சந்திரனில் கால்பதித்த பிரக்யான் ரோவர், கந்தகம், பிளாஸ்மாவைக் கண்டுபிடித்து அசத்திக் கொண்டிருக்க, கிடைத்திருக்கும் கேப்பில் சூரியனை நோக்கி, ஆதித்யா எல் 1-ஐ அனுப்பி அடுத்த சாதனைக்கு வித்திட்டுள்ளனர், இஸ்ரோ விஞ்ஞானிகள். ``சூரியனை ஆராய்ச்சி செய்வதன் முக்கியத்துவம் என்ன?" என்று இஸ்ரோ அமைப்பின் முன்னாள் இயக்குநர் சிவனிடம் கேட்டோம். “பொதுவாகவே நிலா மற்றும் செவ்வாய் கிரகங்களில் உள்ள கனிமவளங்களை ஆராய்வதோடு அங்கே மனிதர்கள் வாழும் சூழல் இருக்கிறதா என ஆராயவே முன்னணி நாடுகள் முக்கியத்துவம் தருகின்றன. அதேநேரம், இந்த ஆராய்ச்சிகளுக்கு சற்றும் குறைவில்லாதது சூரியன் தொடர்பான ஆராய்ச்சி. காரணம், சூரிய ஒளி இல்லையென்றால், அடுத்த விநாடியே இந்த உலகமும் உயிர்களும் பனியில் உறைந்து அழிந்துவிடும். எனவே, சூரியனின் இயக்கத்தை நாம் புரிந்துக்கொள்வது அவசியம். பூமியில் அடிக்கடி சூரிய புயல் தாக்குகிறது. சில நேரங்களில் வெப்பம் அதிகரிக்கிறது. சில நேரங்களில் வெப்பம் குறைகிறது. இதுபோன்ற மாற்றங்களுக்கு காரணத்தை கண்டுபிடிக்கவே ஆதித்யா எல் 1 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பல சவால்கள் உள்ளன. முதலில், பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட 150.96 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதே மிகப்பெரிய சவால். அடுத்து சூரியன் ஓர் எரிநட்சத்திரம். ஆகவே, அதனருகில் சென்று ஆராய்ச்சி செய்ய முடியாது. எனவே, சூரியனில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்..இதனால், பூமியின் புவிஈர்ப்பு விசைக்கும் சூரியனின் புவிஈர்ப்பு விசைக்கும் இடைப்பட்ட லக்ரேஞ்ச் பாயின்ட் என்ற இடத்தில் விண்கலத்தை நிலைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுவே, பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஏற்கெனவே சந்திரயான், மங்கள்யான் என நிலவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் விண்கலன்களை அனுப்பிய அனுபவத்திலேயே தற்போது வெற்றிகரமாக ஆதித்யா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆதித்யா எல் 1-ல் சூரியனைச் சுற்றியுள்ள கொரோனா பகுதியை ஆராய்ச்சி செய்ய கொரோனாகிராஃப், அல்ட்ராவயலெட் இமேஜிங் டெலெஸ்கோப், ஸ்பெக்ட்ரோமீட்டர், சூரியக் கதிர்களை ஆராயும் கருவி, பிளாஸ்மா அனலைசர், மேக்னடோமீட்டர் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. நவீன கருவிகள் பலவற்றைக் கொண்டிருந்தாலும், விண்கலத்தின் மொத்த எடை 1,475 கிலோ என்பதுதான் இதன் சிறப்பு. எதிர்பார்த்தது போலவே, பூமியின் புவிவட்டப்பாதையை ஆதித்யா எல்-1 அடைந்துவிட்டது. 125 நாள்கள் பயணத்துக்குப்பின் அது லெக்ராஞ்ச் 1 பாயின்டை அடைந்து, தன் ஆராய்ச்சியைத் தொடங்கும். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனைத் தொடர்ந்து அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது” என்றவர், “இஸ்ரோவின் சாதனை இத்துடன் முடியப்போவதில்லை. அடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு ககன்யான் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா விண்வெளித்துறையில் வல்லரசு நாடுகளுக்கு சவால்விடும் உயரத்தில் வளர்ந்தே தீரும்" என்றார், பெருமிதத்துடன்.அசத்தட்டும் ஆதித்யா! - அபிநவ்