`நீயா... நானா?' யுத்தத்தில் தீவிரம் காட்டி வருகின்றன, மத்திய அமலாக்கத்துறையும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையும். `எஃப்.ஐ.ஆர்களை கொடு' என ஈ.டி வரிந்துகட்ட, அதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு காட்டவே, விவகாரத்தை நீதிமன்றமே கையில் எடுத்துள்ளதுதான் ட்விஸ்ட்.விஷயம் இதுதான்...’லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்யும் புகார்களின் எஃப்.ஐ.ஆர். உள்ளிட்ட விவரங்களை தங்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.’ என்று சட்டப் பிரிவுகளை சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை கேட்டுள்ளது. ‘அப்படியெல்லாம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை’ என்று ல.ஒ. துறை போக்குக்காட்டியது. இப்போது பிரச்னை பொதுநல வழக்காக மாறியிருக்கிறது.``என்ன விவகாரம்?'' என வழக்குத் தொடர்ந்த கார்த்திகேயனின் வழக்கறிஞர் பி.டி. பெருமாளிடம் கேட்டோம். “தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், லஞ்சம் வாங்குவோர் மீது வழக்குப்பதிவு செய்கிறது. பிறகு, அவர்கள் லஞ்சம் வாங்கியதை நிரூபித்து தண்டனை பெற்றுக் கொடுக்கும்.குறிப்பாக, குற்றம் செய்தவர்கள் பிடிபடும் சமயத்தில் அவர்கள் லஞ்சம் வாங்கியதை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்கிறதே தவிர, அதற்குமுன் அவர்கள் லஞ்சம் வாங்கி சேமித்திருக்கும் சொத்துகளைக் கண்டுகொள்வதில்லை..இதில், லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டனை கிடைக்கும். இல்லாவிட்டால் தப்பித்துவிடுவார்கள். லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து குவித்த சொத்துகள் குறித்து விசாரணை நடத்தவோ அதை முடக்குவதற்கோ ஈ.டி. எனப்படும் அமலாக்கத்துறைக்குதான் அதிகாரம் உள்ளது. அதனால்தான், `ஊழல் வழக்குகளில் ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு வழங்கவேண்டும்' என்ற சட்டம் அமலில் உள்ளது.ஆனால், வழக்குப்பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புத்துறை, எஃப்.ஐ.ஆர் நகல்களையோ, ரெய்டு செய்து கைப்பற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களையோ அமலாக்கத்துறைக்குக் கொடுப்பதில்லை” என்று குற்றம்சாட்டுகிறார்.தொடர்ந்து பேசிய அவர், “உதாரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி 20 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்பது புகார். அப்படியென்றால், அந்த 20 கோடி ரூபாய் எங்கே? குற்றச்செயலில் வந்த அந்தச் சொத்தை முடக்கும் அதிகாரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இல்லை. அதனால்தான், அமலாக்கத்துறை இதை கையில் எடுத்து விசாரித்துக்கொண்டிருக்கிறது” என்கிறார்.தொடர்ந்து, பொதுநல வழக்கு குறித்துப் பேசிய வழக்கறிஞர் பெருமாள், “நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தபோது, ‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி எங்களுடைய இணையதளத்திலேயே எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்வதாகவும் அதை யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் எனவும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பத் தேவையில்லை' என்றரீதியில் ஒரு கடிதத்தை மனுதாரருக்கு அனுப்பியது லஞ்ச ஒழிப்புத்துறை. இவர்கள், வெப்சைட்டில் அப்லோடு செய்யும்வரை அமலாக்கத்துறை காத்திருக்கவேண்டுமா?” எனக் கொதித்தார்.அடுத்து, நம்மிடம் பேசிய வழக்கறிஞர் வர்கீஸ் அமல்ராஜ், “அனைத்து எஃப்.ஐ.ஆர்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது வெப்சைட்டில் பதிவேற்றம் செய்வதில்லை. உதாரணமாக, காவல்துறையின் வாக்கி டாக்கி ஊழல் குறித்த எஃப்.ஐ.ஆரை பதிவேற்றவே இல்லை'' என்கிறார்..தொடர்ந்து பேசும்போது, ``600 புகார்களுக்கு எஃப்.ஐ.ஆர் போடுகிறார்கள் என்றால் அதில் 20 வழக்குகளில்தான் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கின்றனர். லஞ்சம் வாங்கிக்கொண்டு பல வழக்குகளில் எஃப்.ஐ.ஆரே பதிவு செய்வதில்லை. இதில் கொடுமை என்னவென்றால், முன்னாள் அமைச்சர்களாக இருக்கும்போது கடுமையாக எதிர்த்து நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்யும் லஞ்ச ஒழிப்புத்துறை, அவர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்கள் ஆனதும் அவர்களை விடுவிப்பது எந்தவகையில் சரி?சட்டத்துக்குப் புறம்பாக சொத்து சேர்ப்பதைத் தடுக்க வேண்டுமானால், லஞ்ச ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் பதியக்கூடிய அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறைக்கும் கொடுக்கவேண்டும்” என்கிறார்.இதுகுறித்து, அமலாக்கத்துறையின் சிறப்பு வழக்கறிஞர் ரமேஷிடம் பேசியபோது, “லஞ்ச ஒழிப்புத்துறை மட்டும் அல்ல, இ.ஓ.டபுள்யூ எனப்படும் பொருளாதார குற்றப்பிரிவு, சி.சி.பி. எனப்படும் மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட ‘விங்’ போலீஸார், நிதி தொடர்பான புகார்களைப் பதிவுசெய்யும்போது அமலாக்கத்துறைக்கு எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட ஆவணங்களை சட்டப்படி வழங்கவேண்டும்” என்கிறார், உறுதியாக. .``இப்படியொரு குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?'' என லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராமதாஸிடம் கேட்டபோது, “வெப்சைட்டில் எஃப்.ஐ.ஆர்களை பதிவேற்றம் செய்திருக்கிறோம். அமலாக்கத்துறை குறிப்பிட்டு எஃப்.ஐ.ஆர்களை கேட்டால் கொடுப்போம்” என்கிறார். இந்த விவகாரத்தில், திமுக அமைச்சர்களின் மீதான புகார்களை தானாக முன்வந்து கையில் எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், `அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர், தங்களை விடுவிக்கக் கோரி மனுதாக்கல் செய்ததை எதிர்த்து 2021 ஏப்ரல் வரை கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது லஞ்ச ஒழிப்புத் துறை. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருவரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றதும் அப்படியே ‘யூ-டர்ன்’ போட்டு வழக்கின் திசையை மாற்றிவிட்டுள்ளது.‘இப்படித் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியிருப்பது ஏற்புடையதல்ல. எனவே, இந்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரும் செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.கலகம் பிறந்தால்தானே நியாயம் பிறக்கும்!- மனோசெளந்தர்