`அமலாக்கத்துறை சீசன் 2' என டைட்டில் ஷோ நடத்தும் அளவுக்கு அடுத்த இன்னிங்ஸை ஈ.டி ஆடத் தொடங்கியிருப்பது, அறிவாலயத்தின் பல்ஸை எகிறவைத்திருக்கிறது. தி.மு.க.வின் வேகத்துக்கு பிரேக் போடவே, மணல் குவாரிகளை தோண்டுவதாக வெளியான தகவல்களால், திகிலில் உறைந்துள்ளனர், சீனியர் அமைச்சர்கள் சிலர்.மணல் கொள்ளையைத் தடுத்ததற்காக கடந்த ஏப்ரல் மாதம் தனது அலுவலகத்தில் வைத்தே கொல்லப்பட்டார், தூத்துக்குடி, முறப்பநாடு வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ். மணல் கொள்ளை, குவாரி முறைகேடு ஆகியவற்றைத் தடுக்கும் அதிகாரிகளை மிரட்டுவது, கொல்வது போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதை மத்திய அரசும் தீவிரமாக கண்காணித்து வந்தது. அதன் ஓர் அங்கமாக, மணல் குவாரிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதலீடும் இருப்பதாக அமலாக்கத்துறைக்கு சந்தேகம் வலுத்தது. அதன் நீட்சியாக கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்..அதிலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் குவாரிகளில் கோலோச்சும் கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நுழைந்ததை தி.மு.க.வினர் எதிர்பார்க்கவில்லை. புதுக்கோட்டையில் ராமச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், ராமச்சந்திரனின் உறவினர் வீரப்பனிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திண்டுக்கல்லில் ரத்தினத்தின் வீடு, ரத்தினத்தின் நெருங்கிய உறவினரான கரிகாலனுக்குச் சொந்தமான புதுக்கோட்டை வீடு உள்பட பல இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நீடித்தது.ரெய்டுக்கான பின்னணி குறித்து அமலாக்கத்துறை வட்டாரத்தில் பேசினோம்… “மணல் குவாரிகளில் செந்தில் பாலாஜி தரப்பு முதலீடு செய்ததற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை கண்டெடுத்தது. இதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் முழுவதும் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகிய மூன்று பேரின் பிடியில்தான் இயங்கி வருகின்றன. இந்த மணல் குவாரிகளில் உள்ள பொக்லைன் இயந்திரம், ஜே.சி.பி இயந்திரம், லாரி உள்ளிட்டவற்றை புதிதாக கொள்முதல் செய்தது தொடர்பான நூற்றுக்கணக்கான துண்டுச் சீட்டுக்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. அனைத்து குவாரிகளிலும் இதேபோல் வாங்கப்பட்டுள்ளது..`இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் பணம் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்' என்பதுதான் அமலாக்கத்துறையின் சந்தேகம். அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் மணல் சப்ளை தொடர்பான துண்டுச் சீட்டுகளை அமலாக்கத்துறை கண்டறிந்தது.அந்த துண்டுச் சீட்டுகளில் கேரளம், கர்நாடகா, ஆந்திரா என குறிப்பிட்டு 121, 124 என எழுதப்பட்டிருந்தது. இந்தக் குறியீடுகளைக் கொண்ட துண்டுச் சீட்டை மாநில எல்லையில் உள்ள டோல்கேட்டில் கொடுத்தால் கனிம லாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்படும். இந்த துண்டு சீட்டுகளின் பெயரை ’இல்லிஸ் சீட்’ என்பார்கள். இப்படி நூற்றுக்கணக்கில் கிடைத்த துண்டுச்சீட்டுகளை வைத்தே அமலாக்கத்துறை சோதனைக்குத் தயாரானது. இதற்கு டெல்லியில் இருந்து சிக்னல் கிடைத்ததும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாள்களில் சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன” என்கின்றனர்.அதேநேரம், `மணல் குவாரிகளை குறிவைத்ததற்குக் காரணமே, அமைச்சர் துரைமுருகனை சிக்க வைக்கத்தான்' என்றொரு தகவலும் வலம் வருகிறது. இதுகுறித்து தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “தமிழகத்தில் மணல் குவாரிகளை பொறுத்தவரை முக்கிய நபர் கரிகாலன்தான். திண்டுக்கல் ரத்தினத்தின் அக்கா மகன்தான் இந்த கரிகாலன். இவருக்கும் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கும் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன..சென்னை தி.நகரில் ஒரு கிளப் ஒன்று உள்ளது. இந்த கிளப் கரிகாலன் தரப்புக்கு வேண்டப்பட்டது என்கிறார்கள். இந்தக் கிளப்பில் அரசு அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம், சரக்கு சாப்பிடலாம். தவிர, `தி.மு.க. குடும்ப உறுப்பினருக்கு நெருக்கம்' எனக் கூறியே அனைத்து காரியங்களையும் கரிகாலன் சாதித்து வந்துள்ளார். கனிமவளத் துறையை கையில் வைத்திருக்கும் துரைமுருகனுக்கு இரண்டுமுறை இதய பிரச்னை வந்து, சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இதனால் அவருக்கு, பத்திய சாப்பாடுதான் கொடுக்கப்படுகிறது. இதனை அறிந்த கரிகாலன், துரைமுருகனுக்கு ருசியான உணவுகளை வாங்கிக் கொடுத்து தன்பக்கம் வைத்துக் கொண்டார். இதனையறிந்த குடும்பத்தினர், `வீட்டுப் பக்கமே வரக்கூடாது' என கரிகாலனுக்குத் தடை போட்டனர்” என்கிறார்..அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை விவரிக்கும் உள்விவரம் அறிந்த முக்கிய புள்ளி ஒருவர், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் தி.மு.க.வின் வேகத்துக்குத் தடைபோடும்விதமாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியுள்ளது. `மணல் வருவாயை வைத்து செலவு செய்துவிடலாம்' என அறிவாலயம் போட்டு வைத்திருந்த திட்டத்துக்கு எண்ட் கார்டு போட்டிருக்கிறது, அமலாக்கத்துறை” என்றார்.ரெய்டு குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் பேசியபோது, “அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டு குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்று மட்டும் பதில் அளித்தார்.ஈ.டி ரெய்டு இப்போதைக்கு ஓயாதுபோல! - பாபுபடங்கள் : ம.செந்தில்நாதன்