`நிலவில் விக்ரம் லேண்டரை இறக்கியதே அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள்தான்' என நாடே பெருமைப்பட்டுக் கொண்டிருக்க, `அரசு கோட்டாவில் சேர்ந்தால் இதுதான் கதி' என தனியார் கல்லூரிகளில் நடக்கும் அவலம் குறித்து வெளியான ஓர் ஆடியோ, கோவையின் லேட்டஸ்ட் ஷாக். இந்திய அளவில் புகழ்பெற்றது, கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி. அந்தக் கல்லூரி குறித்து கடந்த சில நாட்களாக வைரலாகி வரும் ஓர் ஆடியோவை நம் கவனத்துக்குக் கொண்டுவந்தார், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை கிழக்கு மண்டலத் தலைவர் மூர்த்தி. “சிறப்பான மதிப்பெண்ணைப் பெறும் மாணவர்கள், அரசுக் கல்லூரிகளில் மட்டுமில்லாது, தனியார் கல்லூரிகளிலும் மெரிட் அடிப்படையில சேர்ந்துக்கறாங்க. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில்தான் இந்த மாணவர்கள் படிக்கறாங்க. இவங்களை, ‘எய்டட் மாணவர்கள்’னு நிர்வாகம் அழைக்குது. அதேவேளையில், மதிப்பெண் குறைவாக வாங்கிய மாணவர்களோ பணத்தைக் கட்டி சுயநிதி வகுப்புகளில் சேர்த்துக்கறாங்க. இவங்களை ‘செல்ஃப் ஃபைனான்ஸ் மாணவர்கள்’னு சொல்றாங்க. தனியார் கல்லூரி நிர்வாகங்களைப் பொறுத்தவரையில் தங்களுக்கு பணத்தை அள்ளிக் கொட்டுற சுயநிதிப் பிரிவு மாணவ, மாணவிகள்தான் செல்லப்பிள்ளைகள். அரசு கட்டணத்தில் படிக்கிறவங்களை அநாதை இல்லப் பிள்ளைகள் மாதிரி பாகுபாடு பார்க்கிறாங்க. அவங்களை பாரபட்சமா நடத்துறாங்க. இந்தப்போக்கு பெரும்பாலான தனியார் கல்லூரிகள்ல இருக்குது. சமீபகாலமா அரசுக் கட்டணத்தில் படிக்கும் பிள்ளைகளிடம் இருந்து நிறையப் புகார்கள் வருது'' என்றவர், கல்லூரிகளில் நடக்கும் பாரபட்சம் குறித்து விவரித்தார்..“சுயநிதி பிரிவுல சேர்ந்த மாணவ, மாணவிகளுக்குத் தரமான பேராசிரியர்கள் மூலமாக தரமான படிப்பைக் கொடுக்காறங்க. அரசு கோட்டாவில் சேரும் பிள்ளைகளுக்கு அனுபவம் குறைவான, ஆளுமை இல்லாத பேராசிரியர்களா அனுப்புறாங்க. ரெண்டு தரப்புக்கும் பல கல்லூரிகளில் தனித்தனி வகுப்பறைகளே இருக்குறதுதான் கொடுமை. சுயநிதிப் பிரிவுகளுக்கான வகுப்புகள் ஸ்மார்ட் அறைகளாகவும் அரசு கோட்டா மாணவர்களுக்கான வகுப்புகள் சாதாரணமாகவும் சில கல்லூரிகளில் இருக்குது. சுயநிதிப் பிரிவு மாணவர்களுக்காக செமினார், ஆளுமைகளைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக சொல்கிறார்கள். இதில் கலந்துகொள்ள அரசு கோட்டா மாணவர்களுக்கு அழைப்பு வருவதில்லை. திருச்சியில ஒரு தனியார் கல்லூரியில இப்படியொரு செமினார் கிளாஸை சுயநிதி மாணவர்களுக்கு எடுத்துட்டு இருந்திருக்காங்க. அங்க வந்த அரசு கோட்டா மாணவர்களை வழிமறிச்சு, ‘ரயில்ல ஜெனரல் கம்பார்ட்மென்ட்ல உட்கார்ந்துட்டு போற டிக்கெட்டை வெச்சுக்கிட்டு ஏ.சி கூபேல படுத்துட்டு போக ஆசைப்பட்டா எப்படி? வெளிய போங்க. இப்ப செமினார் எடுக்குற நபருக்கு ஒருநாள் ரெமுனரேஷனே ஒரு லட்ச ரூபாய். நீங்க மூணு வருஷமும் சேர்த்தே இவ்ளோ ஃபீஸ் கட்டமாட்டீங்க’ன்னு சொல்லி அசிங்கப்படுத்தியிருக்காங்க. இப்ப கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் ஒருத்தரும் இந்த விவகாரத்தை மையப்படுத்தி பேசித்தான் ஆடியோ வெளியிட்டிருக்கார். அதுல, `சுயநிதிப் பிரிவு வகுப்புகள் தினமும் ஒழுங்கா நடக்குது, கரெக்டா பாடங்களை நடத்தி முடிச்சு, படிக்க வெச்சுடுறாங்க. ஆனால், எய்டட் பிரிவுகள்ல தினமும் முழுமையான நேரம் வகுப்புகள் நடக்குறதில்லை. ரோட்ல போற வர்றவங்களை கூப்பிட்டு ப்ரொஃபஸர் ஆக்கிடுவாங்கபோல. அந்த லட்சணத்துல இருக்குது நம்ம மேனேஜ்மென்ட்'ன்னு ஓப்பனா சொல்லியிருக்கார். இதன் மூலமா, அரசு கோட்டாவுல படிக்கிற மாணவர்களோட பிரச்னையை புரிஞ்சுக்கலாம். பி.எஸ்.ஜி. கல்லூரி ஒரு சாம்பிள்தான். உண்மையில் தமிழகம் முழுக்கவே 90 சதவிகித தனியார் கல்லூரிகளில் இந்த பாரபட்சம்தான் நடக்குது..மெரிட்ல சீட் வாங்கி வந்து கல்லூரி படிப்பில் சாதிச்சு, வாழ்க்கையில பெரிய உச்சத்தைத் தொடத் துடிக்கிற பிள்ளைகளின் கனவை கருக்கும் செயல். அதனால, அரசு உடனடியாக தலையிட்டு இதனை சரிசெய்யணும். நாங்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் முயற்சியில் இருக்கிறோம்” என்றார். ஆடியோ தொடர்பாக கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பிருந்தாவை சந்தித்தோம். “எங்கள் கல்லூரியைப் பற்றிய மிகவும் பொய்யான வதந்தி இது. கல்வி, ஒழுக்கம், தனித்திறமை உருவாக்கம், கேம்பஸ் இன்டர்வியூ என எல்லாவற்றிலுமே டாப்ரேங்கிங்கில் இருக்கிறோம். இந்தநிலையில், யாருடைய தூண்டுதலின் பேரிலோ இந்த மாணவர் இப்படி உண்மைக்கு மாறாக பேசியிருக்கிறார். எய்டட் பிரிவு மாணவ, மாணவியரை மட்டுமல்ல சுயநிதிப் பிரிவுக்கும் மெரிட்லதான் ஸ்டூடண்ட்ஸை தேர்வு பண்றோம். அட்மிஷன் லிஸ்ட்டை வெச்சு நீங்களே இதைத் தெரிஞ்சுக்கலாம். எங்களுக்குப் பணம் முக்கியமல்ல, குவாலிட்டிதான் பிரதானம். எங்கள் கல்லூரியில் எய்டட் மற்றும் சுயநிதிப் பிரிவு மாணவர்களுக்கு இடையில் துளியளவும் பாரபரட்சம் காட்டுவதில்லை. எல்லோரையும் ஒரே நேர்கோட்டில்தான் வைத்திருக்கிறோம்'' என்றவர், ``அரசு கோட்டா மாணவர்களுக்கு மிகத் தரமான பேராசிரியர்களை நியமித்து வகுப்புகளை நடத்துகிறோம். சொல்லப்போனால், எங்க கல்லூரியில் படித்த எய்டட் பிரிவு மாணவர்கள் மிகப்பெரிய சாதனைகளைச் செய்து வருகின்றனர். அவர்கள் மிக உயர்ந்த பதவிகளையும் அடைந்துள்ளனர். இதற்கு ஆயிரம் ஆயிரம் உதாரணங்களைக் காட்டமுடியும்” என்றார் உறுதியான குரலில். ஆடியோவை ஆராய வேண்டியது அரசின் கடமை. - எஸ்.ஷக்தி