`கோடநாடு விவகாரத்துக்கு எப்போது எண்ட் கார்டு?' எனக் கேட்கும் அளவுக்கு சாட்சிகளின் வாக்குமூலங்களால், ஏக குழப்பத்தில் இருக்கிறது காவல்துறை. அதிலும், கனகராஜின் அண்ணன் தனபாலின் லேட்டஸ்ட் பேட்டிகளால் மிரண்டு போயிருக்கிறது, எடப்பாடி தரப்பு. ``என்னதான் நடக்கிறது...`உங்களால் உயிருக்கு ஆபத்து' என்கிறாரே உங்கள் மனைவி?" என்றோம் தனபாலிடம்.``கொங்கணாபுரம் சேர்மன் கரட்டூர் மணிதான் எங்க வீட்டுல வந்து பேரம் பேசினார். ராத்திரி நேரத்துல பொலிரோ கார்ல வந்தவரு, ‘அண்ணா நடந்தது நடந்து போச்சு. எடப்பாடியும் அவரின் மச்சினனும் உறுதி கொடுத்திருக்காங்க. சேலம் மாவட்டத்தை இளங்கோவன்கிட்ட இருந்து பிரிச்சி உங்களை மேற்கு மாவட்டச் செயலாளராக ஆக்கறதோட, அடுத்த எடப்பாடி எம்.எல்.ஏ. நீங்கதான். சேலம் மந்திரியும் நீங்கதான்'னு சொன்னார். இந்தப் பேரத்துக்கு நான் உடன்படலை. திருப்பி அனுப்பிட்டேன்.என் மனைவியை கும்பலா வந்து மிரட்டுறாங்க. இதுல பல கிளைக் கதைகள் ஓடுதுங்க. தாரமங்கலம் கோணகப்பாடி பஞ்சாயத்துல மோகன்னு ஒருத்தர் இருக்காரு. எடப்பாடிக்கு அவர் பினாமி. என் மனைவி வகையில அவர் சொந்தம்தான். எடப்பாடி தரப்பு, மோகனை தூண்டிவிட்டு என் வீட்டுக்காரிகிட்ட பேரம் பேசுறாங்க..அதுல என் மனைவிக்கு தவறான ஐடியா கொடுத்து எஸ்.பி ஆபிஸ்ல புகார் கொடுக்க வைக்கிறாரு. இப்ப என்னை, `மனநிலை பாதிச்சவன்'னு சொல்லி முத்திரை குத்தறாங்க. என்னை பலர் பிரெய்ன் வாஷ் பண்றாங்க. எனக்குப் பயம் கிடையாது. மோகன் மேல தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்கலாம்னு இருக்கேன். டாக்டரே, என்னை சோதனை பண்ணி மனநிலை பாதிச்சிருக்கா, இல்லையான்னு சொல்லட்டும்’’ என்றார்.தனபாலின் மனைவி செந்தாமரைச்செல்வி பேச முன்வராத நிலையில், கொங்கணாபுரம் அ.தி.மு.க. சேர்மன் கரட்டூர் மணியிடம் பேசினோம். ``அட நீங்க வேற. தனபால் வீடே எங்க இருக்குன்னு தெரியாது. அவனுக்கு பைத்தியம் பிடிச்சுப் போச்சு. அவன் சொல்றத நம்பிகிட்டு என்னை கேட்டுகிட்டு இருக்கீங்க" என சலித்துக்கொண்டார்.தனபால் குறிப்பிடும் மோகனிடம் பேசினோம். ‘‘நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே’’ என்றார்.இதற்கிடையில், செப்டம்பர் 9ம் தேதி சேலம் மாவட்ட எஸ்.பி. அருண் கபிலனிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார், சேலம் புறநகர் அ.தி.மு.க. மா.செ இளங்கோவன். அதன்பிறகு பேசியவர், “தனபாலுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. தி.மு.க.வின் பி டீம் பன்னீர்செல்வம் பேச்சைக் கேட்டு என் மீது குற்றம் சொல்கிறார். ஆத்தூர் விபத்தின்போது, `எங்களுக்கு தொடர்பில்லை' என்று சொன்னவர், தற்போது, `தொடர்பு இருக்கு' என்று பேசுவது எப்படி?" எனக் கேள்வி எழுப்பினார்.மறுநாளே, தன் பங்குக்கு சேலம் சரக டி.ஐ.ஜியிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார், தனபால். அதில், ‘என்னை மனநோயாளி என்று சொல்லும் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.கோடநாடு கொள்ளைதான் மர்மம் என்றால், இது அதையும் விஞ்சுகிறதே! - கே.பழனிவேல்