மணிப்பூர் விவகாரத்தைக் கையில் எடுத்து மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக ராகுல் காந்தி வாள் சுழற்றி வருகிறார். ஆனால், தமிழக காங்கிரஸோ, மாநிலத் தலைவர் அழகிரியை மாற்றுமாறு போர்க்கொடி உயர்த்தி டெல்லியில் முகாமிட்டிருப்பதுதான் ஹாட் டாக்.நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே இருக்கும் நிலையில், மாநிலவாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்து அறிவுரைகளையும் தேர்தல் டிப்ஸ்களையும் வழங்கும் வேலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இறங்கியிருக்கிறார். அந்தவகையில், ஆகஸ்ட் 4-ம் தேதி தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், `கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து சிலர் பேசியதுதான் கிறுகிறுக்க வைத்திருக்கிறது.``என்ன நடந்தது?’’ என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சீனியர் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``2014, 2019 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் பெரிய அளவில் சறுக்கலை சந்தித்த காங்கிரஸ் கட்சி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. கடந்த மே மாதம் கர்நாடகத்துக்கு நடந்த தேர்தலில் அபார வெற்றிபெற்று பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியது. இது, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கிறோம்..கர்நாடகாவில் பின்பற்றிய அதே வியூகத்தை இந்தியா முழுவதும் வகுத்து செயல்பட, மாநிலவாரியாக ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு உள்பட 27 நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.ஒவ்வொரு நிர்வாகியும் பேசுவதற்கு தலா 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆகியோர், `தமிழகத்தில் காங்கிரஸ் கரைந்துகொண்டே இருக்கிறது. காங்கிரஸுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டியது கட்டாயம். இதேநிலை தொடர்ந்தால், தமிழக காங்கிரஸை லென்ஸ் வைத்து தேடவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்’ என வருத்தம் தோய்ந்த குரலில் பேசினர்.தமிழக காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகை, `தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பூத் கமிட்டி என்பது 50 சதவிகிதம்கூட நிரப்பப்படவில்லை. இப்படியிருந்தால், எப்படி நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடியும்? அழகிரிக்கு கட்சியில் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகவே, அவரை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.கரூர் எம்.பி. ஜோதிமணியோ, `தமிழக காங்கிரஸ் தி.மு.க.வின் ஒரு பிரிவுபோல செயல்படத் தொடங்கிவிட்டது. எம்.பி. தேர்தலின்போது அழகிரியே தலைவராகத் தொடர்ந்தால், கூட்டணி பேச்சுவார்த்தையில் தி.மு.க. எவ்வளவு சீட் கொடுத்தாலும் எதிர்த்துப் பேசாமல் வாயை மூடிக்கொண்டு வாங்கி வந்துவிடுவார். ஆகவே, அதிக தொகுதிகளை பெறவேண்டும் என்றால் அதற்கு புதிய தலைவர் வந்தால் மட்டுமே சாத்தியம்’ என பேசிக்கொண்டிருக்கும் போதே, `மணி’ அடித்து அவரின் பேச்சை நிறுத்தச் சென்னார்கள்..`தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கிறதா என்றே தெரியவில்லை. கட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது. தொண்டர்கள் எல்லாம் அதிருப்தியில் இருக்கிறார்கள்’ என கார்த்தி சிதம்பரமும், தன் பங்குக்கு கொளுத்திப் போட்டார். `பாதி பூத் கமிட்டி மட்டும்தான் போடப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பூத் கமிட்டிகள் போடும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ எனக் கூறிய விஜயதரணி எம்.எல்.ஏ., `ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்க தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து தீர்ப்பளித்தது, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் பெண்களிடம் ஆதரவு பெருகியிருக்கிறது’ என ஐஸ் வைத்தார்.இதில், அழகிரியைத் தவிர கூட்டத்தில் கலந்துகொண்ட 26 நிர்வாகிகளும் தலைவரை மாற்ற வேண்டுமென்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்தாலும், `இப்போதைக்கு அழகிரியை மாற்றும் எண்ணமில்லை’ என கார்கே அறிவித்துவிட்டார். ஆனாலும், அழகிரி மாற்ற வேண்டுமென சில தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு, தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்’’ என்று சொல்லி முடித்தார்..``அழகிரியை மாற்றுமாறு வலியுறுத்தியது நிஜமா?” என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான திருநாவுக்கரசரிடம் கேட்டோம். ``டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சிப் பணிகள் குறித்தும் 2024 தேர்தலில் தி.மு.க.விடம் அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், `தலைவர் பதவியில் இருந்து அழகிரி மாற்றம் குறித்து வரும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’ என நானும் பேசினேன்” என்றார்.ஆக, முடிவுக்கு வருகிறதா அழகிரியின் பதவி?பாக்ஸ்...கோபண்ணாவுக்கு தடை!ஆகஸ்ட் 4-ம் தேதியன்று நடந்த டெல்லி ஆலோசனைக் கூட்டத்துக்கு கோபண்ணாவை அழைத்துச் சென்றிருந்தார், கே.எஸ்.அழகிரி. ஆனால், கூட்டம் நடைபெறும் கட்டடத்தின் உள்ளே நுழைய குறிப்பிட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், கோபண்ணாவை இறக்கிவிட்ட பிறகே அழகிரியின் கார், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அனுமதிக்கப்பட்டது. - ம.செந்தில்குமார்