வாண்டட்டாக வாயைக் கொடுத்து, வம்பை வாங்கிக்கொள்வதில் ஹெச்.ராஜாவுக்கு நிகரில்லை. சமீபத்தில் அவர் மீதான 11 வழக்குகளில் ஏழு வழக்குகளை தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட சட்ட ஆலோசனையில் ஈடுபட்டிருந்தவரிடம், கேள்விகளை அடுக்கினோம். உங்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதே? “அதாவது, `விசாரணை செய்ய வேண்டும்' என்றுதான் உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறதே தவிர, `ஹெச்.ராஜா குற்றவாளி' என்று சொல்லவில்லை. என் வழக்கறிஞர்கள் குழு சட்டரீதியான ஆலோசித்து வழக்குகளை சட்டரீதியாகவே எதிர்கொள்ளும்.” திடீரென விலையை 200 ரூபாயை மத்திய அரசு குறைத்ததற்கு தேர்தல் பயம்தானே காரணம்? “யார் அப்படிச் சொன்னது? விலைவாசியைக் கட்டுப்படுத்த பா.ஜ.க அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. 400 நாட்களுக்கு முன்பே பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு குறைத்துவிட்டது. அதன்பிறகு தற்போதுவரை பெட்ரோல், டீசல் விலையை ஏற்றவில்லை. தற்போது பொருளாதாரம் மேலும் சீரடைந்துள்ளது. அதனால், கேஸ் விலையை குறைத்துள்ளனர். இது ஒரு தொடர் நிர்வாக சீர்திருத்தமே தவிர, தேர்தல் வித்தை அல்ல.” அரசியல் காரணங்களுக்காகவே செந்தில் பாலாஜியை பா.ஜ.க. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுகிறதே? “டாஸ்மாக்கில் குவார்ட்டருக்கு 10 ரூபாய் கமிஷன் அடித்தது நிஜம்தான்' என்று தற்போதைய டாஸ்மாக் அமைச்சர் முத்துசாமியே ஒப்புக்கொண்டுள்ளார். `செந்தில் பாலாஜி ஊழல் செய்தார்' என்பதற்கு கான்கிரீட்டாக ஆதாரம் உள்ளது. அப்படியிருக்கும்போது, திரும்பத் திரும்ப இது அரசியல் பழிவாங்கல் என்று பினாத்துவது வெட்டி அரசியல். முன்பு ஒருமுறை, `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார்' என்று ஸ்டாலின் சொன்னார். சொன்னது போலவே தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றுவிட்டார்.” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ரவியை விமர்சித்திருப்பது சரியா? “தி.மு.க.வினரின் பேச்சுகள் எப்படிப்பட்டவை என்பதற்கு உதயநிதியும் விதிவிலக்கு அல்ல. ஆர்.என்.ரவி ஐ.பி.எஸ். பாஸ் செய்துவிட்டு, தேசிய துணைப் பாதுகாப்பு ஆலோசகராகப் பணிபுரிந்தவர். தி.மு.க அமைச்சர்களால் ஐ.பி.எஸ் தேர்வு எழுதி பாஸ் செய்து காட்ட முடியுமா? 1967-ல், `ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி நிச்சயம்' என்றார்கள். 2006-ம் ஆண்டு, `நிலமில்லாத ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும்' என்றார்கள். அதையெல்லாம் செய்துகொடுத்தார்களா? தற்போது அவர்களிடம் வாக்குறுதி வழங்க எதுவும் இல்லை. அதனால்தான் ‘நீட்’டை பிடித்துக்கொண்டு நீட்டி முழக்கி வருகின்றனர்.” வயதில் மூத்தவரான ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது சரியா? “சமீபத்தில்தான் ஒரு பாதிரியார் முன்பு, வளைந்து நெளிந்து உதயநிதி ஸ்டாலின் ஆசிவாங்கும் படம் ஒன்றைப் பார்த்தேன். அது மட்டும் சரியா? அது சரி, என்றால் ரஜினி செய்ததும் சரி. ரஜினி செய்தது தவறு என்றால் உதயநிதி செய்ததும் தவறு. பாரம்பரியமாகவே நமது ஆதீனங்கள், மடங்களின் அதிபதிகளுக்கு மரியாதை அளிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால். இந்த நாட்டின் பாரம்பரியத்தை மறந்துவிட்டு கிறிஸ்துவ பாதிரியாரின் காலில் விழுந்தால் ஏற்றுக்கொள்வதும் இந்து சந்யாசி காலில் விழுந்தால் சர்ச்சையைக் கிளப்புவதும் திராவிடக் கட்சிகளின் வழக்கம்.” `காங்கிரஸை கழற்றிவிட்டால், தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கத் தயார்' என்கிறாரே சீமான். இது பா.ஜ.க.வின் அஜெண்டாவா? “இது தவறான பார்வை. இத்தனை ஆண்டுகாலம் தனித்துப் போட்டியிட்டு வந்தவர் சீமான். சுமார் 6 சதவிகித வாக்குகள் அவரிடம் உள்ளன. இந்தநேரத்தில் அவர் தி.மு.க.விடம், `வெறும் 3 சதவிகித வாக்குகள் மட்டுமே உள்ள காங்கிரஸை கழட்டிவிடுங்கள்' என்று கூறுகிறார். இதன்மூலம், `அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கு தி.மு.க கூட்டணியில் சீட் கிடைக்குமா?' என்று காய்போட்டு பார்க்கிறார் சீமான். ஒருவேளை, அப்படி நடந்தால் அது பா.ஜ.க.வுக்கு எதிராகவே இருக்கும். பிறகு எப்படி சீமானை பா.ஜ.க.வின் பி டீம் என்று சொல்ல முடியும்?” `பிப்ரவரி மாதம் தி.மு.க ஆட்சி கலைக்கப்படும்' என்கிறாரே பா.ஜ.க.வின் கே.பி.ராமலிங்கம்? அவர் ரொம்ப தள்ளிச் சொல்கிறார் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணையை நடத்தி வருகிறது. அந்தப் பட்டியலில் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இணைந்துள்ளனர். தவிர, உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் எதிர்காலத்தில் இலாகா இல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அந்த அர்த்தத்தில் கே.பி.ராமலிங்கம் கூறியிருக்கலாம். அதேநேரம், எந்த மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சியைக் கலைத்தது கிடையாது.” `இந்தியா' கூட்டணி வலுப்பெற்று வருகிறதா? ”ம்க்கும், ஏற்கெனவே 2024 தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகிவிட்டன. ஒரு கருத்துக்கணிப்பில் பா.ஜ.க 288 முதல் 300 சீட்டுகள் ஜெயிக்கும் என்றும், இன்னொரு கருத்துக்கணிப்பில் 320 முதல் 360 வரை பா.ஜ.க ஜெயிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது எங்கே இருக்கிறது இந்தியா கூட்டணி?” - அபிநவ் படங்கள் : ம.செந்தில்நாதன்