகிக்கிறேன். காரணம், கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களில் என்ன இருந்தது? அது யார் கைக்கு மாறியுள்ளது என்பன உள்ளிட்ட எல்லா விவரங்களும் தெரிந்த ஒரே நபர் கனகராஜ் மட்டும்தான்.மேலும், ஆவணங்களை கொள்ளையடிக்கச் சொல்லி தன்னை ஏவிய மிக முக்கிய நபர் யாரென்றும் கனகராஜுக்கு தெரியும். எனவே, `கனகராஜை விட்டுவைத்தால் அது தனக்கு ஆபத்து' என்று முடிவு செய்தே, அவரின் கதையை முடித்திருக்கிறார்களோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது. சயனின் கார் விபத்துக்குள்ளானதையும் இந்தரீதியிலேயே சந்தேகிக்கிறேன். உண்மைகள் ஒன்றுவிடாமல் வெளியே இழுக்கப்படும் வரையில் எங்கள் சட்டப் போராட்டம் ஓயப் போவதில்லை” என்றார் உறுதியாக..``ஆவணங்களுக்காக நடந்த கொள்ளை இது எனக் கூறப்படுவது சரியா?'' என ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பெங்களூரு புகழேந்தியிடம் கேட்டபோது, “அப்படி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சகல ஜாதகமும் உள்ள ஆவணங்களை வைத்துக் கொண்டுதான் இப்பவும் நிர்வாகிகளை மிரட்டி தன்னோட கைக்குள்ளே சிலர் வைத்திருக்கிறார்கள். அதை வைத்துத்தான் கட்சியையே நடத்துகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. இதையெல்லாம் தி.மு.க. அரசு நினைத்தால் கண்டுபிடிக்கலாம். ஆனால், ஏன் இவ்வளவு அலட்சியமாக இதை டீல் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. நாங்கள் போராட்டமும் நடத்திப் பார்த்துவிட்டோம்” என்கிறார்.``இதெல்லாம் உண்மையா?'' என அ.தி.மு.க மாஜி அமைச்சரும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமாரிடம் கேட்டோம். “கோடநாடு சம்பவத்தை வைத்து எவ்வளவோ கதைகள், சித்தரிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. ஆவணங்கள், ஆதாரங்கள் என என்னன்னவோ சொல்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்கிறேன். சம்பவம் நடந்ததுமே அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறைக்கு முழு அதிகாரம் கொடுத்து களமிறக்கி குற்றவாளிகளை கைதுசெய்து, சிறையில் அடைத்தார்.தன்னுடைய சட்ட கடமையை மிகச் சரியாக செய்தார். ஆனால் தி.மு.க.வோ, இந்த வழக்கை அரசியல்ரீதியாக கையாண்டு எங்களைப் பழிவாங்க முயற்சிக்கிறது. ஆனால், முழு உண்மையும் எங்களிடம் இருக்கையில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. இந்த வழக்கில் என்னென்ன ஜோடனைகளை தி.மு.க. உருவாக்கினாலும் அதை சட்டரீதியாக அடித்து தகர்க்க தயாராகவே இருக்கிறோம்” என்றார்.கோடநாட்டை முன்வைத்து இன்னும் என்னென்ன கிளம்பப் போகிறதோ? - எஸ்.ஷக்தி .பாக்ஸ்:ஒருபக்கம் ஆசை... மறுபக்கம் மிரட்டல்!கோடநாடு வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலை 2021 அக்டோபரில் போலீஸ் கைது செய்தது. அதில், ஜாமின் பெற்று வெளியில் வந்தவரை நிலமோசடி வழக்கில் கைது செய்தது போலீஸ். என்ன நடந்தது? என்று தனபால் தரப்பைக் கேட்டபோது, ‘‘சிறைக்குள்ளே தனபாலுக்கு பயங்கர நெருக்கடி. கோடநாடு விஷயத்தில் உண்மையை சொன்னால் உனக்கு நல்லது நடக்கும்’ என ஆசைகாட்டி, அப்ரூவராக்க முயற்சி பண்ணியிருக்காங்க. அதேவேளையில, எதிர்தரப்பில இருந்து கொலை மிரட்டல் வருது. மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்ததால், நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கு. சிகிச்சைக்காக ஜி.ஹெச். கொண்டு வந்தப்ப, ‘முதல்வரே காப்பாத்துங்க’ன்னு கத்தினார்” என்றார். ஆளும்தரப்பிடம் இருந்து சிக்னல் கிடைத்தால் சில ரகசியங்களை சொல்லவும் தனபால் தயாராகிவிடுவதாகவும் சொல்கின்றனர்.- கே.பழனிவேல்