முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் எம்.பி. பதவியே தள்ளாட்டத்தில் இருக்கும்போது, அடுத்த அடியாக வந்து விழுந்திருக்கிறது, இளம்பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார். ஓ.பி.ரவீந்திரநாத் மீது டி.ஜி.பி.யிடம் புகார் கூறிவிட்டு வெளியில் வந்த காரைக்குடியை சேர்ந்த காயத்திரி தேவியை சந்தித்துப் பேசினோம். ``என்னோட தோழி நாகபிரியா மூலமாகத்தான், ஓ.பி.ரவீந்திரநாத் எனக்கு அறிமுகமானார். அப்போது இருந்தே கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கும் மேலாக, அவர் குடும்பமும் எங்க குடும்பமும் நண்பர்களாகத்தான் பழகினோம். ஓ.பி.ரவீந்திரநாத்தை, உடன்பிறவாத அண்ணனாக நினைச்சுதான் பழகினேன். அவரோட மனைவி ஆனந்தியின் இன்னொரு தோழியுடன் அவருக்கு தகாத உறவு இருந்தது. `ஆனந்திக்கு துரோகம் பண்ணாதீங்க'ன்னு ரவீந்திரநாத்துக்கு நான் அறிவுரை சொல்லியிருக்கிறேன். என்னை அவர் தங்கச்சின்னுதான் கூப்பிடுவார். ஒன்றரை வருஷத்துக்கு முன்னால, சில காரணங்களால என் கணவர்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிட்டேன். அதுக்கு அப்புறம், சென்னையை அடுத்த நாவலூரில் என் அப்பா, அம்மாகூட இருக்கிறேன். இந்தநிலையில, கடந்த நவம்பர் மாதம் ஓ.பி.ரவீந்திரநாத் நம்பர்ல இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்துச்சு. `அண்ணன் தானே பேசுறார்'னு எடுத்தா, அவரோட நண்பர்னு சொல்லிட்டு ஒருத்தர் பேசினார். அப்போ அவர், `ரவீந்திரநாத் உங்க மேல ரொம்ப ஆசையா இருக்கார், அவர்கூட பேசுங்க'ன்னு சொன்னார். எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. போனை கட்செஞ்சுட்டு, உடனே ஆனந்திக்கு போன் செஞ்சு, ரவீந்திரநாத்தோட நண்பர் பேசினதை சொன்னேன். அவங்க, தன் மாமா ஓ.பி.எஸ்.கிட்டே சொல்லச் சொன்னாங்க. போன்ல சொன்னா சரிவராதுன்னு, தேனிக்குப் போய் ஓ.பி.எஸ்.ஸை நேர்ல சந்திச்சு, ரவீந்திரநாத்தின் நடத்தையைப் பத்தி சொன்னேன். அதுக்கு ஓ.பி.எஸ், `அம்மா திதிக்குக்கூட அவன் வரலைம்மா. அவன் வீட்டுக்கு வர்றதே கிடையாது. எங்கே இருக்கான்னும் தெரியலை. போன் பண்ணினாலும் எடுக்க மாட்டேங்கிறான்'ன்னு புலம்பினார். அப்புறம், ஆறு மாசம் ஓ.பி.ரவிந்திரநாத்கிட்ட இருந்து எந்த போனும் வரலை. பிரச்னை முடிஞ்சுதுன்னு நிம்மதியா இருந்தேன். ஆனா, கடந்த ஏப்ரல் மாதம் அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு. திருந்திட்ட மாதிரி அரை மணி நேரம் பேசின அவர், ஒரு கட்டத்துக்கு மேல ஆபாசமா பேச ஆரம்பிச்சார். எனக்குப் பொறுமை போயிடுச்சு, `நீங்கள் பேசுறது நல்லா இருக்கா? உங்களை நான் என் அண்ணனா பார்க்கறேன்… நீங்களே இப்படி நடந்துக்கலாமா?’ன்னு கோபமா கேட்டேன். அதுக்கு அவர், `இப்படி எல்லாம் சொல்லாதே. .. அவ மாதிரி மாதிரி உன்னையும் நல்லா வைச்சுக்கறேன். ராணி மாதிரி பார்த்துக்கறேன். வேணும்னா, கல்யாணம்கூட செய்துக்கறேன். ஐ லவ் யூடா செல்லம்’னு அநாகரிகமா பேசினார். நான் உடனே போனை கட் பண்ணிட்டேன். ஆனா, தொடர்ந்து அடிக்கடி போன் செஞ்சு ஆபாசமா பேசுறதோட, `நான் உன் வீட்டுக்கு வரவா? இல்லை கார் அனுப்புறேன் நீ வர்றியா'ன்னு கூப்பிட்டுகிட்டே இருக்கார். போன் எடுக்காம இருக்கலாம்னா, `போனை எடுக்கலைன்னா வீட்டுக்கு வந்துடுவேன்'னு மிரட்டறார். இப்படிப் பேசினதுக்கு நீங்க மன்னிப்புக் கேட்கணும்னு, வாட்ஸ்ஆப்ல மெசேஜ் அனுப்பினேன். அதற்கு அவர்கிட்டேயிருந்து எந்தப் பதிலும் இல்லை. ஆனா, அவரோட நண்பர்கள்னு பலர்கிட்ட இருந்து எனக்கு மிரட்டல்கள் மட்டும் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கு'' எனக் கலங்கியவர், தொடர்ந்து பேசினார்.. ``இன்னிக்கு எனக்கு நடக்கறது, நாளைக்கு என் மகளுக்கும் நடக்கலாம். எனக்கு எந்தக் கட்சிப் பின்புலமும் இல்லை. யாரோட தூண்டுதல்லயும் நான் இப்படிப் புகார் குடுக்கலை. ரவீந்திரநாத்தோட தொடர்புகளை துண்டிக்க ஓ.பி.எஸ். எவ்வளவோ முயற்சிபண்ணிட்டார். அவரால் முடியலை. ரவீந்திரநாத்தை யாரும் கட்டுபடுத்த முடியாது. அவர் மனைவி பாவம், ஒரு அடிமை மாதிரிதான் வாழறாங்க. ரவீந்திரநாத்துக்கு பல பெண்களோட தொடர்பு இருக்கறதா சொல்வாங்க. ஆனா, அதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குப் பாதுகாப்பும் நியாயமும் கிடைக்கணும். அதுக்காகத்தான், கமிஷனர் அலுவலகத்துல புகார் கொடுத்தேன். ஆனால் அந்தப் புகார் மேல எந்த நடவடிக்கையும் எடுக்காததால டி.ஜி.பி.யை சந்திச்சு புகார் குடுத்தேன்” சொல்லி முடித்தார். காயத்திரி தேவியின் புகார் குறித்து விளக்கம் கேட்க, ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.யின் தனிப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்தது. நாம் விளக்கம் அறிய முற்படுவது தொடர்பாக, அதே எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பியும் எந்தப் பதிலும் வரவில்லை. அவரது மற்றொரு எண்ணும், `உபயோகத்தில் இல்லை' என்றே கூறியது. தொடர்ந்து, அவரது தனிப்பட்ட இமெயில் முகவரிக்குத் தகவல் அனுப்பியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு போன் செய்து கேட்டபோது, “அவர் பெரியகுளம் வந்தே 2 மாதங்களுக்கு மேல் ஆகிவி்ட்டது. டெல்லி அல்லது வெளிநாட்டில் இருப்பார்’’ என்றனர். பெரியகுளத்தில் இருக்கும், அவரது எம்.பி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, “பார்லிமென்ட்ல பிஸியா இருக்கார். அவர் லைன்ல வரும்போது, நீங்கள் பேசிய விவரம் குறித்து சொல்கிறேன்” என்றுகூறி தொடர்பை துண்டித்தார், அலுவலகப் பொறுப்பாளர் பாலாஜி. காயத்திரி தேவியின் புகார்களுக்கு ரவீந்திரநாத் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்? - பாபு படங்கள்: செந்தில்நாதன்