ஆந்திர அரசியலில் முதல்வர் ஜெகனைவிடவும் வார்த்தைகளில் வாள் சுற்றுவதில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜாவுக்கு தனி இடம் உண்டு. `குரைக்காத நாயும் இல்லை... குறைசொல்லாத வாயும் இல்லை' என `ஜெயிலர்' வசனத்தைப் பேசி பவண் கல்யாணை விமர்சித்தவர், தற்போது சந்திரபாபு நாயுடுவின் கைதைக் கொண்டாடி ஸ்வீட் கொடுத்து பட்டாசு வெடித்து அதகளம் செய்திருக்கிறார்.``சந்திரபாபு நாயுடு மீது அப்படியென்ன கோபம்?" எனக் கேட்டதும், படபடவென பொரிந்து தள்ளிவிட்டார்.எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. ஆந்திராவை அவர் அடமானம் வைத்துவிட்டார். அவரை நம்பி வாக்களித்த மக்களை கடன்காரர்களாக்கிவிட்டார். அந்தக்கோபம்தான். ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிந்தபோது, அவ்வாறு பிரியும் மாநிலம்தான் புதிய தலைமைச் செயலகம் உட்பட அனைத்து உள்கட்டமைப்புகளையும் செலவுசெய்து நிர்மாணிக்க வேண்டும். தவிர, ஹைதராபாத் சொத்தில் 52 சதவிகிதம் ஆந்திரத்துக்கும் 48 சதவிகிதம் தெலங்கானாவுக்கும் என்று சந்திரசேகர ராவே ஒப்புக்கொண்டார்.தெலங்கானாவில் எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டுக்குப் பணம் பட்டுவாடா செய்வது குறித்து நாயுடு போனில் பேசிய ஆடியோவை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கையில் எடுத்தார். இதனால் அலறியடித்துக்கொண்டு ஆந்திர மக்களுக்கு சேரவேண்டிய அனைத்து சொத்துகளையும் விட்டுவிட்டு விஜயவாடா வந்துவிட்டார். அதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் கோடி இருக்கும். இங்கு புதிய தலைநகரை நிர்மாணிக்க நிறைய செலவானது. அனைத்தும் ஆந்திர மக்களின் தலையில்தான் விழுந்தது.ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டது. தேர்தல் நேரத்தில் கைது செய்வதன் நோக்கம் என்ன?ஒரு நோக்கமும் இல்லை. உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அப்போதைய தலைமைச் செயலாளர் கிருஷ்ணாராவ், நிதித்துறை செயலாளர் ரமேஷ் ஆகியோர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதில், நாயுடுவின் சாமர்த்தியமான டெக்னிக்கல் கைவரிசையை கண்டுபிடித்து ஊர்ஜிதம் செய்யவே இவ்வளவு காலம் ஆனது. இப்போது நாயுடு கிடுக்கிப்பிடியில் சிக்கிக்கொண்டார். இனி தப்ப முடியாது.அப்படியென்ன மெகா ஊழல் செய்துவிட்டார்?படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி கொடுக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் நிதி கொடுத்தது. அவ்வாறு பயிற்சி கொடுப்பதற்கு ஒரு போலி நிறுவனத்தைத் தொடங்கி, பயிற்சி கொடுத்ததைப்போல போலி ஆவணங்களைத் தயாரித்து அதற்கு 241 கோடி ரூபாய் நிதியை கொடுத்துள்ளனர். இது பின்னாட்களில் சந்திரபாபு நாயுடு, இவரின் பி.ஏ.,வும் நாயுடுவின் மகனுமான லோகேஷ், தெலுங்குதேசம் தலைவர் அச்சம் நாயுடு ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கே திரும்ப வந்திருக்கிறது. அதே 2014 தேர்தலின்போது, `வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருகிறோம். 'பாபு ஒஸ்தா, ஜாப் ஒஸ்தாதி' என்று முழங்கினார். ஆனால், ஆப்புதான் ஒச்சந்தி.`ஹைடெக் முதல்வர்' எனப் பெயரெடுத்த சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்கில் கைது செய்தால் மக்கள் நம்புவார்களா?அவர் ஊழல் செய்வதில்தான் ஹைடெக் முதல்வர். அமராவதி தலைமைச் செயலகம் கட்ட நிலம் வாங்கியதில் மோசடி. தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவத் திட்டத்தில் மோசடி, பட்டு நிறுவனத்தில், ஃபைபர் இன்டர்நெட் வழங்கியதில் மோசடி, போலாவரம் அணைக்கட்டு திட்டத்தில் முறைகேடு என சுமார் 2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது.நாயுடுவை கைது செய்து நீதிபதியின் முன் நிறுத்தினால், `நான் ஊழல் செய்யவில்லை, இது பொய்க் குற்றச்சாட்டு. அவர்களால் நிரூபிக்க முடியுமா?' என்றெல்லாம் சொல்லவில்லை. `என்னை கைது செய்ய ஆளுநரிடம் அனுமதி வாங்கினீர்களா? முப்பது நாள்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். நள்ளிரவில் ஏன் கைது செய்தார்கள்?' என உப்புச் சப்பில்லாமல் பேசுகிறார்.அதற்காக, கைது சம்பவத்தைப் பட்டாசு வெடித்தும் ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடுவதும் சரிதானா?சந்திரபாபு நாயுடு, சபாரி போட்ட நரகாசூரன். என்னை ஓர் ஆண்டு சட்டமன்றத்துக்குள் நுழையவிடாமல் சஸ்பெண்ட் செய்தார். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அவர் சட்டத்தை மதிக்கவில்லை. அதேபோல், தலாய்லாமா வருகையின்போது ஏர்போர்ட்டில் இருந்து வெளியில் வந்த என்னை, `பாதுகாப்பாக அழைத்துப் போகிறோம்' என்றுகூறி குண்டர்களை அனுப்பி கடத்திச் சென்றார்கள். மதியம் வரை காரைவிட்டு இறங்கவிடாமல் சுற்றிச் சுற்றி கடைசியில் கொல்லப் பார்த்தார்கள்.மக்கள் நிறைந்த பகுதியில் கார் கதவை திறந்து கீழே குதித்து தப்பினேன். என் மகள், மகன் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து இண்டர்நெட்டில் விடச்செய்தனர். அந்தளவுக்கு எதற்கும் துணிந்தவர், இந்த சந்திரபாபு நாயுடு. ஜெகன் மோகன் ரெட்டியை எந்தப் புகாரும் இல்லாமல் 16 மாதங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தார்.அந்தக் கைதுக்கு விளக்கம் கேட்டும் இதுவரை அவரால் பதில் கொடுக்க முடியவில்லை. இனி அவரின் பெயர், ‘ராஜமுந்திரி கைதி நம்பர் 7691'. அவரின் கைதை மக்கள், தீபாவளிபோல் கொண்டாடி வருகிறார்கள். இனி நாயுடு வெளியிலும் வர முடியாது, ஆட்சியையும் பிடிக்கவும் முடியாது. - அன்புவேலாயுதம்