சிவப்பு நிற வண்டிகளில் சைரன் ஒலிக்க தீயணைப்பு வாகனங்கள் சாலைகளில் விரையும்போது, `எங்கோ ஏதோ நடந்துவிட்டது?' எனப் பொதுமக்கள் பரிதாபப்படுவது வாடிக்கை. ஆனால், தீயணைப்புத்துறையே பரிதாப நிலையில்தான் இருக்கிறது என்பதுதான் தீயைப் பற்றவைக்கும் நிலவரம். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள ஐந்து மண்டலங்களில் 336 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு 600க்கும் மேற்பட்ட தீயணைப்பு ஓட்டுநர்கள், 150 மெக்கானிக்குகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட நிலைய அலுவலர்கள் (போக்குவரத்து) பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதில், ஓட்டுநர்கள் பற்றாக்குறை நிலவுவது குறித்து தீயணைப்புத் துறை இயக்குநர், துணை இயக்குநர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். கடந்த 2022 நவம்பர் 17ம் தேதி அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், `தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, புறநகர் ஏரியாக்கள் அடங்கிய வட மண்டலத்தில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை இருப்பதால் விபத்துக்குள்ளாகும் இடங்களுக்கு தென் மண்டலம், வடமேற்கு மண்டலம், மத்திய மண்டலங்களிலிருந்து ஓட்டுநர்களை சுழற்சிமுறையில் அனுப்பப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ``இது இன்று நேற்றல்ல, பல வருடங்களாக இப்படி சுழற்சி முறையில்தான் ஓட்டுநர்கள் பணி செய்கிறார்கள். உதாரணத்துக்கு மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரியிலிருந்து வடமண்டலமான சென்னைக்கு மூன்று மாதங்கள் என டியூட்டி போட்டார்கள். 2023 பிப்ரவரியோடு அவர்கள், தங்களின் பணியிடங்களுக்கு திரும்பியிருக்கவேண்டும். இப்போது 6 மாதங்கள் கடந்தும் திருப்பியனுப்பாமல் சுழற்சி முறையில் பணியாற்ற வைத்துக்கொண்டிருக்கிறார்கள்'' எனக் குமுறும் தீயணைப்புத் துறை அலுவலர் ஒருவர்,.`` அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அந்த மண்டலங்களில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. கடைக்கோடி ஊரில் பணியாற்றிய ஒருவரை திடீரென சென்னையிலுள்ள குறுகலான பகுதிக்குள் தீயணைப்பு வாகனத்தை ஓட்டச் சொல்வதால் முகவரியும் தெரியாமல் குழப்பமாகி விபத்து நடந்த இடங்களுக்குச் செல்வதில் தாமதம் ஆகிவிடுகிறது. இதனால், பெரும் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஏற்பட்டு பொதுமக்களிடையே அதிருப்தியை சம்பாதிக்க நேரிடுகிறது. குறிப்பாக, சென்னை குரோம்பேட்டையிலிருந்து பல்லாவரம் நோக்கிச் சென்ற ஸ்கார்பியோ கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது. ஆனால், தீயணைப்பு வாகனம் தாமதமாக வந்ததால், அந்தக் கார் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது. சென்னை தி.நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீப்பற்றி எரிய, தீயணைப்பு வாகனம் 20 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், மற்ற வீடுகளுக்கும் தீ பரவி பெரும் சேதம் ஏற்பட்டது. இதேபோல், திருச்சி அரியமங்கலத்திலுள்ள குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க ஒரு மணிநேரம் கடந்தும் தீயணைப்பு வீரர்கள் வராததால், அந்தப் பகுதியே கரும்புகை சூழ்ந்து மக்கள் மூச்சுவிட சிரமப்பட்டனர். சென்னை புளியந்தோப்பில் உள்ள ஆடு, மாடுகள் நவீன இறைச்சிக்கூடம் அருகே கடந்த வாரத்தில் ஒருநாள் காலை 11:45 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை மதியம் 2:20 மணிக்குத்தான் வந்து சேர்ந்தது. அதற்குள் எல்லாம் எரிந்து நாசமாகிவிட்டது. நல்லவேளை, இங்குள்ள ஆடு, மாடுகளை பொதுமக்கள் காப்பாற்றிவிட்டனர். இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க வேண்டுமானால், அந்தந்த மண்டலங்களுக்குட்பட்ட ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டும். இதன்மூலம் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்கமுடியும். பொதுமக்களிடையே நன்மதிப்பையும் பெறமுடியும்” என்றார் விரிவாக..``இப்படியொரு பற்றாக்குறைக்கு என்ன காரணம்?'' என விசாரித்தபோது, “தீயணைப்பு பயிற்சிகள் முடித்து ஃபயர்மேன் எனப்படும் தீயணைப்பு வீரராக பணியில் சேரும்போது இரண்டுவிதமான பணிகள் ஒதுக்கப்படுகின்றன. ஒன்று ஃபயர்மேன், மற்றொன்று ஓட்டுநர். ஃபயர்மேனாக பணியை தொடர்கிறவர் லீடிங் ஃபயர்மேனாக புரமோஷன் பெற்று ஸ்டேஷன் ஆபீஸர் ஆகிவிடலாம். மேலும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என அத்தனை கட்டடங்களையும் ஆய்வு செய்து தீ தடுப்பு சான்றிதழ் கொடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவரும் நிலைய அலுவலர்தான். ஆனால், அதே தீயணைப்புப் பயிற்சிகளை முடித்து ஓட்டுநராக செல்கிறவர் மெக்கானிக்காக பதவி உயர்வு பெற்று பிறகு, ஸ்டேஷன் ஆபீஸர் (போக்குவரத்து) என உயர்ந்தாலும் கடைசிவரை ஓட்டுநர் பணியை மட்டுமே செய்யமுடியும். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு உட்கார சேர் கூட கிடையாது. நீதியரசர் பக்தவச்சலம் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், அரசாணை 352 வெளியிடப்பட்டது. அதன்படி, `2012ம் ஆண்டுக்குப் பிறகு தீயணைப்புத்துறையில் சேர்கிறவர் ஃபயர்மேன் பணியைத் தேர்ந்தெடுத்தாலும் அவருக்கு டிரைவிங் மற்றும் பம்ப் ஆபரேட்டிங் பயிற்சியை அளிக்கவேண்டும்' என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, 2,000 பேர் பயிற்சியை முடித்துவிட்டு பணியில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான பதவி உயர்வுகளில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஃபயர்மேன்களாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, காவல்துறையில் காவலர் ஒருவர் ஓட்டுநர் ஆகிறார் என்றால், எப்போது வேண்டுமானாலும் தகுதிக்கேற்ற பணிகளில் மாற்றிக்கொள்ளமுடியும். தீயணைப்புத் துறையிலும் அப்படியொரு மாற்றம் வரவேண்டும்” என்கிறார், தீயணைப்புத்துறை உயர் அலுவலர் ஒருவர். ``இவையெல்லாம் எப்போது சரிசெய்யப்படும்?'' என தீயணைப்புத் துறையின் வடக்கு மண்டல இணை இயக்குனர் சுமதி ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, “சென்னையில் ஓட்டுநராக பயிற்சி முடித்துவிட்டு புரமோஷனாகி சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். அதனால், பற்றாக்குறை ஏற்படுகிறது. அதேநேரம், 2013க்குப் பிறகு அனைத்து ஃபயர்மேன்களுக்கும் டிரைவிங் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை சரிசெய்யும் முயற்சிகள் நடந்துவருகின்றன” என்கிறார். தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குநர் விஜயசேகரிடம் பேசியபோது, ``ஃபயர்மேனாக பதவி உயர்வு பெறும்போது இரண்டுவிதமாக புரமோஷன் ஆகலாம். லீடிங் ஃபயர்மேன் ஆகி, ஸ்டேஷன் ஆபீஸராக வேண்டும் என விரும்புகிறார்கள். ஸ்பெஷல் சம்பளம், விரைவான பதவி உயர்வுகள் கொடுத்தாலும் பெரும்பாலும் ஓட்டுநராக விரும்புவதில்லை. அதனால், நேரடியாக ஓட்டுநர்களை எடுக்கலாம் என்ற முயற்சியில் இருக்கிறோம்” என்றார். சிக்கிரம் எடுங்க ஆபிஸர்ஸ்! - மனோசௌந்தர்