-கோ.கிருஷ்ணாதி.மு.க.வில் இளைஞர் அணிக்கு இருக்கும் மரியாதை வேறு எந்தக் கட்சியிலும் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், அதன் செயலாளராக இருந்தவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். இப்போது இருப்பவர் உதயநிதி. ஆனால், சமீபத்தில் அந்த இளைஞரணிக்கு அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனத்தில் ஏகப்பட்ட அதிருப்திக் குரல்கள் எழும்ப, கலகலத்துக் கிடக்கிறது கட்சி..சமீபத்தில் தர்மபுரி தி.மு.க. எம்.பி. செந்தில்குமார், தனது ட்விட்டர் பதிவில், ‘தர்மபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களைவிட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தர்மபுரி இளைஞர் அணிக்குப் போட்டியிட்டு பதவி கிடைக்காத உடன்பிறப்பு ஒருவர் நம்மிடம், “தர்மபுரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஸ்வரன் முன்னாள் எம்.பி. சேகரின் மகன் ஆவார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் எம்.ஜி.சேகர் தி.மு.க.வில் சேர்ந்தார். கட்சியில் அறிமுகமே இல்லாத இவரின் மகனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மாவட்ட துணை அமைப்பாளராக தேர்வான அசோக் குமார், கட்சி உறுப்பினரே இல்லை. அவரின் தந்தை சமீபத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தி.மு.க.வுக்கு வந்தார்.தர்மபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவகுரு கட்சியில் உறுப்பினர் இல்லை. உதயநிதி ரசிகர் மன்ற ஒன்றியச் செயலாளராக இருந்த இவர், பணபலம், சாதி பலத்தை வைத்து மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவியை வாங்கியுள்ளார்.துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாசரும் கட்சி அடிப்படை உறுப்பினர்கூட இல்லை. தங்கச்செழியன், அரூர் உதயநிதி ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளராக இருந்தவர். இவரும் மாவட்ட செயலாளரும் ஒரே சமூகம் என்பதால் துணை அமைப்பாளர் பதவி பெற்றுள்ளார். ஹரிபிரசாத் கட்சிக்கு அறிமுகம் இல்லாதவர். கட்சிக்கு உழைப்பவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கிறார்கள்” என்றார் கோபமாக.பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர், “இளைஞரணி துணை அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்த நான் நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையிலும் கட்சிப் பணியின் மூலமே தேர்வு செய்யப்படும் என்றார்கள். பட்டியல் வந்த பிறகுதான் தெரியுது. நேர்காணல் எல்லாம் ஒரு கண்துடைப்பு என்று” என்றார் ஆதங்கத்துடன்!.பாக்ஸ்ஆக்டிவ் இல்லாத ஐ.டி.விங்தி.மு.க. ஐ.டி. விங்கும் சரியான செயல்பாட்டில் இல்லை என்ற புகைச்சல் எழுந்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் நிர்வாகி ஒருவர், “நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனின் பணிச்சுமையை காரணம் காட்டி அவரிடம் இருந்த ஐ.டி. விங்க், எம்.எல்.ஏ.வாக இருந்த டி.ஆர்.பி.ராஜாவிடம் வழங்கப்பட்டது. தி.மு.க. மீதும் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி மீதும் கடுமையான விமர்சனங்களை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பரப்பிவருகின்றன. இதற்கு கடும் பதிலடி கொடுக்க எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் அளவுக்கு செயல்படாமல் தி.மு.க ஐ.டி விங் சுணக்கமாகவே இருக்கிறது. அமைச்சர் பொறுப்பில் உள்ள டி.ஆர்.பி.ராஜாவால் ஐ.டி. விங்கை சரிவர கவனிக்க முடியவில்லையோ எனத் தோன்றுகிறது” என்றார்.இதுபற்றி தி.மு.க. ஐ.டி. விங்க் ஆலோசகர் மனுஷ்யபுத்திரனிடம் கேட்டால் “வாரம் ஒருமுறை ஐ.டி. விங்க் நிர்வாகிகளுடன் டி.ஆர்.பி.ராஜா ஆலோசனை மேற்கொள்கிறார். உரிய அறிவுரைகளையும் வழங்குகிறார். சிலர் பரப்பும் அவதூறுகளில் துளியளவும் உண்மை கிடையாது” என்றார்.பார்ப்போம்!- பாபு