ராஜ்பவன் மாளிகை, பாதுகாப்பு அரண்கள், பணியாளர்கள் என ஓர் ஆளுநருக்குக் கிடைக்கும் மரியாதை அளப்பறியது. ஆனாலும், தமிழிசைக்கு நீண்டகாலமாக ஒரு மனக்குறை. `தேர்தலில் இதுவரை வென்றதில்லை' என்பதுதான் அது. அதனை முறியடிக்க மீண்டும் தேர்தல் பாதைக்கு திரும்பவிருப்பதாக வெளியான தகவல், தூத்துக்குடியின் திகுதிகு டாபிக்.தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு 2016ல் நடைபெற்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார், தமிழிசை. அந்தத் தேர்தலில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. அடுத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். அடுத்தடுத்து தோல்விகள் வந்தாலும், பா.ஜ.க தேசியத் தலைமையின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.அதன் காரணமாக, தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசைக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் என்ற பொறுப்பும் வந்து சேர்ந்தது. இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக இருந்தாலும் தமிழ்நாட்டில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னோட்டமாகத்தான், தென்மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். `நெல்லை அல்லது தூத்துக்குடியில் போட்டியிடலாம்' என்ற தகவல் பரவியபோதும், தமிழிசையோ அவரோ அவரின் தரப்பினரோ அதனை உறுதி செய்ததில்லை. ஆனால், சமீபமாக வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டனர்.“ஆளுநர் பதவி என்பது கௌரவமான ஒன்றுதான். ஆனால், அவருக்கு அரசியலில் இருந்து ஒதுங்கும் எண்ணமே இல்லை. ஆளுநராக இருந்தாலும் தமிழகம் வரும்போதெல்லாம் தமிழக அரசியல் குறித்து அவர் பேசத் தவறுவது இல்லை'' எனக் குறிப்பிடும் தமிழிசையின் ஆதரவாளர்கள், அண்மையில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டனர்.``நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் இருக்கும் தருவை கிராமத்தில், ‘சான்றோர் கொண்டாடும் பனை தேசிய திருவிழா 2023’ என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், `சிலர் கடவுள் மறுப்பு, ஜாதி மறுப்பு என்று புரட்சி பேசுவார்கள். ஆனால், தேர்தல் என்று வந்துவிட்டால் செல்போன் முகப்பில் இருந்த பெரியார் படத்தை எடுத்துவிட்டு பனை மரம் படத்தை வைப்பார்கள். நெற்றியில் குங்குமம் வைத்து பக்திப் பரவசமாய் காட்சி அளிப்பார்கள். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்போம்' என்று கனிமொழியை மறைமுகமாக தாக்கினார்.இதையடுத்து, பனை தேசிய திருவிழா நிகழ்ச்சியை நடத்தியவர்களில் ஒருவரான தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷிடம் கேட்டோம். “பா.ஜ.க.வின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களில் முக்கியமானவராக தமிழிசை இருக்கிறார். `ஆளுநராக இருக்கிறவர்களில், யாருக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட விருப்பம் இருக்கிறதோ, அவர்கள் தங்கள் விருப்பத்தைச் சொல்லலாம்?' என்று கட்சித் தலைமை கேட்டிருக்கிறது. தமிழிசையும் சம்மதம் தெரிவித்துள்ளார். ‘வெற்றி பெற்று வந்தால் மத்திய அமைச்சர் பதவி நிச்சயம்’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, சொன்னதாக சொல்கிறார்கள்..தூத்துக்குடியில் கடந்தமுறை போட்டியிடும்போது நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்தார். அதில், `குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். அதை மையமாக வைத்து அங்கு தொழிற்பேட்டை அமைக்கப்படும்' என்றார்.அடுத்து, தூத்துக்குடியில் வாழை சாகுபடி அதிகம் நடக்கிறது. எனவே, `வாழை நாரை மையமாக வைத்து தொழிற்பூங்கா அமைக்கப்படும்' என்றார். அதேபோல, `பனைப் பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்' என்றார். அதற்கான திட்டங்களையும் தயாரித்து வைத்திருந்தார். ஆனால், அவர் தோற்றுவிட்டதால் செயல்படுத்த முடியவில்லை.அதனால்தான், நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கனிமொழி செய்யும் அரசியலை சுட்டிக்காட்டி பேசினார். நாங்களும், `அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்' என்று விரும்புகிறோம். நாடார் சமுதாயத்தில் இதுவரை யாரும் மத்திய அமைச்சராக இருந்ததில்லை. தமிழிசை அமர்ந்தால், அந்தக் குறை நிவர்த்தி செய்யப்படும்” என்றார்.``இதற்கு தமிழிசை சௌந்தரரராஜனின் பதில் என்ன?'' என்பதை அறிய அவரின் உதவியாளர் ராஜாவிடம் பேசினோம். “தமிழக மக்கள் அழைக்கும் நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் வருவதை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை போட்டியிடப் போகிறாரா என்றால் அது யூக செய்தியாகத்தான் இருக்கும். ஒரு குறிப்பிட்ட சமுதாயம் சார்பில் நடத்தப்பட்ட பனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதையும் அங்கு அவர் பேசியதையும் வைத்து அவருக்கு அரசியல் ஆசை இருப்பதாகச் சொல்கிறார்கள்.தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் மகள், தேசிய கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தவர். எனவே, அவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பதில் எந்தத் தவறும் இல்லையே. அதேநேரத்தில், கட்சி தலைமை என்ன சொன்னாலும் அதை செய்துமுடிக்க வேண்டும் என்று நினைப்பவர். எனவே, தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை சொன்னால் அவர் தயங்கமாட்டார்” என்றார்.`அரசியலில் எதுவும் தற்செயலாக நடக்காது' என்பது மேலைநாட்டுப் பழமொழி! - எஸ்.அண்ணாதுரை