எந்தக் கூட்டணியில் இருந்தாலும் தவற்றைச் சுட்டிக்காட்ட தயங்காத கட்சி' எனப் பெயரெடுத்த சி.பி.எம் மீது சமீபமாக சில விமர்சனங்கள். “தி.மு.க அரசுக்கு எதிராக வாய் திறப்பதில்லை” என அ.தி.மு.க கொளுத்திப் போட, காம்ரேட்டுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு. சி.பி.எம் மீதான விமர்சனத்துக்கு விடைதேடி அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.மணிப்பூர் கலவரத்துக்கு யார் காரணம்?மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடிக்கிறது. இன்னும் கலவரம் கட்டுப்படுத்தப்படவில்லை. `இது மெய்தி, குகி என்ற இரு இனத்தவரின் மோதல்' என்பன போன்ற தோற்றத்தை பா.ஜ.க. ஏற்படுத்த முயல்கிறது. உண்மையில், இந்தக் கலவரத்தைத் தூண்டிவிடுவதே மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசும் அதன் முதல்வர் பைரேன் சிங்கும்தான். மணிப்பூர் மலைகளில் இருந்து அம்மக்களை அகற்றிவிட்டு, அந்த மலைகளை அம்பானி, அதானி போன்ற கார்ப்ரேட்டுகளுக்கு தாரைவார்க்கவே இத்தகைய கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மணிப்பூர் அரசும் ஆளும் மத்திய அரசும் எந்த உதவியும் செய்யவில்லை. இந்நிலையில்தான் மனிதாபிமான உணர்வோடு, மணிப்பூர் மக்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புடைய அத்தியாவசியப் பொருட்களைக் கொடுக்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இதனை வரவேற்கிறோம்.`இந்தியா' கூட்டணியைவிட என்.டி.ஏ. கூட்டணி பலமாக இருக்கிறதே?யார் சொன்னது?‘இந்தியா’ கூட்டணியின் பலம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கவே பல இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தி பெரும்பான்மை மக்களைத் திசைதிருப்ப பா.ஜ.க. முயல்கிறது. மதம் என்ற தோற்றத்தை வைத்து அதன் அடிப்படையில் மக்களை திரட்டப் பார்க்கின்றனர். இந்தியா கூட்டணி வலுவடைந்து வருவதைக் கண்ட அதிர்ச்சியில்தான், உடைந்த கட்சி, உடைக்கப்பட்ட கட்சிகளை அழைத்து பா.ஜ.க. கூட்டம் நடத்தியிருக்கிறது. பா.ஜ.க. அணியில் உள்ள 38 கட்சிகளின் பெயர்களை பிரதமர் மோடி உள்பட அக்கூட்டணியின் தலைவர்களால் சொல்லமுடியுமா?அண்ணாமலையின் நடைபயணத்தை கவனிக்கிறீர்களா?அந்த நடைபயணமே, நகைப்புக்குரியதாக இருக்கிறது. சிறிது தூரம் நடந்து, பின்னர் சொகுசு வாகனத்தில் செல்வது, பின்னர் நடப்பது என அந்தப் பயணம் செல்கிறது. இதற்குப் பெயர் நடைபயணமா? நடைபயணம் என்ற பெயரில் தினந்தோறும் காமெடி நிகழ்ச்சியை அண்ணாமலை நடத்தி வருகிறார். இதனால் பா.ஜ.க.வுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.டெல்லி நிர்வாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?டெல்லி அரசு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி மத்திய அரசே செயல்படுகிறது. மாநில உரிமைகளைப் பறித்து பா.ஜ.க.வின்கீழ் அனைத்து மாநில அரசுகளையும் கொண்டுவந்து அடக்கிவிட வேண்டுமென நினைக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கான உரிமைகளை பா.ஜ.க. பறிக்கப் பார்க்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான போக்கை மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்கிறது. மாநில உரிமைகளைப் பறிக்கும் இதுபோன்ற செயல், சீரழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிடும்.சிறுபான்மையினர் குறித்து சீமான் பேசியது பற்றி?சீமான் மாதிரியான ஆட்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. குறிப்பிட்ட மதம், சாதி சார்ந்த மக்களை தரம்தாழ்த்திப் பேசுவது சரியானது அல்ல. அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை இழிவுபடுத்தும் வகையிலான அவரது பேச்சு கண்டனத்துக்குரியது.கொடநாடு வழக்கில் தி.மு.க. அரசு மெத்தனமாக செயல்படுகிறதா?தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், `கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்திருந்தனர். `இந்த வழக்கை துரிதப்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை நாங்களும் முன்வைத்திருக்கிறோம். அந்த வழக்கில் நிறைய மர்ம முடிச்சுகள் இருக்கின்றன. அதை வெளிக்கொண்டு வரவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.`தி.மு.க.வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாய் திறப்பதில்லை' என அ.தி.மு.க. குற்றம்சாட்டுகிறதே?தி.மு.க. அரசுக்கு எதிராக மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடுகிறது. சொத்துவரி உயர்வுக்கு எதிராகவும் நெய்வேலி பிரச்னைக்காகவும் கோவை மாநகரின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடம் அளித்தது தொடர்பாகவும், 12 மணிநேர வேலை என்ற தமிழக அரசின் ஆணைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுகிறோம்.இவ்வளவு பேசுகிற அ.தி.மு.க., மத்திய அரசைக் கண்டித்து ஏன் வாயைத் திறப்பதில்லை? போராடுவதில்லை? எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்க்கிறோம். ஆதரிக்க வேண்டிய நேரத்தில் ஆதரிக்கிறோம். பா.ஜ.க. என்ற பேராபத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்க தி.மு.க.வுடன் நாங்கள் துணை நிற்கிறோம். - ரய்யான்பாபு