ஆளும்கட்சிப் புள்ளிகளை குறிவைத்து அமலாக்கத்துறை அதிரடிகளை அரங்கேற்றுவது ஒருபுறம் என்றால், எதிர்க்கட்சியை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் சோதனையால் கதிகலங்கிப் போயுள்ளனர், அ.தி.மு.க நிர்வாகிகள். என்ன நடக்கிறது? 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் வெற்றிபெற்றவர், சத்யா என்கிற சத்திய நாராயணன். அ.தி.மு.க.வின் தென்சென்னை வடக்கு மா.செ.வாகவும் இருக்கிறார். இவரின் வீட்டிலும் வடசென்னை வடகிழக்கு அ.தி.மு.க மா.செ ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டிலும் செப்டம்பர் 13ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கலின்போது, தனது சொத்து மதிப்பை சத்யா குறைத்துக் காட்டியதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ‘இரண்டு மாதங்களில் ஆரம்பகட்ட விசாரணையை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம்' என நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படியே, சத்யா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. எடப்பாடி முதல்வராக இருந்தபோது, போலீஸ் அதிகாரிகளிடம் மிக நெருக்கமாக இருந்தவர், சத்யா. பணியிட மாற்றம் உள்பட அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்ததால், பலரும் அவருடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, ‘ரெய்டு’ குறித்து, முன்கூட்டியே சத்யாவின் கவனத்துக்கு தகவல் சென்றுள்ளது. இதனால், எந்தவித பதற்றமும் இல்லாமல் இயல்பாக இருந்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் இயங்கிவரும் ‘யாமினி டெவலப்பர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சத்யா நடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி விவசாய நிலங்களை ஏகத்துக்கும் வளைத்துப் போட்டிருப்பது கண்டறியப்பட்டது. அங்கும் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, கோவையில் உள்ள அவரின் மகள் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதன்படி, வருமானத்துக்கு அதிகமாக இரண்டரைக் கோடி ரூபாய் வரையில் சத்யா சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், வடசென்னை ஆர்.எஸ்.ராஜேஷின் தண்டையார்பேட்டை வீட்டிலும் சோதனை நடந்தது. எடப்பாடி முதல்வராக இருந்தபோது, இவர் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவராக இருந்தார். அதில் நடந்த மோசடிகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. சத்யா, ராஜேஷை தொடர்ந்து விருகம்பாக்கம் அ.தி.மு.க புள்ளி ஒருவரும் லஞ்ச ஒழிப்புத்துறையின் வளையத்தில் இருக்கிறார். இந்தப் புள்ளி அரசியலில் சம்பாதித்த பணத்தை. தனது சகோதர் மூலம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வந்துள்ளார். இதுதொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. அடுத்தகுறி அந்தப் புள்ளிதான்” என்கின்றனர். ரெய்டு குறித்து தி.நகர் சத்யாவின் விளக்கத்தை அறிய தொடர்பு கொண்டோம். அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. - கணேஷ்குமார்படங்கள் : ம.செந்தில்நாதன்