உணவுத்துறையும் சர்ச்சையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்போல. `செறிவூட்டப்பட்ட அரிசி' என ஓராயிரம் முறை விளக்கங்களைக் கொடுத்த பின்னும் அதைப் பற்றிய அச்சம் அகலவில்லை. இப்போது மலைக்கிராம மக்களும் அலறியடித்துக் கொண்டு கிளம்பியிருப்பதுதான், தேனி நிலவரம். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் கடமலை மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில், கடந்தவாரம் வழங்கப்பட்ட ரேசன் அரிசியில் இருந்த வெள்ளை நிற அரிசிகளால் அம்மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. உப்புத்துறை மலைக்கிராமத்தை சேர்ந்த கருப்பையா, ``எங்க மக்கள் ரேசன் அரிசியை நாய், கோழி, மாடுகளுக்கு போடமாட்டார்கள். எங்க தேவைக்கே அது பற்றக்குறையாத்தான் இருக்கும். அப்படிப்பட்ட பகுதியில நாலைஞ்சு நாளா அரிசி போடும்போது, வெள்ளையா பெரிய அரிசியை கலந்திருக்காங்க. அந்த அரிசியை பார்த்தாலே, ஒரிஜினல் அரிசி இல்லன்னு தெரியுது. அதை நாங்க தனியா பிரிச்சு சாப்பிட்டு பார்த்தால், பல்லில் ஒட்டிக்குது. அந்த அரிசியை கழுவினால் மிதக்குது. என்னன்னு கேட்டா, அது மருந்து கலந்த அரிசி, உடம்புக்கு நல்லதுன்னு அதிகாரிகள் சொல்றாங்க” என்றார்..காந்திகிராம் மலைக்கிராமத்தை சேர்ந்த கொடியரசனோ, ``எங்க ரேசன் கார்டுக்கு போதுமான அரிசி கிடைக்கறது இல்ல. இப்ப என்னன்னா, சத்து குறைவுக்கு அரிசி மாதிரியே வடிவமைக்கப்பட்ட மாத்திரை கலந்து கொடுக்கிறோம்னு சொல்றாங்க. ரேசன் கடையில் வாங்கிய அரிசியில் கல் பொறுக்கறதைபோல அந்த வெள்ளை பிளாஸ்டிக் அரிசியை பொறுக்க வேண்டியதா போகுது. மலைக் கிராமங்களில் மட்டும் ஏன் இதைக் கலந்து கொடுக்கனும்? இந்த அரிசியில ஏகப்பட்ட சந்தேகம் வருது" என்றார். அரசின் மாவட்ட உணவுப்பொருள் பாதுகாப்பு கண்காணிப்பு குழு உறுப்பினரான புதுராசாவிடம் பேசியபோது, ``இது பிளாஸ்டிக் அரிசி என்று மக்களிடம் புரளியை கிளப்பிவிட்டுள்ளனர். வைட்டமின் டி மற்றும் பி காம்ப்ளக்ஸ் குறைபாடு உள்ளவர்களுக்காக செறிவூட்டப்பட்டு கொடுக்கப்படுகிறது. இது புரியாமல் அதை ஒதுக்கி எடுத்துவிட்டு சமைக்கிறார்கள்..இந்த அரிசியை முதலில் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை மக்களோடு அமர்ந்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் அச்சத்தைப் போக்க முடியும். இந்த அரிசியால் பலவகையிலும் நன்மைதானே தவிர, எந்தப் பாதிப்பும் வரப் போவதில்லை" என்றார் உறுதியாக. தமிழக அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மேலாளர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ``கோரையூத்து உள்ளிட்ட ரேசன் கடைகளில் வாங்கிய அரிசியை சோதனையிட்டோம். அந்த அரிசியில் கலந்திருப்பது செறிவூட்டப்பட்ட அரிசிதான். அதைப் பற்றி பயப்படத் தேவையில்லை. தற்போது, எல்லா ரேசன் கடைகளிலும் நூறு கிலோவுக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட ரேசன் அரிசி கலக்கப்படுகிறது. இதன் நன்மை குறித்து பொதுமக்களுக்கு புரிய வைக்கும் வேலைகள் தொடங்கியுள்ளன’’ என்றார். புரிய வச்ச பிறகு புழக்கத்துக்குக் கொண்டு வரலாமே? - பொ.அறிவழகன்