அண்ணாமலைக்கு எதிராக ஒரு ட்வீட்டாவது போடாவிட்டால், நடிகர் காயத்ரி ரகுராமுக்கு அன்றைய பொழுதே ஓடாதுபோல. தனக்கு எதிராக சோஷியல் மீடியாக்களில் பதிவிடும் பா.ஜ.க.வினருக்கு எதிராக போலீஸில் புகார் கொடுப்பது, திருப்பதியில் வேண்டுதல் என பிஸியாக இருந்தவரை தேடிப் பிடித்து பேசினோம். அண்ணாமலையின் பாதயாத்திரை பா.ஜ.க.வுக்கு பலன் கொடுக்குமா? அண்ணாமலையின் நடவடிக்கைகளைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழகமே சிரிக்கிறது. அவரின் பாதயாத்திரையால் கட்சிக்கு எந்தப் பலனும் இல்லை. கட்சி, தொண்டர்களின் உழைப்பு, பலமுனைகளில் இருந்து திரட்டப்பட்ட நிதி ஆகியவற்றை வைத்து விளம்பரம் தேடிக்கொள்கிறார். அவர் சென்ற எந்த இடத்திலும் இதுவரை மிகப்பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை என்பது எனக்குக் கிடைத்த தகவல். அண்ணாமலை மீது அப்படியென்ன கோபம்? ‘சர்வாதிகாரம்’என்பது பா.ஜ.க.வில் எப்போதும் கிடையாது. ஆனால், அண்ணாமலை, சர்வாதிகாரம் என்ற பிம்பத்தை பா.ஜ.க.வில் உருவாக்கினார். அவர் பேச்சுக்கும் செயலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. ‘மோடிஜி இப்போதுதான் என் லைனில் வந்தார். இதைச் சொன்னார்’ என சர்வசாதாராணமாகப் பொய்களை அடுக்குவார். பா.ஜ.க மீது இதுவரை பொதுமக்களுக்கு ‘சாஃப்ட் கார்னர்’தான் இருந்தது. ஆனால், இப்போது அது வெறுப்புணர்ச்சியாக மாறியிருக்கிறது. இதற்கு அண்ணாமலைதான் காரணம். `ஆருத்ரா’நிதி நிறுவன விவகாரத்தில் தன் பெயர் தவறாக நுழைக்கப்படுவதாக அமர்பிரசாத் ரெட்டி கூறுகிறாரே? நெருப்பில்லாமல் புகையாது. ‘ஆருத்ரா’ நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்ட பலரில் சிலர் அமர்பிரசாத் ரெட்டியுடன் நெருக்கமாக இருந்ததாக தகவல்கள் வெளியானது. ஏன்? படங்கள்கூட வெளிவந்தது. ‘நான் சுத்தமானவன்’ என அவரே சொன்னால் போதாது. போலீஸ் விசாரணையில் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படவேண்டும். தேர்தல் களத்தில் மோடியை வீழ்த்தும் அளவுக்கு ‘இந்தியா கூட்டணி’ வலுவாக இருக்கிறதா? இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் யாருடனும் கூட்டணி அமைக்கலாம். மோடி வலிமையான தலைவர். அவரை வீழ்த்துவது எளிதான விஷயம் அல்ல. எனவேதான் எதிர்க்கட்சி வரிசையில் 26 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இவர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தல்வரை ஒற்றுமையாக இருப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பா.ஜ.கவில் மீண்டும் நீங்கள் இணையப்போவதாக சொல்லப்படுகிறதே? இப்போதைக்கு இல்லை. இதுதொடர்பாக நான் மேலிடத் தலைவர்களை பார்க்கவுமில்லை, பேசவுமில்லை. சாதாரண மனிதர்களை நோக்கி அரசியல் இருக்கவேண்டும். தொண்டர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும். இதில்தான், தமிழக பா.ஜ.க கவனம் செலுத்தவேண்டும். ஆனால் கமலாலயத்தை காவல்நிலையமாக மாற்றி, அங்கு ரவுடிகளை உட்கார வைத்துக்கொண்டு பஞ்சாயத்து செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. நான் அண்ணாமலைக்கு அடங்கி அரசியல் செய்யவிரும்பவில்லை. எனவே, அவர் இருக்கும்வரை பா.ஜ.கவில் இணைவது குறித்து யோசிக்கமாட்டேன். பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க.வுக்கு திடீர் முக்கியத்துவம் கிடைத்துள்ளதே? தேர்தல் நெருங்கி வருகிறது. அண்ணாமலையின் சாயம் மெல்ல மெல்ல வெளுக்க ஆரம்பித்திருக்கிறது. அண்ணாமலையை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால் கட்சி அடிசறுக்கும், பலத்த சரிவை சந்திக்கும் என்பதை டெல்லி உணர்ந்திருக்கலாம். பா.ஜ.க.வின் பூத் கமிட்டியும் பலப்பட வாய்ப்பு இல்லை. அண்ணாமலையின் நடவடிக்கைகளைப் பிடிக்காத கட்சி நிர்வாகிகள் பலர், தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்குத் தாவிவிட்டனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் உண்மையான பலம் குறித்து மோடி, அமித் ஷாவுக்கு தெரிந்திருக்கும். அதனால்தான், அ.தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க மீண்டும் வலிமை பெறுமா? அதை நான் எப்படிக் கணிக்க முடியும். தனக்கு கிடைத்த முதல்வர் பதவியை அவர் மிகச்சரியாக பயன்படுத்தினார். திறமையாக தக்கவைத்துக்கொண்டார். இப்போது அ.தி.மு.க.வை தன்வசப்படுத்தி இருக்கிறார். அவரது தலைமையில் முதல்முறையாக 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கப்போகிறது, அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் அவரை மக்கள் எப்படி அங்கீகரிக்கபோகிறார்கள் என்பதை பொறுத்துதான் அ.தி.மு.கவின் எதிர்காலத்தைக் கணிக்கமுடியும். தி.மு.க அமைச்சர்களை குறிவைத்து அமலாக்கத்துறை செயல்படுவதாக சொல்லப்படுகிறதே? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடலாமா? அப்படியென்றால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நடந்த ஐ.டி ரெய்டுகளுக்கு யார் காரணம்? முதல்வராக இருந்த கருணாநிதியின் மனைவி தயாளு விசாரிக்கப்பட்டது எதற்காக? 2ஜி முறைகேடு வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சராக இருந்த ராசா, கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்தார்களே? இதற்கு யார் காரணம்? சட்டம் தன் கடமையைச் செய்யும்போது அதற்கு அரசியல் முலாம் பூசக்கூடாது. பா.ஜ.க.வில் இணையாவிட்டால் வேறு கட்சியில் சேருவீர்களா? அரசியலை சேவையாக பார்த்துவருகிறேன். மக்களுக்கான எனது பணி தொடரும். ஒருவரை அசிங்கப்படுத்தி, புண்படுத்தி அரசியல் செய்யமாட்டேன். மக்களுக்கான சேவையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கென்று ஒரு தர்மம் இருக்கிறது. தேர்தல் அரசியலுக்கு வெகுவிரைவில் வருவேன். அப்போது எனக்கு பிடித்தமான கட்சியை தேர்வு செய்வேன். - கணேஷ்குமார் படங்கள்:ம.செந்தில்நாதன்