‘`அமலாக்கத் துறையின் நெருக்கடிகளைக்கூட அசால்ட்டாக சமாளித்துவிடலாம்' என நொந்துபோகும் அளவுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு புதுத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது, லேட்டஸ்ட் ஆடியோ ஒன்று. திருச்செந்தூர் தொகுதியில் 24 வருடங்களாக தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அதற்குக் காரணம் அவரது தாராள மனசுதான். அவர் நடத்தும் கபடிப் போட்டி அவ்வளவு பிரமாண்டமாக இருக்கும். அதனால் விளையாட்டு வீரர்களின் ஆதரவும் அவருக்கு அதிகம் இருந்தது.ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அவரது செயல்பாடுகள் அனைத்தும் மந்தநிலையிலேயே இருக்கிறது. கட்சிக்காரர்களாலும் அவரைச் சந்திக்க முடியவில்லை. குறைகளையும் சொல்ல முடியவில்லை. போனில்கூட அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம், உமரி சங்கர் என்று விரலை சுட்டுகிறார்கள் உடன்பிறப்புகள். அதனை வி.பி.ஆர்.சுரேஷ் என்பவரின் ஆடியோ உறுதிப்படுத்தி இருக்கிறது.வி.பி.ஆர்.சுரேஷ் பேசிய ஆடியோவில் என்ன இருக்கிறது?`அ.தி.மு.க.வில் இருந்த என்னை தி.மு.க.வுக்கு அழைத்தவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அவருடன் நிழலாக இருந்து வருபவர் உமரி சங்கர். அவருக்கும் நமக்கும் சரிப்பட்டு வருமா? என்று அப்போதே தோன்றியது.அன்று நான் என்ன நினைத்தேனோ, அதுதான் இப்போது நடக்குது. எனது சொந்த ஊரான குலையன்கரிசலில் உள்ள குளத்தில் கரிசல் மற்றும் மணல் எடுக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் குளத்தில் எடுக்கும் கரிசல் மண்ணை விவசாய பயன்பாட்டுக்காக விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கணும். அதைச் செய்யவில்லை. மாறாக, மணல் எடுத்து விற்பனை செய்கிறார்கள்..மணல் எடுப்பவர்களிடம் உமரி சங்கர், அமைச்சரின் பெயரைச் சொல்லி மாமூல் வாங்குகிறார். அதைக் கேட்டதற்கு அமைச்சர் வீட்டில் வைத்து என்னை பிச்சைக்காரன் என்கிறார். உமரிசங்கரால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். என் குடும்பம் மோசடி, சீட்டிங் குடும்பம் கிடையாது. ஆனால், மோசடி சீட்டிங் செய்யும் நபரிடம் அமர்ந்து பஞ்சாயத்து பேசுகிறார் அமைச்சர்.அமைச்சர் பின்னால் இருப்பதால் அவமானம்தான் ஏற்படுகிறது. அமைச்சரைச் சுற்றி தவறு நடக்கிறது. எல்லாம் தெரிந்தும் அமைச்சர் அமைதியாக இருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்கூட எங்க ஊர் குளத்தில் மண் எடுக்கும்போது யாரும் கமிஷன் வாங்கவில்லை. ஆனால் தி.மு.க.வில் அதை எதிர்பார்க்க முடியவில்லை.இதற்கு மேலும் அமைச்சர் அமைதியாக இருந்தால் எனக்கு ஏற்பட்ட அவமானம் அவருக்கும் ஏற்படும். உமரி சங்கரால் அமைச்சர் அனிதா அண்ணாச்சி பூஜ்யமாகிக் கொண்டிருக்கிறார். சங்கரை அவர் ஹீரோவாக நினைப்பதுதான் அதற்குக் காரணம். சங்கர் நல்லவர் இல்லை என்பதை அமைச்சர் விரைவில் தெரிந்துகொள்வார். என்னை அவமதித்தவர்கள் யாரும் நிம்மதியா இருக்க முடியாது' எனக் குமுறியிருக்கிறார் சுரேஷ்.``இந்தளவுக்கு கோபம் வர என்ன காரணம்?'' வி.பி.ஆர்.சுரேஷிடம் கேட்டோம். “நான் அ.தி.மு.க.வில் 13 வருடங்கள், ஒன்றிய செயலாளராக இருந்துள்ளேன். 10 வருடம் யூனியன் சேர்மனாக இருந்துள்ளேன். அம்மா மறைந்த பிறகு மன உளைச்சலில் இருந்தேன். அதனால், தி.மு.க.வில் இணைந்தேன். அமைச்சர் நல்ல மனிதர். ஆனால், அவரை உமரி சங்கர் போன்றோர் தவறாய் வழிநடத்துகிறார்கள்..எங்கள் ஊரில் உள்ள குளத்தில் எப்போது மண் எடுத்தாலும் எங்கள் ஊர் விவசாய சங்கத்துக்கு பணம் கொடுப்பார்கள். ஆனால், இந்தமுறை விவசாய சங்கத்துக்கு பணம் கிடைக்கவில்லை. உமரி சங்கர் கமிஷன் வாங்கி விட்டதுதான் அதற்குக் காரணம். அதை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு போனேன். `உங்கள் பெயரைச் சொல்லி பணம் வசூல் நடக்கிறது. அதைத் தடுக்க வேண்டும்' என்றேன்.இதற்காக, உமரி சங்கர் தேவை இல்லாமல் என்னிடம் தகராறு செய்தார். என்னை `பிச்சைக்காரன்' என்றார். சங்கரைப் பொருத்தவரை யாரும் அமைச்சருடன் இருக்கக் கூடாது. என்னைப் போலவே எல்லோரையும் அவமானப்படுத்தி வருகிறார். இதை அமைச்சர் உணர்ந்தால் அவருக்கு நல்லது.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை வைத்து உமரி சங்கர் மட்டுமே கொழிக்கிறார். அமைச்சரை வைத்து அவரது மனைவியை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் ஆக்கிவிட்டார். அவரும், நெல்லை நாடார் சங்கத்தில் இயக்குநர் மற்றும் நாடார் சங்கப் பள்ளி ஒன்றின் தாளாளர் ஆகிவிட்டார். கட்சிக்காரர்கள் அனைவரும் அமைச்சரிடம் இருந்து ரொம்ப தூரத்திலேயே இருக்கிறார்கள்” என்கிறார் ஆதங்கத்துடன்.ஆடியோ குறித்து தி.மு.க. வர்த்தக அணியின் மாநில துணை அமைப்பாளர் உமரி சங்கரின் கருத்தறிய பலமுறை தொடர்புகொண்டும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. அவரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கும் தகவல் அனுப்பினோம். அதற்கும் பதில் இல்லை.உமரி சங்கர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “ நான் கட்சிக்காரர்களிடம் இருந்து விலகியிருப்பதாகக் கூறுவது தவறான தகவல். அதேபோல், தொகுதியில் நலத்திட்டங்களை குறைத்துக்கொண்டார் என்பதும் தவறான தகவல். நான் எப்போதும் போலவே இருக்கிறேன். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. வி.பி.ஆர். சுரேஷின் ஆடியோ விவகாரத்தைப் பொருத்தவரை அது அவருக்கும் உமரி சங்கருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னை.நானும்கூட அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தேன். குளங்களில் தூர்வாரும் பணி செய்யும்போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே என் விருப்பம். கட்சிக்குள் இரண்டு நிர்வாகிகள் சண்டை போட்டால் அவர்களை சமாதானம் செய்யத்தானே என்னால் முடியும்?” என்றார்.உடன்பிறப்புகள் என்றாலே உரசல் இருக்கத்தானே செய்யும்? - எஸ்.அண்ணாதுரை