“ இயக்குநர் வெற்றிமாறன் ‘வட சென்னை 2’ எடுப்பதற்கு முன்னதாக ’தென் சென்னை’என்று ஒரு படம் எடுத்தால் சூப்பர் டூப்பர் ஹிட்டாவது உறுதி” - புதிர் போட்டபடி என்ட்ரி கொடுத்த வம்பானந்தாவுக்கு சுக்கு மல்லி காபி கொடுத்து வரவேற்றார் சிஷ்யை. “தென் சென்னையில் அப்படி என்ன விஷேசம் சுவாமி?’’ “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னைத் தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. ஆனால், அதில் ஒரு சிக்கல். ’தென் சென்னைத் தொகுதி எனக்குத்தான் வேண்டும். நான்தான் தென்சென்னைத் தொகுதியில் போட்டியிடுவேன்’ என்று ஏக குரலில் சுமார் 12 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், ‘ஒரு தொகுதியில் போட்டியிட இத்தனை பேரா?’ என்பதுதான் தலைமையின் கவலை. ஒருவருக்கு சீட்டு கொடுத்தால், மற்றவர்கள் உள்ளடி வேலை பார்த்துவிடுவார்களோ என்று தலைமை அஞ்சுகிறது. இங்கே இப்படி என்றால், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும், தன் மகன் ஜெயவர்த்தனுக்குத்தான் தென் சென்னை தொகுதி என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்…”. “பா.ஜ.க,வில் அலறல் சத்தம் கேட்கிறதே சுவாமி?’’ “உமக்கும் கேட்டுவிட்டதா… வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களின் தேவைகளுக்காக 100 பெரிய பாக்ஸ்களை ஒதுக்க டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது. இதைத் தெரிந்துகொண்டு ஆர்வமுடன் மாநிலத் தலைமையை சந்திக்கச் சென்ற நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். ‘போட்டியிட விரும்புபவர்கள் முதலில் இந்த பெட்டிகளை எப்படி கையாளப் போகிறீர்கள், அப்படி கையாண்டால் என்ன பலன் கிடைக்கும், அவை ஓட்டுக்களாக மாறுமா, எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? என்று மொத்த தகவல்களையும் ஒரு வாரத்திற்குள் சப்மிட் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. இவற்றை எல்லாம் கேட்ட நிர்வாகிகளுக்கு தலை சுற்றிவிட்டதாம். ‘நம்ம தொழிலுக்கு ரகசியம்தானே மூலதனம். தலைமை கேட்கும் இந்த தகவல்களை எல்லாம் கொடுத்தால், அரசியலும் செய்ய முடியாது, சம்பாதிக்கவும் முடியாது’ என்று அலறுகிறார்கள்.”“கோட்டையில் உதயநிதி பற்றியே பேச்சாக இருக்கிறதே?’’“சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை தொடர்பான ஆய்வு கூட்டம் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் உதயநிதி ஆய்வு நடத்தினார். அப்போது ’வருத்தப்படாத வாலிபர் சங்க’ மனநிலையில் கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் சொன்ன அதே பதிலை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை, தொகையும் செலவு செய்யப்படவில்லை என்று கூறினார்களாம். குறிப்பாக, ’மக்களை தேடி மருத்துவம்’, ’முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, ’அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்’, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, ‘நான் முதல்வர்’ திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகளை கேட்டபோது, ‘உள்ளேன் அய்யா’ ரீதியிலேயே அதிகாரிகள் மழுப்பி இருக்கிறார்கள். ஆனால், கிடுக்கிப்பிடி போட்ட உதயநிதி, குறுக்குக் கேள்விகளாகக் கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டார்கள். இதனால் கடுப்பான உதயநிதி அதிகாரிகளை வறுத்தெடுத்ததுடன், ’தலைவர் மாதிரி இரக்கம் காட்டுவேன் நினைக்காதீங்க… என் ஆக்ஷன் வேற மாதிரி இருக்கும். வேலைகளை முடித்துவிட்டுவந்து என்னை சந்தியுங்கள். ஒரு வாரம் கெடு’ என்று கறார் காட்டியிருக்கிறார். அதிகாரிகளோ, ‘முதல்வர் ஸ்டாலினாக இருந்தால், நாம் சொல்வதைக் கேட்டு கொள்வார், இவர் பாடாய்ப்படுத்துகிறாரே’ என்று புலம்பியதையும் கேட்க முடிந்தது…”.”வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர் விஜய், தன்னை கைதூக்கிவிட்ட விஜயகாந்தை கண்டுகொள்ளவில்லை… கவனித்தீரா சுவாமி?” “ஆகஸ்ட் 25 விஜயகாந்த் பிறந்தநாள் அன்று அவரது கோயம்பேடு தே.மு.தி.க அலுவலகம் களைகட்டியிருந்தது. கடந்த ஜனவரி 1-ம் தேதி கடைசியாக தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த், ஏழு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் கட்சி தொண்டர்களை அன்றைய தினம் சந்தித்தார். இந்த இரு சந்திப்பின்போதும், விஜயகாந்த்துடன் பிரேமலதா, அவரின் மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால், விஜயகாந்தின் மைத்துனரும், பிரேமலதாவின் தம்பியுமான சுதீஷ் கலந்துகொள்ளவில்லை. சுதீஷ்க்கும் பிரேமலதாவிற்கும் இடையே மனகசப்பு காரணமாகத்தான் கலந்துகொள்ளவில்லை என்று ஆரம்பத்தில் தகவல் கசிந்தது. ஆனால், அந்தச் செய்தியில் உண்மையில்லை. சுதீஷ்க்கு பித்தப்பை கோளாறு காரணமாக சில மாதங்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது ஓய்வெடுத்து வருகிறாராம். அதனால்தான் அவர் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இம்முறை வழக்கத்தைவிட அதிகமான பிரபலங்கள் வாழ்த்துகளைக் குவித்தாலும், விஜயகாந்தால் கைதூக்கிவிடப்பட்ட நடிகர் விஜய் ஒரு ஃபார்மாலிட்டியாகக்கூட வாழ்த்தவில்லை என்பதில் பிரேமலதாவுக்கு ரொம்பவே வருத்தமாம்.” “சசிகலாவுக்கு எடப்பாடி தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்படவுள்ளதாமே?’’ “அ.தி.மு.க.வில் எப்படியாவது ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று சசிகலா பிடிவாதமாக இருக்கிறார். சமீபத்தில் இதுதொடர்பாக எடப்பாடி தரப்புடன் சசி தரப்பு நடத்திவரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாகத்தான் பன்னீர் சந்திக்க நேரம் கேட்டும் சசிகலா தவிர்த்து வருகிறார். இந்த விஷயத்தில் கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர் ஒருவர்தான் பாலமாக இருக்கிறார். அதாவது, ‘பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரால் முக்குலத்தோர் வாக்குகள் நமக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதற்கு சசிகலாவை நம்முடன் இணைத்துக் கொண்டால் சமாளித்துவிடலாம். முன்புபோல சசிகலா இல்லை, நாம் எவ்வளவுதான் சசிகலாவை அவமானப்படுத்தினாலும், நம்மை குறித்து சசிகலா இதுவரை அவதூறாக பேசவில்லை. கெளரவ ஆலோசகராக சசிகலாவை நியமித்தால், நமது கட்டுப்பாட்டில் வைத்துகொள்ளலாம். நம்மை மீறி அவரால் எதுவும் செய்துவிட முடியாது’ என்று அந்த முன்னாள் அமைச்சர் எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு ‘சிறிது காலம் காத்திருப்போம்’ என பாசிட்டிவ்வான பதிலையே சொன்னாராம் எடப்பாடி.’’.சிஷ்யை தட்டில் வைத்து கொடுத்த மிளகாய் பஜ்ஜியை கடித்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் வம்பு. “ சென்னையை கலக்கிய தாதாக்களில் ஒருவரான ஆற்காடு சுரேஷ் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார். இவருக்கு பெண் கஞ்சா வியாபாரி ஒருவர்தான் வலதுகரமாக இருந்தார். சுரேஷ் மறைவுக்கு பிறகு இவர் வீட்டை பூட்டிக்கொண்டு முடங்கிவிட்டார். இப்போது இந்த வழக்கில் இன்னொரு துருப்பு சீட்டு போலீசாருக்கு கிடைத்துள்ளது. பா.ஜ.க துணைத் தலைவராகவும், கோட்டத்தில் முக்கிய பொறுப்பாளராகவும் இருக்கும் ஒரு வி.ஐ.பி.யும், பெண் கஞ்சா வியாபாரியும் படு நெருக்கம். தனக்கு நெருக்கமானவர்களுக்கு வேண்டிய பல அசைன்மென்ட்டுகளை கஞ்சா வியாபாரி மூலமும், அவர் வழியாக ஆற்காடு சுரேஷ் மூலமாகவும் நிறைவேற்றி இருக்கிறார். இதை தொடர்ந்து இவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர முடிவு செய்திருக்கிறது போலீஸ். ”ஆஹா, இந்த சப்ஜெக்ட்டை அரசியல் க்ரைம் த்ரில்லராக்கி ஏதாவது ஒரு ஓ.டி.டி தளத்துக்கு நல்ல விலைக்கு விற்றுவிடலாம் சுவாமி…” “உண்மைதான். இன்றைக்கு க்ரைம் சப்ஜெக்ட்டுகளுக்குத்தான் கிராக்கி. முன்னாள் முதல்வர் காமராஜரின் நேர்மைக்கு சமமாக பேசப்பட்டவர் அவரது ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த கக்கன். இவரது வரலாறு இப்போதுதான் திரைப்படமாக வந்திருக்கிறது. ஆனாலும் பொதுமக்கள் தியேட்டருக்கு வந்தபாடில்லை. இதையடுத்து, தமிழக காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டிபிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ‘கக்கன்’பட டிக்கெட்டுகளை வாங்கி அதை கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கி கூட்டத்தை சேர்த்தார். அப்படியும் கூட்டம் சேரவில்லை. இதற்கு பிறகு பட டிக்கெட்டுடன், ஃப்ரீ ஸ்நாக்ஸ்க்கு தேவையான டோக்கனையும் வழங்கி வருகிறார். காலம் கலிகாலம்...”“செந்தில் பாலாஜி தொடர்பாக ஒரு செய்திகூடவா இல்லை?” “ஏன் இல்லை… மயிலாப்பூர் எம்.எல்.ஏ., ப்ளஸ் மாவட்ட செயலாளராக இருப்பவர் வேலு. இவர் சமீபத்தில் கங்காரு தேசம் சென்று வந்தார். அமைச்சர் செந்தில்பாலாஜிக்காகதான் இவர் கடல் கடந்து சென்றார் என்று தகவல் கசிய… வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை அன்னாரை தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளன” என்ற வம்பானந்தா தூறலை பொருட்படுத்தாது புல்லட்டை நோக்கி நடை போட்டார்..டெல்லி வாத்தியார்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 70 பேர் வரை புதுமுக வேட்பாளர்களை, குறிப்பாக இளைஞர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார் மோடி. இதனால், மீண்டும் சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மேனகா காந்தி, வருண் காந்தி உள்ளிட்டோர் கடும் அப்செட்! பெங்களூரு வந்த பிரதமர் மோடிக்கு இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பரிசு கொடுத்தார். அப்போது வீர முத்துவேலுடன் தமிழில் சில வார்த்தைகள் உரையாடிய பிரதமர் மோடி, அடுத்து தமிழகத்தில் தொடங்கப்படவிருக்கும் முக்கிய தொழிற்பேட்டை ஒன்றுக்கு வீரமுத்துவேலுவின் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளாராம்!- சுவாமி வம்பானந்தா