- அ.துரைசாமி ஈழப் போரின் இறுதி யுத்தத்தில் ஒரு லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை உறுதி செய்யும்வகையில் தற்போது முல்லைத் தீவில் தோண்டும் இடங்களில் எல்லாம் மனித எலும்புக் கூடுகளும் பெண்களின் ஆடைகளும் கிடைத்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் தனி ஈழம் கேட்டு 1983ம் ஆண்டு தொடங்கிய விடுதலைப் போராட்டம், 2009ல் பிரபாகரன் கொல்லப்பட்டதை தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. இதன்பின்னர் ஐந்தாண்டுகள் கழித்து திருக்கதீஸ்வரத்தில் கிணறு தோண்டும்போது முதல் புதைகுழி கண்டறியப்பட்டது. அதில் 84 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன..இதுகுறித்து கொழும்புவில் உள்ள செய்தியாளர் ஒருவரிடம் பேசியபோது, ``திருக்கதீஸ்வரத்தில் கிடைத்த உடல்களை ஆய்வு செய்தபோது அவர்களை சித்ரவதை செய்து கொன்றதற்கு அடையாளமாக எல்லா எலும்புக்கூடுகளிலும் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. அதேபோல் 2018ம் ஆண்டு மன்னாரில் இரண்டாவது மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு 74 நாள்கள் நடைபெற்ற அகழாய்வில் 136 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் பெரும்பாலானோர் குழந்தைகள். இப்படி ஈழம் முழுக்க 20க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகள் இருக்கின்றன. இந்தநிலையில்தான் முல்லைத்தீவில் இன்னொரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது'' என்றார் அதிர்ச்சி விலகாமல். ``முல்லைத்தீவு டு கொக்குத் தொடுவாய் கிராமத்துக்கு குடிநீர் பைப்புகளை பதிப்பதற்காக புல்டோசர் கொண்டு ரோட்டோரம் குழிகள் தோண்டும் பணி தொடங்கியிருக்கிறது. கடந்த ஜூன் 29ம் தேதி கொக்குத்தொடுவாய் கிராமத்தில் குழிதோண்டிய போது, 10 அடியில் எலும்புக் கூடுகள், பெண் புலிகளின் சீருடைகள், உள்ளாடைகள் இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்'' என்கிறார், மாஜி புலிகளை உறுப்பினராகக் கொண்ட ஜனநாயக போராளி கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி. தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், ``போலீஸ், தடய அறிவியல் நிபுணர்கள், நீதிபதி, தமிழ் வக்கீல்கள் முன்னிலையில் அந்த இடத்தில் அகழாய்வு செய்யப்பட்டது. அப்போதுதான் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள் வந்துகொண்டே இருந்தன. முதல் நாளில் மட்டும் 13 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அனைவருமே பெண் புலிகள்தான். இந்த கொக்குத் தொடுவாய் கிராமம்தான் தமிழக எல்லை கிராமம். அதனை அடுத்து கொஞ்ச தூரத்தில் சிங்கள கிராமங்கள் வந்துவிடும். கடற்கரை கிராமமான கொக்குத்தொடுவாயில் 2000 தமிழ் மீனவக் குடும்பங்கள் வசதியாய் வாழ்ந்தன. 1983ம் ஆண்டு யுத்தம் தொடங்கியது. 15.12.1984 அன்று சிங்கள ராணுவம் கொக்குத் தொடுவாய் கிராமத்துக்குள் புகுந்து மனித வேட்டையாடியது. 131 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அதில் 31 பெண்கள், 21 குழந்தைகள் அடங்குவர். இதனால் பதறிப்போன தமிழர்கள் ஊரை விட்டே ஓடினார்கள்..அதன்பிறகு 2011ம் ஆண்டு வரை சுமார் 27 ஆண்டுகள் அந்தக் கிராமம் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அங்கு சிங்கள ராணுவ கேம்ப் மற்றும் புலனாய்வாளர்கள் முகாமிட்டிருந்தார்கள். எனவே, இது ஒரு தொடர் ராணுவ பிரதேசம். எனவே, இறுதி யுத்தத்தில் சரணடைந்த பெண் புலிகளை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்று புதைத்திருக்கலாம். பெண்களைக் கொன்று புதைத்திருப்பது மனித குலத்துக்கே எதிரான குற்றம். போரில் கொல்லப்படுவது சகஜம். ஆனால் சரணடைந்தவர்களைக் கொல்வது மிகப்பெரிய குற்றம். அடுத்ததாக, சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் கொக்குத்தொடுவாய் கிராமத்தில் அகழாய்வு செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், திருக்கதீஸ்வரம், மன்னார் புதைகுழிகளை மறைத்ததுபோல் இதையும் இலங்கை அரசு மறைத்துவிடும். இறுதி யுத்தம் முடிந்த பிறகு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களை கண்டுபிடித்துத் தருமாறு 2000 நாள்களுக்கும் மேலாக தாய்மார்கள் போராடி வருகிறார்கள்'' என்கிறார். 'தொடர்ந்து பேசுகையில், ' போரின்போது சரணடைந்த புலிகளும்கூட காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சிங்கள ராணுவம் கொன்று புதைத்துவிட்டதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்காலின் ஒருபுறம் நந்திக்கடல், இன்னொரு புறம் கேப்பபுலவு கிராமம் இருக்கிறது. கேப்பபுலவில் முகாமிட்டிருந்த சிங்கள ராணுவம் அங்கிருந்த 40க்கும் அதிகமான கிணறுகளை மூடிவிட்டது. ராணுவத்துக்கு அங்கிருந்துதான் குடிநீர் கிடைத்தது.. யுத்தம் முடிந்த பின்னர் அந்தக் கிணறுகளை மூடியிருப்பதால் அக்கிணறுகளும் மனிதப் புதைகுழியாய் மாறியிருக்குமோ என்கிற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது'' என்கிறார், சோகத்துடன். இதன் நீட்சியாக, கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழாய்வு செய்யவேண்டும் என்று கூறி முல்லைத்தீவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அப்போது அங்கு சென்ற தமிழ் எம்.பி. சுமந்திரன், ``ஈழப்பகுதியில் ராணுவ முகாம் இருந்த இடங்களிலெல்லாம் பெரிய பெரிய புத்த விஹார்களை கட்டி வருகிறது. புத்த விஹார்களுக்கு அடியில் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம்'' என்று புது அணுகுண்டு ஒன்றை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்.