`விட்டலாச்சார்யா' படங்களையே விஞ்சும் அளவுக்கு மாய தந்திரங்களில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள், பரமக்குடி உடன்பிறப்புகள். போக்சோ வழக்கில் சிக்கிய அ.தி.மு.க கவுன்சிலரை காப்பாற்ற, தி.மு.க சேர்மன் நடத்தும் நாடகங்கள்தான், படு ட்விஸ்ட்.பரமக்குடி நகராட்சியின் 3வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் சிகாமணி, இவர், அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரும், இவரின் நண்பர்களான புதுமலர் பிரபாகரன், ராஜா முகம்மது ஆகியோரும் சேர்ந்து பரமக்குடியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பான புகாரில் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகம்மது, உமா கயல்விழி உள்பட ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்..இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில் கவுன்சிலர் சிகாமணிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் நம்பிசெல்வன், `பாதிக்கப்பட்ட சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதில், முக்கிய குற்றவாளியான சிகாமணி மீதான குற்றசாட்டின் தீவிரத்தன்மை மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும், சிகாமணிக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பிறழ்சாட்சியாக மாறியுள்ளார். எனவே, சிகாமணியின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என வாதிட்டார்..இதையடுத்து கவுன்சிலர் சிகாமணியின் ஜாமினை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து காலை, மாலை என இரண்டு நேரமும் நீதிமன்றத்தில் கையெழுத்திடுமாறும் உத்தரவு பிறப்பித்தது.இதன்பின்னர்தான், உடன்பிறப்புகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது, `நீதிமன்றத்தில் ஆஜராகி இரண்டு நேரமும் கையெழுத்திடும் குற்றவாளி, எப்படி மாமன்றக் கூட்டத்துக்கு வந்து தீர்மானப் புத்தகத்தில் கையெழுத்து போட்டார்?' என்பதுதான்.“தி.மு.க சேர்மன் சேது கருணாநிதி சொந்தக் கட்சி கவுன்சிலர்களின் வார்டு பிரச்னைகளை சரிசெய்து தரும் ஆர்வத்தைவிட அ.தி.மு.க கவுன்சிலரும் தன் சாதிக்காரருமான சிகாமணியை காப்பாற்றவே துடிக்கிறார். இங்கே கட்சி பேதம் பார்க்காமல் சாதி பாசத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருகிறார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரைக் காப்பாற்ற எப்படி மனம் வந்தது எனத் தெரியவில்லை'' என ஆதங்கப்படும் பரமக்குடி நகர்மன்ற தி.மு.க கவுன்சிலர் ஒருவர்,. ``இதன்பின்னால் பணமும் சாதிப் பாசமும் இருக்கிறது. இல்லையென்றால், ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்த சிகாமணி எப்படி தீர்மானப் புத்தகத்தில் கையெழுத்து போட்டிருக்க முடியும்? தீர்மானப் புத்தகம், ஆணையரிடம் இருக்க வேண்டும். அது எப்படி சேர்மன் கைக்குப் போனது? கவுன்சிலர் ஒருவர் தொடர்ந்து மூன்று கூட்டத்துக்கு வராமல் போனால் அவரின் பதவிக்காலம் முடிவடைந்து விடும். அதைக் காப்பாற்றுவதற்காக, ஏப்ரல், மே மாதங்களில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறப்புக் கூட்டம் நடத்தியிருக்கிறார், சேர்மன். கடைசியாக நடந்த மாமன்றக் கூட்டத்தின் வருகைப் பதிவேட்டையும் தீர்மானப் புத்தகத்தையும் நகராட்சி பணியாளர் முருகன் என்பவர் மூலமாக கொடுத்தனுப்பி சிகாமணியிடம் கையெழுத்து வாங்கி வந்திருக்கிறார். .அந்த செட்அப் நாடகத்தை நம்ப வைப்பதற்காக, `நகர்மன்றக்கூட்டம் நடந்து முடிந்தபிறகு லேட்டாக வந்து கையெழுத்து போட்டுவிட்டுப் போனார் சிகாமணி' என்கிறார், சேர்மன். அதுவே சுத்தப்பொய். அவர் சேர்மன் அறைக்கு வந்து கையெழுத்து போட்ட விஷயம் கமிஷனருக்கு தெரியவில்லை. நகராட்சியில் சி.சி.டி.வி கண்களுக்குத் தெரியவில்லை. பிறகு எங்கிருந்து எந்த வழியாக வந்தார் சிகாமணி என்கிற கேள்விக்கும் பதில் இல்லை.கூட்டத்துக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காகத்தான் வருகைப்பதிவேடு இருக்கிறது. கூட்டத்துக்கு வராத ஒருவர் தான் வந்ததாக கையெழுத்து போடுவது குற்றம். அந்த குற்றத்துக்கு சேர்மன், ஆணையர் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்" என்றார், கொதிப்புடன்.- பாலா