இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சி அடித்து ஆடும் களமாகவே பார்க்கப்படும். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த ஏழு தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் ’இந்தியா’ கூட்டணி நான்கையும், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளதால், தேசிய அளவில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இது வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமே என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!மேற்குவங்கம், திரிபுரா, உ.பி, உத்தரகண்ட், ஜார்கண்ட், கேரளம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் காலியான ஏழு தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதன் முடிவுகள் செப்டம்பர் 8ம் தேதி வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம், திரிபுரா மாநிலத்துக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தான்பூர் தொகுதியில் வெற்றிபெற்ற பா.ஜ.க வேட்பாளர் பிரதிமா பௌமிக், எம்.பி.யாகவும் மத்திய இணை அமைச்சராகவும் இருந்ததால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து போக்சா நகர் தொகுதியில் வெற்றிபெற்ற சி.பி.எம் எம்.எல்.ஏ. சாம்சுல் ஹக் மறைந்துவிட்டார். இதனால் இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடுத்து, உ.பி, கோஷி தொகுதியில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியின் தாராசிங் சவுஹான், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது..உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வர் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்த்ராம் தாஸ், மேற்குவங்க மாநிலம் தூப்குரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிஷ்னு பதா ராய், கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் முன்னாள் முதல்வருமான உம்மன்சாண்டி, ஜார்கண்ட் மாநிலம், தும்ரி தொகுதியின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ. ஜகன்னாத் மாதோ ஆகிய நால்வரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். எனவே, இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவில் இந்தியா கூட்டணி நான்கு இடங்களையும் பா.ஜ.க மூன்று இடங்களையும் பிடித்துள்ளது.``இடைத்தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?” என பா.ஜ.க. மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமனிடம் கேட்டோம். ‘‘இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக வந்துள்ளதாகவே கருதுகிறோம். திரிபுரா மாநிலத்தில் பாக்சா நகர் மற்றும் தான்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளையும் பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. போக்சா நகர் தொகுதியில் முப்பதாயிரம் மற்றும் தான்பூர் தொகுதியில் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளோம்..வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளோம்.போக்சா நகர் தொகுதி சி.பி.எம் வசம் இருந்த தொகுதி. அங்கு 90 சதவிகித மைனாரிட்டிகள் வசிக்கின்றனர். இங்கு பா.ஜ.க வேட்பாளர் தஃப்ஜல் உசைன், சி.பி.எம் வேட்பாளர் மிசன் உசையை முப்பதாயிரம் வாக்குள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இதன்மூலம், `பா.ஜ.க மைனாரிட்டி விரோதக் கட்சி' என்ற பிம்பம் உடைந்துள்ளது.அடுத்தது உத்தரகண்ட். இங்குள்ள பாகேஷ்வர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பார்வதி தாஸ் வெற்றிபெற்றுள்ளார். இத்தனைக்கும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட அதிகம். உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் போட்டியிட்டவர், தாரா சிங் சவுகான். இவர் மீது மக்கள் அதிருப்தியில் இருந்தனர். எனவே, அங்கு சமாஜ்வாடி கட்சியின் சுதாகர் சிங் வெற்றி பெறுவது எளிதாகிவிட்டது..கேரளாவில், புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் வசம் இருந்தது. உம்மன்சாண்டி மறைந்ததால், அந்த அனுதாப அலையில் அவரின் மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றார். மேற்குவங்கத்தின் தூப்குரி தொகுதி பா.ஜ.க வசம் இருந்த தொகுதிதான். கடந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் பிஷ்னு பதா ராய் வெற்றிபெற்றார். தற்போது அங்கே மம்தா ஆட்சி நடந்து வருகிறது.மக்கள், மம்தாவுக்கு எதிராக வாக்களிக்க அஞ்சுகின்றனர். ஆனாலும், பா.ஜ.க வேட்பாளர் 90 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார். வெறும் 4,500 வாக்குகள் வித்தியாசத்திலேயே பா.ஜ.க தோற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.ஜெ.எஸ்.யூ கட்சியின் வேட்பாளர் யசோதா தேவி 83,614 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆக, என்.டி.ஏ கூட்டணியின் வளர்ச்சியையே தேர்தல் முடிவு காட்டுகிறது’’ என்றார்..``பா.ஜ.க கூறுவது சரியா?" என தி.மு.க.வின் மாணவர் அணித் தலைவர் ராஜிவ் காந்தியிடம் கேட்டோம். `` பா.ஜ.க.வுக்கு எதிரான முடிவுகளையே இடைத்தேர்தல் அளித்துள்ளது. குறிப்பாக, உ.பி.யில் பா.ஜ.க. அடைந்த தோல்வி அவர்களின் கொள்கைக்குக் கிடைத்த தோல்வி. தாராசிங் சவுகான் சமாஜ்வாதி கட்சியிலிருந்து வந்தாலும், அதற்கு முன்பு அவர் பா.ஜ.க.வில்தான் இருந்தார்..சொல்லப்போனால், யோகியின் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார். யோகியும் அவருக்காக நேரடி பிரசாரம் செய்தார். இதை மீறி சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சுதாகர் சிங் ஒரு லட்சத்து 23 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர் பார்வதி தாஸுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் பசந்த் குமாருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 3 ஆயிரம்தான். மேற்குவங்கம் தூப்குரி தொகுதியை பா.ஜ.க பறிகொடுத்துள்ளது. ஜார்கண்ட் மற்றும் கேரள மாநிலத்தில் பா.ஜ.க. என்ற கட்சியே இல்லை. மொத்தத்தில் பா.ஜ.க. அவுட். இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கே சாதகம்” என்கிறார்.இடைத்தேர்தல் முடிவுகள், `நாடாளுமன்றத் தேர்தலுக்கான அலாரமா?' என்பதற்கான விடை, அடுத்தாண்டு தெரியும்.- அபிநவ்