‘நான் உடுப்பியில் பணியாற்றியபோது குரான் மற்றும் ஹதீஸ்களை படித்துள்ளேன். எனக்கு கர்நாடகாவில் நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்’ என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பெருமைப்பட, `இன்னொரு திராவிட கட்சிபோல பா.ஜ.க.வை மாற்றி வருகிறார்' எனக் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறது, கமலாலயம்.``அண்ணாமலை பேசியதில் என்ன தவறு?'' என பா.ஜ.க.வின் சீனியர் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``அடிப்படையில் ‘இந்துத்துவம்’ என்பது இந்து மதம் மட்டுமே உயர்ந்தது என்று சொல்லும் கொள்கை கிடையாது. மாறாக, அனைத்துதரப்பு மக்களையும் சமமாக மதித்து அவர்களுடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துவதே ‘இந்துத்துவம்’.ஆனால், தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றால், மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக்கள் மீது மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஒன்றல்ல.. இரண்டல்ல.. கடந்த 50 ஆண்டுகாலமாக இந்து மதம் மட்டுமே தி.மு.க முதலான திராவிடக் கட்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகி வந்துள்ளது.1980ம் ஆண்டுகளில் கன்னியாகுமரியிலும் 1990ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் பிற மதவாதிகளால் இந்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அதேநேரம், தமிழகத்தில் பா.ஜ.க என்றால் என்னவென்றே தெரியாத காலத்திலிருந்து பலரும் களப்பணியாற்றி வருகிறோம். அன்று முதல் இந்துக்களுக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்த்தப்படும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் ஒரே கட்சியாக பா.ஜ.க இருந்து வருகிறது.இதற்கு முன்பு பா.ஜ.க.வின் தலைவர்களாகவும் கட்சியின் சீனியர்களாகவும் இருந்த எல்.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்ற தலைவர்களும் இந்துக்களுக்கு பிரச்னை ஏற்படும்போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்துள்ளனர்.பா.ஜ.க தலைவராக தமிழிசை சௌந்தராஜன் இருந்தபோதும் சரி, எல்.முருகன் இருந்தபோதும் சரி.. நிலைமை அப்படியே தொடர்ந்தது. குறிப்பாக, கந்தசஷ்டி கவசம் அவமானப்படுத்தப்பட்டபோது, எல்.முருகன் தொடங்கிய ‘வேல் யாத்திரை’ தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அதன்பிறகுதான் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டார். தனக்கு முன்னால் இருந்த தலைவர்களின் பணியை இவர் தொடருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது'' எனக் குமுறியவர்,``இந்தியாவின் கோவில் மாநிலம் என்று போற்றப்படுகிறது, தமிழகம். அந்தளவுக்கு பழைமையான கோவில்கள் இங்கே நிறைந்து காணப்படுகின்றன. ஆனால், இந்தக் கோவில்கள் எல்லாம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறது. இதுபற்றி பலவிதமான தரவுகள் கொடுக்கப்பட்டும் அண்ணாமலை, ஒரு வார்த்தைகூட பேசவில்லை.தொடர்ந்து, மெட்ரோ பணிகள் என்ற பெயரில் விருகம்பாக்கம் காளியம்மன் கோயிலை இடிக்க கார்ப்பரேஷன் நோட்டீஸ் அனுப்பியது, துலசபுரம் கோயில் கர்பக விநாயகர் கோயில் சமூக விரோதிகளால் அடித்து நொறுக்கப்பட்டது, சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் இடிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்து அமைப்புகள் மட்டுமே குரல் கொடுத்தன. அண்ணாமலையிடமிருந்து எந்த எதிர்வினையும் கிளம்பவில்லை.அடுத்து, சாதி சண்டைகளை ஊக்கப்படுத்தி மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில், குளித்தலை கோயில்கள் மூடப்பட்டுவிட்டன. அதற்கும் அண்ணாமலை குரல் கொடுக்கவில்லை. இப்படி இந்துக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் பிற திராவிடக் கட்சிகளைப் போலவே பா.ஜ.க.வையும் நடத்தி வருகிறார் அண்ணாமலை.அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக பிரதமர் மோடி இருந்தாலும், அவர் தனது மதத்தை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்ததும் இல்லை. சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலில் ஈடுபட்டதும் இல்லை. அவருடைய கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையோ, தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயத்துக்குச் சென்று மேரியை வணங்குகிறார். அவர் நடத்தும் பாதயாத்திரையில் இஸ்லாமியர்களிடம் இருந்து குரானைப் பெற்றுக்கொள்கிறார். அதையும் கண்ணில் ஒற்றிக் கொள்கிறார்.அடுத்ததாக, கிறிஸ்துவர்களை சந்திக்கும்போது அவர்களிடமிருந்து பயபக்தியுடன் பைபிள் பெற்றுக்கொள்கிறார். இஃப்தார் நோன்பில் கலந்துகொண்டு கஞ்சி குடிக்கிறார். ஆனால், மதுரை மீனாட்சி கோயிலுக்கோ, வேறு பெரிய ஆன்மிக தலங்களுக்கோ அவர் சென்றதாகத் தெரியவில்லை. இஸ்லாமிய, கிறிஸ்துவர்களை அண்ணாமலை அரவணைத்துச் செல்வது பிரச்னையல்ல. ஆனால், அப்படி அரவணைத்துச் சென்றால்தான் பா.ஜ.க ஒரு மதச்சார்பற்ற கட்சி என்று தமிழக மக்களுக்கு புரியும் என்று தவறாக நினைக்கிறார்.அரவக்குறிச்சியில் அண்ணாமலை போட்டியிட்டபோது, இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியில் அவருக்கு கிடைத்த ஓட்டு ஒன்றுதான். எப்படியும் கிறிஸ்துவ, இஸ்லாமிய ஓட்டு அந்தந்த மதத் தலைவர்களின் ஆணைப்படி தி.மு.க.வுக்குத்தான் செல்லும். அப்படியென்றால் ஓரளவு திரட்டப்பட்டுள்ள இந்து வாக்குவங்கியை இன்னும் பலப்படுத்தி பா.ஜ.க பக்கம் திருப்புவதுதானே புத்திசாலித்தனம்?'' என்றார் வேதனையுடன்.அண்ணாமலையின் பாதயாத்திரை கிளப்பும் சர்ச்சை தொடர்பாக, பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``பா.ஜ.க என்பது ஒரு குறிப்பிட்ட மதத்துக்கான கட்சி என்று யாராவது கருதினால் அது தவறு. பா.ஜ.க என்பது இந்தியர்கள் அனைவருக்குமான கட்சி. சிறுபான்மை மக்களின் ஓட்டுகளுக்காக, பெரும்பான்மை மக்களை தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வஞ்சித்து வருகின்றன. அவர்கள்தான் மதவாதக் கட்சிகள். அதனை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பணியைத்தான் அண்ணாமலை செய்து வருகிறார். அண்ணாமலை இந்து மதத்துக்கு மட்டுமே ஆதரவாக பேச வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறு’’ என்றார்.இது புது வகையான ஆட்டமா இருக்கே? -அபிநவ்