Reporter
ரவுடிகளின் கூடாரமா தஞ்சை பா.ஜ.க?
``ரவுடிப் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதே?'' என்றோம். `` மாவட்ட துணைத் தலைவர் வேதா என்பவரின் பெயரும்தான் ரவுடிப் பட்டியலில் இருக்கிறது. அவரை மட்டும் ஏன் புறக்கணிப்பதில்லை? நான் கட்சிக்கு வந்த பின்னர் என் மீது எத்தனை வழக்குகள் உள்ளன? இப்போது போடப்பட்ட வழக்கும் பொய் வழக்குதான். அதுவும் சம்பந்தப்பட்ட நபர் என் மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை.