மாநகராட்சிகளிலேயே கரூர் ரொம்பவே ஸ்பெஷல். பொதுவாக, மாமன்றத்தில் எதிர்க்கட்சிகள்தான் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற விதிகளுக்கு மாறாக, ஆளும்கட்சி கூட்டணி கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக வரிந்துகட்டுவதுதான் ஆச்சர்யம். ``என்ன பிரச்னை?'' என கரூர் மாநகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டீபனிடம் பேசினோம். “நகராட்சி தூய்மைப் பணிக்காக 18 பேட்டரி வாகனங்கள் இருக்கின்றன. இந்த 18 வாகனங்களும் பழுதாகிவிட்டதாகக் கூறி அதை சரிசெய்ய முடிவெடுத்துள்ளனர். அந்தவகையில், ஒரு வாகனத்துக்கு ஒரு லட்சத்து சொச்ச ரூபாய் என மொத்தம் 20 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவானதாக தீர்மானம் கொண்டு வந்தார்கள். ‘புதிய பேட்டரி வாகனத்தின் விலையே ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்தான். 35 லட்சத்தில் 18 புதிய வாகனங்களையே வாங்கிவிடலாம். ஆனால், பழுது பார்ப்பதற்கு மட்டும் 20 லட்சத்து 20 ஆயிரம் செலவு என்கிறீர்கள். வேண்டுமானால் பழுதான வாகனங்களை ஏலத்தில் விற்று, அதில் வரும் பணத்தில் 20 லட்சத்தையும் சேர்த்து புதிய வண்டிகளை வாங்கலாம். இதனை சரிசெய்தாலும் மீண்டும் பழுதாகவே வாய்ப்பு அதிகம்’ என்று யோசனையை சொன்னேன். உடனே கோபமான மேயர், ‘தீர்மானம் கொண்டுவந்தது வந்ததுதான். கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது’ என்று சொல்லிவிட்டு, சபையில் இருக்கும் நிருபர்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டார். `கேள்வி கேட்கத்தான் சபைக்கு வருகிறோம், கேள்வி கேட்கக் கூடாது' என்று சொல்வதற்கு இவருக்கு உரிமையில்லை. நானும் ஆளும்கட்சி கூட்டணிதான். ஆனால், ஜனநாயக மரபை மீறி மேயர் செயல்படுகிறார்” என்றார்..அடுத்து, நம்மிடம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் தண்டபாணி, ``ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் செய்வதுதான் மரபு. மொத்தம் 72 தீர்மானங்கள் இருந்தால், சபை தொடங்கியதும், `ஒன்றிலிருந்து 72 தீர்மானமும்' என்று ஒற்றை வரியில் சொல்வார்கள். உடனே, அனைவரும் ஓ.கே. என்று சொல்ல, `72 தீர்மானங்களும் நிறைவேறிவிட்டது' என்று சபையை முடித்துவிடுவார்கள். தூய்மைப் பணிகளைத் தனியாருக்குடெண்டர்விட்டதைப் பற்றி கேள்வி கேட்டேன். ‘கேள்வி கேட்பதாக இருந்தால் முன்னமே என்னிடம் எழுதிக் கொடுத்துவிட்டுக் கேளுங்கள், இப்போது உட்காருங்கள்’ என்றார். ‘மேயரே.. இது ஒன்றும் பஞ்சாயத்து கூட்டமல்ல, மாநகராட்சி மாமன்றக் கூட்டம். தவறு இருக்கிறது என்று கேள்வி கேட்டால் பதில் சொல்லுங்கள். மக்கள் நம்மை நம்பித்தான் இந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள்’ என்று சொன்னேன். மேயர் அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. ‘என்ன.. எப்ப பாத்தாலும் கேள்வி கேட்டுக்கிட்டு.. கேள்வி கேட்கத்தான் சபைக்கு வர்றீங்களா? உட்காருங்க’ என்று எரிச்சலாய் சொன்னார். ஹிட்லர்போல சபையை நடத்துகிறார். கரூர் மாநகராட்சியில் ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது” என்று கொதித்தார். ஆளும்கட்சி கூட்டணிதான் இப்படியென்றால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இதே நிலைதான். அக்கட்சியின் கவுன்சிலர் சுரேஷிடம் பேசினோம். “என் வார்டில் முட்களை அகற்றியதாக ஒரு லட்சம் செலவு என்று தீர்மானம் வைத்திருந்தார்கள். `என் வார்டில் எனக்குத் தெரியாமல் எந்த இடத்தில் முட்செடிகளை அகற்றினீர்கள்? அகற்றாத முட்செடிக்கு ஒரு லட்சமா? மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்காதீர்கள்’ என்றேன். உடனே தி.மு.க கவுன்சிலர் சக்திவேல் என்னை அடிக்கப் பாய்ந்தார். இதை மேயர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். `சபையில் கேள்வி கேட்கக் கூடாது' என்கிறார். ‘கேள்வி கேட்கக் கூடாது என்று ஜி.ஓ இருந்தால் காட்டுங்கள், அப்படி இருந்தால் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொண்டு வருகிறேன்’ என்றேன். `தான் வைத்ததே சட்டம்' என மேயர் செயல்படுகிறார்” என்றார் கோபமாக..“ஏன் இப்படி?” என்று மேயர் கவிதாவிடம் கேட்டோம். “தீர்மானங்கள் உள்ள அஜண்டா ஃபைலை அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பித்தான் கூட்டம் நடத்துகிறோம். ஒவ்வொரு தீர்மானத்தையும் தனித்தனியாக வாசிக்க நேரமிருக்காது. தீர்மானத்தில் சந்தேகம் இருந்தால் முதலிலேயே என்னிடம் எழுத்துபூர்வமாக கடிதம் கொடுக்க வேண்டும். `இடையில் கேள்வி கேட்கக் கூடாது' என்று சொல்லியுள்ளேன். நிருபர்களை அனுமதிக்கும்போது, சிலர் விளம்பரத்துக்காக கூச்சல் போடுவது, தேவையில்லாத விஷயங்களைப் பேசுவது என செயல்பட்டார்கள். நிருபர்களும் இதைப் படமெடுக்க அங்கும் இங்கும் ஓடுகிறார்கள். அதனால், அவர்களை வெளியேறச் சொன்னேன். `அ.தி.மு.க உறுப்பினர் சுரேஷை தாக்கச் சென்றது தவறு' என தி.மு.க கவுன்சிலர் சக்திவேலுவை கண்டித்துள்ளேன்'' என்றவர், பேட்டரி வாகன விவகாரம் குறித்து விவரித்தார். ``ஒரு வாகனத்தைப் புதிதாக வாங்கினால் குறிப்பிட்ட வருடத்துக்கு ஓட்டவேண்டும் என்கிற அரசு விதி இருக்கிறது. இடையில் பழுதானால் பழுது மட்டுமே பார்க்க வேண்டும். அதனால் பழைய வாகனத்தையே 20 லட்சம் ரூபாயில் சரிசெய்கிறோம். இதில் ஊழலோ.. முறைகேடோ இல்லை. நான் மிகவும் ஜாலியான டைப். என்னைப் போய் கோபக்காரர், டென்ஷன் மேயர் என்று சொல்வதெல்லாம் தவறு. நான் என் பணியை சரியாக செய்கிறேன். குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்” என்றார் இயல்பாக. குறைகள் இல்லாவிட்டால் குற்றம் ஏன் சுமத்த வேண்டும்? - அரவிந்த்