கணேஷ்குமார்படங்கள்: ம.செந்தில்நாதன்லேடி ஜேம்ஸ் பாண்டாக சினிமாவில் எதிரிகளைப் பந்தாடும் விஜயசாந்தி, தேர்ந்த அரசியல்வாதியாக தேசிய அரசியலில் பிளந்து கட்டுகிறார். அதிரடிப் பயணமாக சென்னைக்கு அடிக்கடி வந்துபோகும் அவரை சந்தித்தோம்.கர்நாடகம் போலவே வரக்கூடிய நான்கு மாநில தேர்தல் முடிவுகளும் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருக்காது என்கிற விமர்சனம் குறித்து?“தவறு. நான்கு மாநிலங்களிலுமே பா.ஜ.க.வுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வறிக்கைகள் எங்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. பா.ஜ.க கண்டிப்பாக வெற்றிபெறும். அதைப் பார்க்கத்தானே போகிறீர்கள்..!”தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள்...“அண்ணாமலை நல்ல மனிதர். சிறப்பாகக் கட்சிப்பணி செய்கிறார். ஒரு கட்சியின் மாநிலத் தலைவர், வேகமாக செயல்படுவது தவறில்லையே. அவரைப்பற்றி அனைவரும் பாசிட்டிவ்வாகத்தான் சொல்கிறார்கள். கட்சியை எப்படியாவது முன்னுக்குக் கொண்டுசெல்லத் திட்டமிட்டு, கடுமையாக உழைக்கிறார்.”அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க கூட்டணி தொடருமா?“அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உடைய வாய்ப்பே இல்லை. அரசியலைப் பொறுத்தவரை ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு முடிவு எடுக்கப்படுவது இயல்பு. கள நிலவரங்களை வைத்து, கூட்டணி முடிந்துவிட்டது என்று சொல்லமுடியாது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி நல்ல காம்பினேஷன்.”நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்கிறாரே அண்ணாமலை?”வரலாற்றின் தொடக்கத்தில் இரண்டு எம்.பி தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்ற பா.ஜ.க., இன்று 300 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெற்றிருக்கிறது. தெலங்கானாவில் 4 எம்.எல்.ஏக்களில் இருந்து 46 எம்.எல்.ஏக்களாக பலம் உயர்ந்துள்ளது. இப்படி வலிமையைக் கூட்டிக்கொண்டேதான் செல்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணிதான் ஒர்க் அவுட் ஆகும்.”சசிகலாவுடன் நெருக்கமாக இருக்கிறீர்களே?“அம்மாவை (ஜெயலலிதா) எனக்கு மிகவும் பிடிக்கும். அம்மாவும் சின்னம்மாவும் அவர்கள் வீட்டில் ஒரு பெண்ணைப்போல் என்னைப் பார்த்துக்கொண்டனர். என் வீட்டில் தி.மு.கவினர் குண்டு வீசியபோது எனக்கு பலத்த பாதுகாப்பை ஜெயலலிதா வழங்கினார். இதையெல்லாம் என்னால் மறக்க முடியாது. சசிகலாவுக்கு ஆதரவான எனது நிலைப்பாட்டை எப்போதும், யாருக்காகவும் மாற்றிக்கொள்ளமாட்டேன்.”.தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கிறது?“ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். தமிழக சட்டசபைத் தேர்தலின்போது நிறைய வாக்குறுதிகளை அளித்தார் ஸ்டாலின். இதுவரை அவர் அவற்றை நிறைவேற்றவில்லை என்று கேள்விப்பட்டேன். இதனால் மக்கள் மாற்றத்தைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில்தான் ஸ்டாலின் ஆட்சி இருக்கிறது.”காங்கிரஸ் கட்சியுடன் கமல் கைகோத்திருக்கிறாரே?“கமல் எனக்கு நல்ல நண்பர். இப்போதைய நிலவரப்படி , தனது கட்சி வளர்ச்சிக்காக அவர் கடுமையாக உழைக்கிறார். அதேசமயம், அவரின் எதிர்காலத்தை இப்போதே கணிக்க முடியாது. கூட்டணி என்பது அவரது விருப்பம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.”எடப்பாடியால் அ.தி.மு.கவுக்கு எதிர்காலம் உண்டா? ‘அம்மா’ மிகப் பெரிய ஆளுமை. அ.தி.மு.கவில் அவரது இடம் இன்னமும் வெற்றிடமாகவே இருக்கிறது. அவர் உயிருடன் இருந்திருந்தால் அ.தி.மு.க.வும் நன்றாக இருந்திருக்கும். மக்களுக்கும் நல்லது நடந்து இருக்கும். அம்மா இல்லாத அ.தி.மு.க ஆரோக்யமாக இருப்பதாகத் தெரியவில்லை. எடப்பாடியால் கட்சிக்கு பலமா இல்லையா என்பதை 2024ல் நடக்கப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகுதான் சொல்ல முடியும்.”தமிழகத்தில் பா.ஜ.க.வின் மதவாத அரசியல் எடுபடுமா?“எதிர்க்கட்சிகள்தான் மத அரசியல் பழியை பா.ஜ.க மீது சுமத்துகின்றன. மோடி மீண்டும் மீண்டும் ஜெயித்துக்கொண்டே இருக்கிறார். மத அரசியல் என்றால் மக்கள் எப்படி எங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள்? இந்து என்றாலே ஏன் அவ்வளவு கசப்பாக இருக்கிறது? நான் ஒரு இந்து எனச் சொல்வது தவறா? இது ஒரு இந்துநாடு. எனவே மத அரசியல் எனச் சொல்வதெல்லாம் இனி தமிழகத்தில் எடுபடாது. அரசியலுக்காக இப்படிப் பேசுபவர்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.”உதயநிதியின் அரசியல் எதிர்காலம்..?“அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஸ்டாலின் வரிசையில் உதயநிதியை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது ரிஜெக்ட் செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.”விஜய் அரசியலுக்கு வருவாரா?“சினிமா துறையில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வருகிறார்கள். அது அவரவர் விருப்பம். அரசியலில் நிலைத்து நிற்க கடின உழைப்பு அவசியம். நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை உண்மையிலேயே இருக்கிறதா, அவர் வருவாரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. மக்கள்தான் இறுதி எஜமானர்கள். மக்கள் நினைத்தால் அவர் முதல்வர் ஆகலாம். ஆனால், எம்.ஜி.ஆரைப்போல எல்லோரையும் முதல்வராக தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியவில்லை.”சினிமா நடிகர், நடிகைகளை அதிகளவில் பா.ஜ.க வலைபோட்டு இழுக்கிறதே?“நாங்கள் யாரையும் இழுக்கவில்லை. மோடியைப் பிடித்தவர்கள் பா.ஜ.க.வை தேடிவந்து கட்சியில் இணைகிறார்கள். இவர்களால் பயன் இருக்குமா, இல்லையா என்பதையெல்லாம் உடனடியாகச் சொல்ல முடியாது.”