-இரா.சரவணன் “கொரோனா காலத்தில் என் கன்றுக்குட்டிகளை விற்று அரசுக்கு நிதி கொடுத்தேன். ஆனால் இன்று, மாட்டு லோனுக்காக அதிகாரிகளிடம் அல்லாடுகிறேன்’’ -தஞ்சாவூர் மாவட்டம், ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த பார்வைத்திறனற்ற விவசாயி ரவிச்சந்திரனின் துயரத்தை ட்விட்டரில் பகிர்ந்தார், ஒருவர். விஷயம் சில நிமிடங்களில் தலைமைச் செயலாளர் இறையன்புவின் பார்வைக்குப் போனது. அப்போதைய தஞ்சை கலெக்டர் கோவிந்தராவிடம் பேசினார், இறையன்பு. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த விவசாயி வீட்டில் போய் நின்றார், கோவிந்தராவ். ஒரே நாளில் மாட்டு லோன் வீட்டுக்கு வந்தது. .தலைமைச் செயலாளர் என்கிற உயரிய பதவியில் இருந்தபோதும், எளிய மனிதர்களின் பக்கம் நின்றவர், இறையன்பு. தலைமைச் செயலாளர் பதவிக்கு இறையன்பு பெயர் பரிசீலிக்கப்பட்டபோதே, ‘நிச்சயம் அவரால் தாக்குப் பிடிக்க முடியாது’ என சபதம் போட்டார்கள் சில சீனியர் அதிகாரிகள். ‘செயலே பதில்’ என வெற்றிகரமாக நிரூபித்து விடை பெற்றிருக்கிறார், இறையன்பு. கம்பீரமாகக் கபடி ஆடிய ஒருவன், உள்ளங்கைகளைத் தட்டிவிட்டு வெளியேறுவதைப்போல் இருக்கிறது, அவர் விடைபெற்ற கணம். ஓர் அதிகாரி ஓய்வு பெறுவதைப் பார்க்க, அழுகையோடு மக்கள் கோட்டைக்கு வந்தது இதுதான் முதல் முறை. பணி ஓய்வுக்குப் பிறகும் ‘மாநிலத் தகவல் ஆணையர்’, ‘அரசு ஆலோசகர்’ என அரசுத் தரப்பு வாய்ப்புக் கொடுத்தபோதும், ‘போதும்’ எனச் சொல்லிவிட்டார், இறையன்பு. அரசுப் பதவிகளுக்காக முட்டி மோதுகிற மனிதர்களுக்கு மத்தியில், இறையன்பு ‘அத்திப் பூத்த அதிகாரி’! தினமும் காலை 8:30 மணிக்கு முதல் ஆளாக தலைமைச் செயலகம் வரும் இறையன்பு, இரவு 9:30 மணிக்குக் கடைசி ஆளாகத்தான் கிளம்புவார். இந்த இரண்டு வருடங்களில் ஒரு நாள்கூட அவர் விடுப்பு எடுத்துக்கொள்ளவில்லை. ஞாயிறு மற்றும் பண்டிகை தினங்கள் உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களில்கூட கள ஆய்வுகளுக்குக் கிளம்பிவிடுவார். புத்தகங்கள் எழுதுவது அவருக்கு மிகப்பிடித்த பணி. ஆனால், இந்த இரண்டு வருடமும் எழுத்துப் பணியை அப்படியே விட்டுவிட்டார். வெளியுலகப் பேச்சுக்கும் பிரேக்தான்! அரசு அலுவலகங்களில் திருக்குறள் எழுதும் வழக்கம் மலையேறிப்போன நிலையில், அதனை உத்தரவாக்கினார், இறையன்பு. ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த தலைமைச் செயலாளர் பெயர்ப் பட்டியலை தமிழிலும் எழுத வைத்தார். முற்றிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தி, அரசாணை வெளியிடக் கூட்டங்கள் நடத்தி, முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தார்..தலித் சமூகத்தினரை ‘தண்டோரா’ போட வைக்கும் நிகழ்வை ஒரே உத்தரவில் நிறுத்திக் காட்டினார். ‘தண்டோரா போடவைத்தால் வழக்குப் பாயும்’ என இவர் காட்டிய பாய்ச்சலில், வழக்கொழிந்தது, ஆங்கிலேயர் காலம்தொட்டு நீண்ட அந்த அநீதி.. தூய்மைப் பணியாளர்கள் அமரவும், உடை மாற்றவும் அலுவலகங்களில் தனி அறை ஒதுக்க உத்தரவிட்டார், இறையன்பு. குப்பை சேகரிக்கும்போது கிடைத்த தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் மேரியைப் பாராட்டி, அவர் மகன் உதயகுமாருக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் ஒப்பந்தப் பணியை ஒதுக்கினார். ஆதனூர் ஊராட்சிக்கு நேரில் சென்று தலித் ஊராட்சித் தலைவரைக் கொடியேற்ற வைத்தார். ‘பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படக்கூடாது’ என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் பேசினார்.கடைக்கோடி மனிதர்களிடத்தில் இருந்து தனது அலைபேசி எண்ணுக்கு வருகிற அத்தனை குறைகளையும் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுபோய் தீர்வு ஏற்படுத்திக் கொடுத்தார், இறையன்பு. வாழ்விடத்துக்குப் போராடுகிற நிலையைக் கடிதமாக எழுதிய சிறுவனுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் குடியிருப்புக்கு ஏற்பாடு செய்தார். கோப்புகள் தேங்காதபடி நிதி, மனித வளம், சட்டம், வருவாய் ஆகிய துறைகளை முடுக்கிவிட்டது; கடைநிலை ஊழியர்களுக்கும் கைப்பட கடிதம் எழுதியது; மாற்றுத் திறனாளிகளின் குறைகளுக்குச் சிறப்பு கவனம் கொடுத்தது; வெள்ளத் தடுப்புப் பணிகளில் தீவிரம் காட்டியது; மக்கள் நல்வாழ்வுத் துறையோடு தனியார் மருத்துவமனைகளையும் ஒருங்கிணைத்து கண்ணகி நகர், பெரும்பாக்கம், நொச்சிக்குப்பம், அயோத்திக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மருத்துவ முகாம்களை நடத்தியது; 182 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது; சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர்களை ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்தியது; ஓட்டுநர்களுக்காக ஹோட்டல்களில் அறை ஒதுக்கச் சொன்னது; சுடுகாட்டுத் தலங்களைச் சுத்தமாகப் பேணச்சொல்லிக் கடிதம் எழுதியது என இறையன்புவின் இரண்டு வருடப் பணியின் முத்தாய்ப்பு விஷயங்களை உச்சி முகரலாம்..அத்தனை துறைகளிலும் கூட்டம் நடத்தி பத்து வருடங்களாக முடங்கிக் கிடந்த நிர்வாகத்தைச் சீராக்கியவர், இறையன்பு. தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் தன்மையாலேயே அதனைச் சாதித்தார். பல வருடக் கசடுகளை ஒற்றை ஆளாகத் துடைத்தெறிவது அவ்வளவு சாத்தியமில்லை. ஆனாலும், இறையன்பு போராடினார். அதனால்தான் அவர் விடைபெற்ற நாளில், ‘தங்களின் பணியைத் தமிழ்நாடு என்றைக்கும் மறக்காது’ என அவருக்குக் கடிதம் எழுதி கௌரவித்தார், முதல்வர் ஸ்டாலின். பேச்சும் எழுத்துமாக இளைய தலைமுறையை நோக்கிப் பயணிப்பதுதான் இறையன்புவின் அடுத்த இலக்கு என்கிறார்கள்.கடைக்கோடி மனிதர் வரை நீண்ட இறையன்புவின் கரம், ஓர் அரசு அதிகாரியின் அக்கறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்குக் காலத்துக்குமான கைக்காட்டி!