ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐ.டி.களை உருவாக்கி ஊர்க்கார பெண்கள் முதல் உறவுக்காரப் பெண்கள் வரையில் பாலியல்ரீதியாக வில்லத்தனம் செய்த வாலிபரால் குமுறிக் கொந்தளிக்கிறது, குமாரபாளையம்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட கிராமம் வீ.மேட்டூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. மைக்ரோ ஃபைனான்ஸ் ஊழியரான இவர் மீதுதான் ஆபாசப் புகார் அணிவகுத்திருக்கிறது.கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்த சத்யபிரியா என்ற பெண்ணிடம் பேசினோம். ``முருகேசனுக்கு 37 வயசு ஆகுது. மைக்ரோ ஃபைனான்ஸ்ல வேலை பார்க்கிறதால வீ.மேட்டூர்ல இருக்கிற எல்லா பொம்பளைங்க போன் நம்பரும் அவனுக்கு அத்துப்படி. சில பெண்கள் பேர்ல இவனே ஃபேஸ்புக், ட்விட்டர்ன்னு அக்கவுண்ட்டை ஓப்பன் பண்ணியிருக்கான். சில பெண்களோட முகத்தை மட்டும் வச்சுகிட்டு மத்தபடி ஆபாசமா மார்ஃபிங் செஞ்சும் கணக்கு ஆரம்பிச்சிருக்கான். இவனே அந்த கணக்கை ஆபரேட் செய்ய ஆரம்பிச்சிருக்கான். வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்ல இருந்து பெண்களோட படத்தை டவுன்லோடு செஞ்சுருக்கான். சில பெண்களோட படத்தை எப்படி கலெக்ட் பண்ணான்னு தெரியலை. ஊருல உள்ள இளவட்டங்களும் நமக்குத் தெரிஞ்சு பொண்ணுதானேன்னு நினைச்சு லைக் போட்டிருக்காங்க..அப்படி லைக் கொடுக்கிறவங்ககிட்ட அந்தப் பொண்ணே சாட் செய்யற மாதிரி இவனே அசிங்கமா சாட் செஞ்சுட்டு வந்தான். புருஷன், பொண்டாட்டி அந்தரங்க விஷயத்தை எல்லாம் இவனே பேசற மாதிரி சாட் பண்ணான். இப்படி சாட் பண்ற உள்ளூர் நபர், மறுநாள் அந்தப் பொண்ண எந்த கோணத்துல பார்ப்பார்? அப்படி எதாவது பிரச்னை ஆகும்போது, இவனே அந்த ஃபேஸ்புக் கணக்கை டெலிட் பண்ணிடுவான்.பதிமூனு வயசுல இருந்து முப்பத்தைஞ்சு வயசு வரைக்கும் பல பெண்களோட போட்டோஸ் இவன் செல்போன்ல இருந்திருக்கு. அதில் உள்ளூரைச் சேர்ந்த 50 பெண்களோட போட்டோக்களும் அடக்கம். மேற்கூரை போடாத பாத்ரூம், கதவில்லாத வீடுகள், மாடி மேல ஏறி நின்னு அவங்க குளிக்கும்போதும், பாத்ரூம் போகும்போதும் அவங்களுக்கே தெரியாம போட்டோ எடுத்து வச்சிருக்கான். அதையும் ஃபேஸ்புக்குல அப்லோடு செஞ்சுருக்கான்.என்னோட போட்டோவையும் அப்படித்தான் ஃபேஸ்புக்ல போட்டு இருந்தான். சின்ன புள்ளைங்களையும்கூட விட்டுவைக்கலை. அவங்க பேர்லயும் கணக்கு ஆரம்பிச்சு சாட் பண்ணியிருக்கான். உள்ளூர் பசங்கள லவ் பண்ற மாதிரி குறிப்பிட்ட பசங்களுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கான். இதனால வயசுப் புள்ளைங்க எல்லாம் அவமானத்துக்கு பயந்துகிட்டு ஸ்கூலுக்கு போகமாட்டேன்னு வீட்டுலயே முடங்கிக் கிடக்கிறாங்க.வீ.மேட்டூர் பக்கத்தில கல்லாங்காட்டுவலசுன்னு ஒரு ஊர் இருக்கு. அந்த ஊர் பசங்களுக்கு இப்படி ஆபாச பதிவுகளை அனுப்பி இருக்கான். இதனால ரெண்டு ஊருக்கும் பிரச்னை ஆகற அளவுக்கு விஷயம் போயிடுச்சு'' என்றார் கலக்கத்துடன்.``இந்த விவகாரத்தில் இவன் தனியா செய்ய வாய்ப்பில்லை. 15 பேர் கொண்ட கும்பல் இதுல ஈடுபட்டிருக்குன்னு சந்தேகப்படறோம். என் போட்டோவ போட்டு கணக்கு ஆரம்பிச்சிருக்கான். அதுல நான் பதிவிடற மாதிரி ஆபாசமா சாட் செஞ்சு போட்டிருக்கான்..அதைப் பார்த்த எங்க அண்ணனோட ஃபிரெண்ட் ஒருத்தர், `உன் தங்கச்சி இப்படி பதிவு போட்டிருக்குதுடா'ன்னு சொல்ல, எங்க அண்ணன் பதறியடிச்சிகிட்டு வீட்டுக்கு வந்தாரு. `என்ன பண்ணிகிட்டு இருக்க?'னு சத்தம் போட்டாரு. எனக்கு ஒண்ணும் புரியல. ஃபேஸ்புக்கை பத்தி சொல்லும்போதுதான், `இது முருகேசன் வேலை'னு தெரிஞ்சது. இப்ப புகார் கொடுத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறாங்க'' என்கிறார், கீர்த்தனா என்ற பெண்மணி.தொடர்ந்து பேசியவர், `` போலீஸ்ல புகார் கொடுத்ததுமே சாட், மெசேஜ் செஞ்ச சில ஃபேஸ்புக் கணக்குகளை எல்லாம் முருகேசன் டெலிட் பண்ணிட்டான். போலீஸோ, புரூஃப் இல்லைன்னு சொல்றாங்க. அவங்க முன்னாடியே, ‘கொலை கேஸைவிட இது பெரிய கேஸா? வெளியில வந்ததும் உங்கள யாரையும் நிம்மதியா வாழவிடமாட்டேன்'னு மிரட்டறான். போக்சோ சட்டத்துல அவன உள்ளே போடணுமுன்னு ஆர்ப்பாட்டம் செஞ்சும் போலீஸ் செய்ய மாட்டேங்கிறாங்க. அதனாலதான் கலெக்டர்கிட்ட வந்து புகார் கொடுத்தோம்" என்றார்.குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணியிடம் பேசினோம். ``பெரும்பாலும் பிறந்தநாள் ஸ்டேட்டஸ் போட்டோவை திருடித்தான் ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பிச்சிருக்கான். புகார் வந்தவுடனே கைது செஞ்சுட்டோம். பெண்களும், சகட்டுமேனிக்கு ஸ்டேட்டஸ் போடுவதை கொஞ்சம் சரிபார்த்துக் கொள்வது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப் புரிந்துகொண்டால் நல்லதுதானே?" என்றார்.முருகேசனின் பெற்றோரிடம் பேசியபோது, ``எங்க மகனைப் பிடிக்காதவங்க, அவன் மேல இருக்கும் காழ்ப்புணர்ச்சியால இப்படியெல்லாம் கதை கட்டுறாங்க. அதை நம்பிடாதீங்க'' என்கின்றனர்.இப்படியும் சில ஜென்மங்கள்! - கே.பழனிவேல்