`இப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமா?' என அதிர்ச்சியூட்டுகிறது, காஞ்சிபுரத்தில் நடந்த சீட்டிங் சம்பவம் ஒன்று. `அமைச்சர் பெரியகருப்பனின் தம்பி நான். கவர்ன்மென்ட் ஜாப் கன்ஃபார்ம்' எனக் கூறி லட்சங்களை சுருட்டிய மோசடிக் கும்பல் ஒன்று, அடுத்து நடத்திய நாடகங்கள்தான் கோட்டையை உலுக்கும் பகீர் டாபிக்.என்ன நடந்தது? என்பதை கண்ணீருடன் விவரித்தார், காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையையைச் சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் யுவராஜ். “நான் வேலை செய்யும் பள்ளியின் டிரஸ்டியாகவும் காமாட்சி அம்மன் கோயில் நிர்வாகியாகவும் இருக்கும் நாராயணன் மூலம் அறிமுகமானவர்தான், ரவிக்குமார். `ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனின் தம்பி' என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ரவிக்குமார், அரசு வேலைக்கு மூன்று லட்ச ரூபாயைக் கேட்டார். நாராயணன் முன்னிலையிலேயே இரண்டு லட்ச ரூபாயை கொடுத்தேன்.சில நாள்கள் கழித்து, ‘அந்த வேலைக்கு நிறையப் பேரு பிரஷர் பண்றாங்க. இதைவிட அதிகமா கொடுக்கிறதா சொல்றாங்க. இன்னும் மூனு லட்ச ரூபாய் கொடுத்தாதான் கன்ஃபார்ம் பண்ண முடியும்’னு சொன்னார். `வேலை கிடைச்சா போதும்'ங்குற யோசனையில மனைவியோட நகையையெல்லாம் அடமானம் வெச்சு, மீண்டும் மூன்று லட்ச ரூபாயை சென்னை வளசரவாக்கத்துக்குச் சென்று கொடுத்தோம். மறுபடியும் நான்கு லட்ச ரூபாய் கேட்டதால ஜி பே, ஃபோன் பே மூலமா அவரின் எண்ணுக்கு அனுப்பினேன்..ஆனாலும், பேராசை அடங்காத ரவிக்குமார், இன்னும் 15 லட்ச ரூபாய் கேட்டார். ‘என்னால அவ்ளோ பணம் எல்லாம் கொடுக்கமுடியாது. ஏற்கனவே, வட்டிக்கு கடன் வாங்கிதான் கொடுத்தேன். கொடுத்த பணத்தை ரிட்டர்ன் பண்ணிடுங்க’ன்னு கோபமா கேட்டேன். ஆனால், வேலையும் வாங்கிக்கொடுக்காம பணத்தையும் திருப்பிக்கொடுக்காம ஏமாற்றிவிட்டார். அவர் வைத்திருக்கும் சம்புரா மெடிக்கல்ஸ் பெயரில் கொடுத்த செக்கும் ரிட்டர்ன் ஆகிடுச்சு.திரும்ப கால் பண்ணினா ரவிக்குமாரே போனை எடுத்துட்டு, `நான் ரவியோட அட்வகேட் பேசுறேன். ரவி இறந்துட்டார், ஜெயிலிலேயே அடிச்சுப் போட்டுட்டாங்க. அவருக்கு காரியமெல்லாம் முடிச்சுட்டாங்க. அட்வகேட் என்கிற முறையில என்கிட்ட செல்போனை கொடுத்து வெச்சிருக்காங்க'ன்னு பொய் சொல்றார்.`அமைச்சர்கிட்ட போயி சொன்னா அவர், ரவிக்குமார் யார்ன்னே தெரியாதுன்னு சொல்லிடுவார். அதனால தன்னை ஒண்ணுமே பண்ணமுடியாது' என்கிற தொனியில் ரவிக்குமார் மிரட்டுகிறார். கூடவே, பிரபல ரவுடி படப்பை குணாவுக்கும் தான் சொந்தக்காரர்னு சொல்லி மிரட்டுகிறார். என்னோட ஒன்பது லட்ச ரூபாய் பணம் போச்சு. கடன் கொடுத்தவங்க என்னை டார்ச்சர் பண்றாங்க. என்ன செய்யறதுண்ணே தெரியலை” என்கிறார், வேதனையுடன்.ரவிக்குமாரோடு ராஜேந்திரன், மணி ஆகியோர் சேர்ந்துகொண்டு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியதாக குற்றம் சுமத்துகிறார், யுவராஜ். அதிலும் ராஜேந்திரன், யுவராஜை தொடர்புகொண்டு பேசும் ஓர் ஆடியோவில், ‘உங்களுக்கு கடலூர் மாவட்டத்தில் போஸ்டிங் போடப்பட்டுள்ளது. ஆனால், காஞ்சிபுரத்தில் சொந்த ஊரில் போஸ்டிங் போடுமாறு ரவிக்குமார் சொல்கிறார். உங்களுக்கு அவர் வேண்டியவரா? ரொம்ப ரெகமெண்ட் பண்றார்' எனக் கேட்டு தத்ரூபமாக ஏமாற்றியுள்ளது, ரவிக்குமார் டீம்..காமாட்சி அம்மன் கோயில் நிர்வாகி நாராயணனிடம் கேட்டபோது, ”ரவிக்குமார் தொடர்ந்து கோயிலுக்கு வருவார். கொரோனா காலக்கட்டத்தில் வேலையில்லாத சூழலால்தான் யுவராஜ் அரசு வேலை கேட்டார். இதனால், யுவராஜுக்கு உதவி செய்யும் நோக்கத்தில்தான் ரவிக்குமாரை அறிமுகப்படுத்தினேன். மற்றபடி, யுவராஜ் ஏமாந்த பணத்தில் ஒரு ரூபாயைக்கூட நான் வாங்கவில்லை” என்றார்.``இதெல்லாம் உண்மையா?" என ரவிக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, முதலில் பணம் வாங்கியதை அறவே மறுத்தார். பின்னர், “பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், தலைமைச்செயலகத்தில் வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார். அமைச்சர் பெரிய கருப்பன் எனக்கு அண்ணன் முறை வரும். போனவாரம்கூட அவரை நேரில் சந்தித்தேன். ஆனால்,, அவர் பெயரைச் சொல்லி நான் யாரையும் ஏமாற்றவில்லை” என்று மறுத்தார்.ஆனால், ரவிக்குமார் ஏமாந்ததாக குறிப்பிடும் ராஜேந்திரனின் செல்ஃபோன் நம்பருக்கு தொடர்புகொண்டபோது அது ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தது. ``ராஜேந்திரன் என்பவர் ரவிக்குமாரின் சீட்டிங் டீமில் வேலை செய்துகொண்டிருப்பவர். அதனால், அவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்துவிட்டேன் என்பதே பொய். இதுபோன்று வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றிய பணத்தில்தான் ரவிக்குமார் மெடிக்கல் கடையே நடத்தி வருகிறார். அவரது மோசடியைக் கண்டுபிடித்து, சட்டத்துக்குப் புறம்பாக சேர்த்த அவரின் சொத்துக்களை முடக்கவேண்டும்” என்கிறார், யுவராஜ்.மோசடிகள் பலவிதம்... அதில் இதுவும் ஒரு ரகம். - மனோ சௌந்தர்