“மேட்டர் வெரி சீரியஸ்...விரைந்து செயல்படுங்கள்!’’ என்று சொல்லி துரித நெருப்பைப் பற்றவைத்த டி.சி., அதே வேகத்தில் தன் தலைமையை அழைத்து விஷயத்தைச் சொன்னார். டி.சி. சொன்னதைக் கேட்டதும் தலைமையும் பதறினார். என்றாலும் அதை வெளிக்காட்டாமல், முழு விவரத்தையும் கேட்டுக்கொண்டு, முதல்வரைச் சந்திக்க தலைமைச் செயலகத்திற்கு விரைந்தார். தலைமைச் செயலகத்தில், மருத்துவச் செயலாளர், சட்டத்துறைச் செயலர், அரசு வக்கில், இலாகா அமைச்சர்கள், முதல்வரின் தனிச்செயலர், தலைமைச் செயலர் என்று எல்லோரும் முதல்வர் முன் கூடி இருந்தனர். நீட் இல்லாமல் கிராமப்புற மாணவர்களைமருத்துவக் கல்லூரியில் எப்படிச் சேர்ப்பது என்பதுகுறித்து ஆலோசனை செய்துகொண்டிருந்தார், முதல்வர். ஆளுக்கு ஒரு யோசனை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவசரமும் பதற்றமுமாக உள்ளே நுழைந்த காவல் தலைமை, குறிப்பு ஒன்றை எழுதி, முதல்வரின் தனிச்செயலரிடம் கொடுத்தார். அவர் அதை முதல்வரிடம் கொடுக்க, வாங்கிப் படித்த முதல்வரின் முகத்தில் கேள்விக்குறி தோன்றியது. நெற்றி சுருங்க, புருவங்கள் விரிய கூர்ந்து பார்த்தவர், உடனடியாகத் தன் பிரத்யேக அறைக்குச் சென்றார். அறைக்குள் நுழைந்ததும் பின்தொடர்ந்து வந்த காவல்தலைமையை ஏற இறங்கப் பார்த்தார். “இதை ஏன் எனக்கு முன்பே சொல்லவில்லை.? எதுவாக இருந்தாலும் உடனடியாக எனக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தும், இதை எப்படி விட்டீர்கள், அலட்சியமா அல்லது பொறுப்பின்மையா? இது அரசியல்ரீதியாக என்னென்ன பாதிப்புகளைக் கொண்டுவரும் தெரியுமா? விஷயத்தின் சீரியஸ் உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன்!” முதல்வரின் வார்த்தைகள் கடுமையாக வந்து விழுந்தன. குறுக்கே பேசாமல் அமைதியாக நின்ற காவல் தலைமை, முதல்வர் பேசி முடித்ததும்,“ ஐயா மன்னிக்கவும். கீழ்மட்டத்தில் உள்ள யாரோ நேரடியாக அங்கே தகவல் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது... அது தவறுதான் என்றாலும் ஒருவகையில் நல்லதே நடந்திருக்கிறது. சரியான நேரத்தல் நாம் தகவல் அனுப்பியதாக நம்மை அவர்கள் பாராட்டவே செய்தார்கள். எனவே இது பிரச்னையை உண்டுபண்ணாது!” என்று மென்மையாகச் சொன்னவர், நடந்ததை முழுக்கச் சொன்னார். அனைத்தையும் கேட்டதும் கொஞ்சம் கூலானார், முதல்வர்.“ சரி, இனிமேல் நடக்கும் நிகழ்வுளை ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு அப்டேட் செய்யுங்கள்!”என்றார். “அப்படியே!” என்று சொல்லி வணங்கி விடைபெற்றார், காவல் தலைமை.. அந்த வார இறுதியில் பெக்கெட்டுக்கு மொரோக்கோவில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. அழைத்தவன், அவன் நண்பன் ஜாய்டன் . “எப்படி இருக்கிறாய் பெக்கெட்?” எனத் தொடங்கி அடுத்தடுத்து நண்பன் கேட்ட கேள்விகளுக்கு பதிலாக, தான் அங்கே வந்தது, பார்க்கும் பணி, சந்தித்த மனிதர்கள், ரசித்த விஷயங்கள் என்று எல்லாமும் சொன்னான் பெக்கெட். பிறகு, “நீ எப்படி இருக்கிறாய் ஜாய்டன்? மொரோக்கோப் பற்றிக் கொஞ்சம் சொல்லேன்!”கேட்டான். “எல்லா நாடுகளையும்போல மொரோக்கோவும் போர் போர் போர் என்றுதான் இருந்திருக்கிறது. இவர்கள் படை எடுப்பதும், பிறர் இவர்கள் மீது படை எடுப்பதுமாக மாறி மாறி எப்போதும் யுத்தம்தான். வட ஆப்பிரிக்காவில் இருந்தாலும், மற்ற ஆப்பிரிக்கா இனம் மாதிரி இல்லாமல் இவர்கள் வெள்ளைத் தோல் நிறத்தவர்களாக இருக்கிறார்கள்!” " ஆமாம் நானும் படித்திருக்கிறேன். எந்த நாடாக இருந்தாலும் அந்தக் காலத்தில் எப்போதும் போர்தான். வளம் இல்லாத நாட்டினர், வளமான நாட்டை நோக்கிச் சென்று போரிடுவார்கள். வளங்களைக் கைப்பற்றுவார்கள். இந்தக் காலத்தில் மறைமுகமாக வர்த்தகப் போர் நடக்கிறது! " “நம் அமெரிக்காவை விடுதலை பெற்ற முதல் நாடாக 1777ம் ஆண்டு அன்றைய மொரோக்கா சுல்தான் முகமது பென் அப்தல்லா அங்கீகாரம் செய்தார். எனவே இன்று வரை வட ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் மிகப் பழைய நட்பு நாடாகத் திகழ்கிறது. "அப்படியா? " “அல்கொய்தா ஆட்களை ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்த நாடு மொரோக்கோதான். முதல் அரேபிய, ஆப்பிரிக்க, இஸ்லாமிய நாடு அமெரிக்காவை அங்கீகாரம் செய்து ராஜ்ஜிய உறவை வாஷிங்டன் காலத்தில் ஏற்படுத்தினார். இத்தனைக்கும் அன்றைக்கு நம் அமெரிக்காவிடம் கப்பற்படை இல்லை!" " என்ன, அமெரிக்காவில் அப்போது கப்பற்படை இல்லையா? கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதே! " " ஆமாம், முதலாம் உலகப்போரில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டது, மொரோக்கோவின் படை. இரண்டாம் உலகப்போரில் முதலில் நாஜிகளுடன் இணைத்து செயல்பட்டார்கள். பிறகு அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் அன்றைய அரசர் மொஹம்மத்ஸ்விடம் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பிரெஞ்சுகளிடமிருந்து விடுதலை வாங்கி தருகிறேன் என்று சொன்னார், அதன்படியே அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்தார்கள்." "நமக்கு மிகவும் சாதகமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது " "மொரோக்கோ விடுதலைக்கு பின் இரு நாடுகளும் தனிப்பட்ட முறையிலும் அதிபர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்தனர். அமெரிக்கா அரேபியக் கொள்கையை வகுப்பதற்கு மொரோக்கோ வின் அரசர் ஹாசன் பங்கு முக்கியமானது. அரசர் ஹாசன் இறந்தபோது, அமெரிக்க அதிபர் கிளிண்டன் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தி உள்ளார். இரு நாடுகளும் பரஸ்பர நல்லுறவுடன் இருக்கிறார்கள்" "ஓ...கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது! " "ஆமாம்... இது ஒரு சிறிய இஸ்லாமிய நாடு. மூணு கோடிக்குள்தான் மக்கள் தொகை. அமைதியான மக்கள். சஹாரா பாலைவனம், பசுமையான வயல்வெளி இரண்டுமே இங்கு இருக்கிறது. ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நல்லுறவை வைத்துள்ளார்கள்." "ஓஹோ! " " இந்த நாட்டில் அரேபியர்கள் இருபது சதவிகிதம் முதலீடு செய்தால் ஐரோப்பியர்கள் எழுபத்தி ஐந்து சதவிகிதம் முதலீடு செய்கிறார்கள். ஆப்பிரிக்க நாடாக இருந்தாலும் சில காலம் ஆப்பிரிக்க ஒன்றியத்தில் இருந்து விலகி இருந்தது. பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இங்கே பெரும் முதலீடுகளைச் செய்துள்ளன.” "அங்கு மக்களின் வாழ்க்கை எப்படி? "."இங்கு குடும்பம் குடும்பமாக வாழ்கிறார்கள். பெண்கள் வேலைக்குச் சென்றாலும் திருமணம் ஆகும் வரை பிறந்தகுடும்பத்தில்தான் வாழ்கிறார்கள். அவர்களின் குடும்பப் பிணைப்பு இறுக்கமாக இருக்கிறது" "அங்கு எவ்வளவு தூதரங்கள் இருக்கின்றன?" "நூற்றுநான்கு நாடுகளுக்கு இங்கு தூதரகங்கள் இருக்கின்றன." "பராயில்லையே... யூதர்கள் இன்னும் அங்கு இருக்கிறார்களா?" "1948 க்கு முன் இங்கு மூன்று லட்சம் யூதர்கள் வசித்து வந்தார்கள். இஸ்ரேல் உருவான பிறகு வெறும் ஆயிரத்து சொச்சம் பேர் தான் இருக்கிறார்கள்" "சரி, உன் காதலி இப்போது எங்கு இருக்கிறாள்? அதைச் சொல்லு முதலில்" "அங்கு தான் இருக்கிறாள். இங்கு வருவதற்கு ஏற்பாடு செய்து இருக்கிறேன், எப்படியும் இரண்டு மாதத்தில் என்னுடன் இங்கு வந்து செட்டில் ஆகிவிடுவாள் என்று நினைக்கிறேன். சரி, உன் கதையை சொல்லு" "ஓ... அவர் வருகிறாரா? வாழ்த்துகள்! என் நிலைமையை என்னவென்று சொல்வது? இரட்டை கோபுரங்களை வீழ்த்திய பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அதிலும் சிரியாவிற்குத் தொடர்பு என்றவுடன் என் நிலைமையை எண்ணிப் பார். முதன்முதலாக ஒரு நாட்டிற்குச் செல்கிறேன் இப்படியா நடக்க வேண்டும்? சரி விடு, பார்ப்போம். நாம் பிறகு பேசுவோம் பை!" என்றுவிட்டு போன வைத்தவன், பணியாளை அழைத்து, இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னான். சென்னையில் அந்த வாரமிருமுறை புலனாய்வு பத்திரிகையின் அலுவலகம். ஆசிரியர் குழுவின் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. “ஆளும் கட்சியின் ஊழலைப் பற்றி எழுதினால் விற்பனை கூடியது ஒரு காலம். இப்போதெல்லாம் அந்த மாதிரி செய்திகளை மக்கள் படிப்பதே இல்லை. சரியாகச் சொன்னால், அத்தகைய செய்திகளைப் போட்டால், கடுப்புதான் ஆகிறார்கள்” என்றார், ஒரு துணை ஆசிரியர். “பணம் கொடுத்தாலும் பரவாயில்லை. தங்கள் வேலை ஆனால் போதும் என்று இருக்கிறார்கள், மக்கள். அவர்களிடம் போய் லஞ்சம் கொடுக்காதே என்றால், எரிச்சல்தான் படுவார்கள். அதைவிட, எவ்வளவு கொடுத்தால் எந்தக் காரியம் நடக்கும் என்று சொன்னால் மக்களுக்கும் பயன்படும்; பத்திரிகையும் விற்கும். ” என்றார், சென்னை நிருபர். " நல்ல யோசனை, அப்படியே எங்கே வாங்கப்படுகிறது, யாரால் என்று போட்டாலும் நன்றாக விற்கும். அதைச் செய்யலாமா? " " சட்டம் இடம் கொடுக்காது..!” “ சும்மா இருங்கள் எப்போதும் உருப்படாத விஷயம் எதையாவது பேசிக் கொண்டிருக்காதீர்கள். உருப்படியான யோசனையைச் சொல்லுங்கள்." கண்டிப்பாகச் சொன்னார், ஆசிரியர். (பார்வை விரியும்) - நந்தன் மாசிலாமணி