`மாப்பிள்ள இவருதான்... ஆனா, அவர் போட்டிருக்கிற சட்டை என்னுது!' என்ற `படையப்பா' பட வசனத்தைப்போல, யார் யாரோ எழுதிய படைப்புகளில் தன் பெயரைப் போட்டு அரசு நூலக நிதியை உறிஞ்சிய தனியார் பதிப்பகத்தால் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர், படைப்பாளிகள். தமிழகத்தில் 32 மாவட்ட மத்திய நூலகங்கள், 1,664 கிளை நூலகங்கள், 1,795 கிராம நூலகங்கள், 539 பகுதிநேர நூலகங்கள் என நான்காயிரத்து 42 நூலகங்கள் உள்ளன. இவை தவிர, சென்னையில் கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் என மாநில அளவில் மூன்று பெரிய நூலகங்களும் தனியாக இயங்குகின்றன.அரசு நூலகங்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறுவிதமான பிரிவுகளில் ஏராளமான புத்தகங்கள் வாங்கப்படும். இதற்காக பள்ளிகல்வித்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்படிப் புதிதாகப் புத்தகம் வாங்கப்படுவதில்தான், பெரும் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது..தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் பேசினோம். “தமிழ் அறிஞர்கள் பலரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அத்தகைய நூல்களில் எழுதியவர் பெயரும் நூலின் பெயரும் மாற்றப்பட்டு புதிய நூல்கள்போல அரசு நூலகத்துக்குத் தரப்பட்டிருப்பது தற்செயலாகத் தெரியவந்தது. அதையடுத்து அந்தப் பதிப்பகத்தின் பல நூல்களைத் திரட்டி ஒப்பிட்டுப் படித்ததில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தன.உதாரணமாக, மணவை முஸ்தபா எழுதிய `கணிணி கலைச்சொல் அகராதி' என்ற நூலை, வனிதா பதிப்பகத்தின் மயிலவேலன் தன் பெயரில் வெளியிட்டு புதிய நூல்போல், அரசு நூலகத்துக்குத் தந்துள்ளார். இதேபோல, அ.ச.ஞானசம்பந்தனின் பெயரைச் சுருக்கி ஏழு பதிப்பகங்கள் பெயரில் புத்தங்களைத் தந்துள்ளார்.சங்க இலக்கிய நூல்கள், அவ்வை துரைசாமி எழுதிய புத்தகங்கள், தமிழறிஞர் அ.கி.மூர்த்தி எழுதிய அகராதிகள் என பல நூல்களில் தன் உறவினர்களின் பெயர்களை ஆசிரியர் என்றுபோட்டு வெவ்வேறு பதிப்பகங்களின் பெயர்களில் கொடுத்துள்ளார்.பத்துத் தொகுதிகள் கொண்ட கந்தபுராணத்தை, எழுத்தாளர் சங்கத்தலைவரான தன் தந்தை பெரியண்ணன் பெயரில் வெளியிட்டும், அதே நூலை பெரியண்ணன் பெயரைச் சுருக்கி டாக்டர் ஜி.பி.என் எனப் போட்டு, பதிப்பகத்தின் பெயரை மாற்றி இருவேறு நூல்கள்போல அரசு நூலகங்களுக்கு விற்றுள்ளார்.பல ஆண்டுகளுக்கு முன் யார் யாரோ எழுதி வெளிவந்த புத்தகங்களையும் இதுபோலவே தலைப்பு, எழுத்தாளர் பெயர்களை மாற்றி புதிய புத்தகம் என்று பொய்யாகச் சொல்லி அரசு நூலகங்களுக்கு கொடுத்திருக்கிறார். காப்பிரைட் சட்டப்படி இவர் செய்திருப்பது பெரும் குற்றம் என்றால், நூலகத்துறை அதை கவனிக்காமல் அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் வாங்கியிருப்பது கிரிமினல் குற்றம். இந்தக் குற்றங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்ததாகத் தெரியவந்துள்ளது.இதுகுறித்து பொது நூலக ஆணையர் இளம்பகவத் மற்றும் நூலக ஆணைக் குழு தலைவர் மனுஷ்யபுத்திரன் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.’’ என்றவர், அடுத்து சொன்னது அதிர்ச்சியின் உச்சம்.. “குறிப்பிட்ட காலகட்டத்தில், புத்தகங்களை வாங்காமலே பல பதிப்பகங்களுக்கு நூலகத்துறை பல லட்சங்களை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, இந்தக் குற்றச் சாட்டுகள் குறித்து உரிய வகையில் விசாரிப்பதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட பதிப்பகங்கள், அதிகாரிகள் பட்டியலையும் வெளியிடவேண்டும். மேலும், முறைகேடாக வழங்கப்பட்ட தொகையை திரும்பப் பெறுவதோடு, சட்டப்படி தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.த.மு.எ.க.ச.வின் சென்னை மாவட்டச் செயலாளர் சிவசெந்தில்நாதன், “பொது நூலகத்துறையின் அதிகாரிகள் துணையில்லாமல் இத்தகைய மோசடிகளைச் செய்ய முடியாது. பணம் சம்பாதிக்கக் குறுக்கு வழி என நினைக்கும் சில பதிப்பாளர்கள், தங்களின் இச்செயலால் பொது நூலகங்களை குப்பைக்கிடங்கு நிலைக்குத் தள்ளியுள்ளனர்.இந்த விவகாரத்தில் பொது நூலகத்துறையும் தமிழ்நாடு அரசும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பொது நூலகங்கள் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படும். புத்தக கொள்முதலில், கமிஷன் கொடுத்த பதிப்பகங்கள் மட்டுமே தேர்வுசெய்யப்படுகின்றன. அப்படித் தராத காரணத்தால் தரமான புத்தகங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன..`தேர்வுக்குழுவால் எந்தெந்த புத்தகங்கள் தேர்வு செய்யப்படுகின்றன? எந்தெந்த பதிப்பகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது?' என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படுவது கிடையாது. அதனை முறைப்படுத்தினாலே குற்றங்கள் குறையும்” என்றார், வேதனையோடு.குற்றச்சாட்டுகள் குறித்து வனிதா பதிப்பகம் மயிலவேலனிடம் கேட்டோம். “இந்த ஆண்டு, பபாசி தலைவர் தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன். பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு உள்ளது. இதையறிந்து, நான் தலைவர் ஆகிவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு சிலர் சிண்டிகேட் அமைத்து எனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்" என்றார்.நூலக ஆணைக் குழுத் தலைவர் மனுஷ்புத்திரனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``புகார் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று மட்டும் பதில் அளித்தார்.நூலகங்களையும் ஊழல் கரையான்கள் அரிப்பது நல்லதல்ல! - ரய்யான்பாபு