``தமிழக முதல்வராக பல திட்டங்களை செயல்படுத்தினாலும் இந்த காலை உணவுத்திட்டம் எனக்கு மனநிறைவைத் தருகிறது' - திருக்குவளையில் திட்டத்தைத் தொடங்கிவைத்தபோது முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் இவை. அதற்கு வேட்டுவைக்கும் வகையில் காலை உணவுத் திட்டத்திலும் தீண்டாமை அரங்கேறியதுதான் கரூரை கலங்கடித்த புகார்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியிலுள்ள வேலஞ்செட்டியூர் கிராமத்துக்குச் சென்றோம். அங்கே மரத்தடியில் அமர்ந்திருந்த பெற்றோரிடம் பேசினோம்.``எங்க ஊர் ஸ்கூல்ல 27 பசங்க படிக்கறாங்க, இதுல எஸ்.சி சமூகத்து பசங்க 13 பேரும் மற்ற சமூகத்து பசங்க 14 பேரும் படிக்கறாங்க. எஸ்.சி பசங்க ஸ்கூல்ல காலை உணவு சாப்பிடுவாங்க, மற்ற பசங்க இட்லி, தோசை சுட்டா வீட்டுலயும் மற்ற நாள்கள்ல ஸ்கூல்லயும் சாப்பிட்டு வந்தாங்க. கரூர் பக்கத்துல செம்பகணம் கிராமத்துல இருந்து இங்க தோட்டம்போட வந்த தொட்டி நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பசங்க எப்பவுமே ஸ்கூல்ல காலை உணவு சாப்பிட மாட்டாங்க.ஏன்னு கேட்டப்ப, ’பள்ளிக்கூடத்துல சமைக்கறது எஸ்.சி பொண்ணு. அதனால எங்க பசங்க அங்க சாப்பிடறதில்லை'ன்னு சொன்னாங்க. இந்தப் பசங்க சாப்பிடாமல் இருக்கறதை பார்த்த மற்ற பசங்களும் சாப்பிடாம இருந்தாங்க. `ஏன் சாப்பிடலை?'ன்னு ஆசிரியர் பாலு கேட்டார். `தேவைப்பட்டால் சாப்பிடுவோம்'னு சொல்லிட்டாங்க. இதைப் பார்த்த சமையலர் சுமதி, `நான் சமைக்கறதால தானே பசங்க சாப்பிடாம இருக்காங்க, நான் வேலைக்கு வரல, வேற ஆளைப்போட்டு சமைச்சுக்குங்க'னு சொல்லி பஞ்சாயத்து ஆபீஸ்ல நோட்டை குடுத்துட்டு போயிருச்சு..அப்ப அங்க வந்த பஞ்சாயத்து தலைவி நாகராணி, `சரிம்மா, உனக்கு வேற வேலை போட்டுத் தாரேன்'ன்னு சொல்லிட்டு உள்ளூர்ல இருக்கிற சாந்திக்கு சமையல் வேலை கொடுத்தாங்க. அன்னைக்கு சாயங்காலம், சுமதியோட புருஷன் தண்ணிய போட்டுக்கிட்டு ஊர் தலைவாசலுக்கு வந்து, `என் பொண்டாட்டி செஞ்சு குடுத்தா சாப்பிடமாட்டாங்களா?'ன்னு கத்திட்டு போனார்.அடுத்த நாள் பள்ளிக்கூடத்துக்கு கலெக்டர் வந்தாரு, `பெற்றோர் எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வாங்க'ன்னு கூப்பிட்டாரு, எல்லோரும் போனோம். `பிஞ்சு மனசுல நஞ்சை விதைக்கிறீங்களா.. சாப்பிடாத பசங்களுக்கு டி.சி.யை கொடுத்துடுவோம்'னு கலெக்டர் சத்தம் போட்டார். அப்போ ஒருத்தர் எந்திருச்சு, `என் பையன் சாப்பிடவும் வேணாம், படிக்கவும் வேணாம்.. டி.சி கொடுங்க'னு கேட்டாரு. அவரை உடனே கைது செய்ய சொல்லி கலெக்டர் சொன்னார். அவரை போலீஸ் சட்டையை பிடித்து இழுத்துட்டுப் போனாங்க.பிறகு பஞ்சாயத்து தலைவர் நாகராணியை கண்டபடி திட்டிவிட்டு கலெக்டர் போயிட்டார். `பசங்க சாப்பிடலைன்னா அம்மா அப்பாவுக்கு ஜெயில்'னு ஊருக்குள்ள தகவல் பரவுச்சு. இப்ப பசங்க எல்லாரும் ஸ்கூல்லயே சாப்பிடறாங்க" என்றனர்.ஊராட்சி மன்றத் தலைவர் நாகராணியிடம் பேசினோம். ``நான்தான் சுமதிக்கு வேலை கொடுத்தேன். `அவர் சமைக்க வேண்டாம்'னு ஊரில் சொன்னவங்ககிட்ட, `தாழ்த்தப்பட்ட வாத்தியார் வந்தால் அவர்கிட்ட படிக்க மாட்டீங்களா? சாதி பார்க்காதீங்க'ன்னு சொன்னேன். ஊருக்குள்ள போய் பெற்றோர்களையும் சாப்பிட கூப்பிட்டேன். அவங்களும் வந்தாங்க. சுமதிதான், `நான் வேலைக்கு வரலை'ன்னு சொல்லிச்சு. அதனால சாந்தியை வேலைக்கு போட்டோம்..இதை விசாரிக்க வந்த கலெக்டர், என்னை ஒரு பஞ்சாயத்து தலைவி, ஒரு பெண்ணுன்னு கூட பார்க்காம, `போய் தூக்கில் தொங்கு'ன்னு சொல்றார். இதனால ரொம்பவே மனஉளைச்சலுக்கு ஆளாயிட்டேன். என் நிலைமையை பார்த்த அரவக்குறிச்சி யூனியனில் உள்ள பஞாயத்து தலைவர்கள் கூட்டமைப்பினர் கலெக்டரை கண்டிச்சு தீர்மானம் போட்டிருக்காங்க. சுமதியை வேலைக்கு போட்ட எனக்கே இந்த நிலைமையா?" என்றார்.சமையலர் சுமதியிடம் பேசினோம். ``எனக்கு வேலை கொடுத்தது பஞ்சாயத்து தலைவர் இல்லை. யூனியன் ஆபீஸ்ல இருக்கற அதிகாரிதான். அதேபோல, என்னை வேலைக்கு வரவேணாம்னு ஊர்க்காரங்க சொன்னதாலதான் நோட்டு புக்குகளை கொடுத்துட்டு வந்தேன். பஞ்சாயத்து தலைவரும் இதைத் தடுக்கலை. என் வீட்டுக்காரரும் மாமியாரும் `நோட் புக்கை எதுக்கு அங்க கொடுத்துட்டு வந்த. யூனியன் ஆபீஸில் கொடுக்கலாம்'னு சொன்னாங்க. அவங்க கேட்கப் போனதை, குடிச்சுட்டு வந்து தகராறு பண்ணதா மாத்திட்டாங்க. இப்போது கலெகடர் வந்து விசாரிச்சுட்டு போனதால மறுபடியும் சமைக்கறேன். இன்னைக்கு 23 பசங்க காலை உணவு சாப்பிட்டார்கள்" என்றார்.கலெக்டர் பிரபு சங்கரிடம் பேசினோம். ``குழந்தைகளுக்கு சாதி தெரியாது. பெற்றோரிடம் இருந்து மட்டுமே சாதி தெரியவரும். அதிலும், மாணவர்களிடம் தீண்டாமை பற்றி சொல்லிகொடுத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. நான் நேரில் சென்று விசாரித்தபோதுகூட, சிலர் முரண்பட்ட கருத்துகளை கூறிக்கொண்டே இருந்தார்கள். அதனால்தான் ஒருவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றோம்.அவரும் மாலையில் தன் தவறை உணர்ந்து, `இனிமேல் தீண்டாமை செயலில் ஈடுபட மாட்டேன்' என்று உறுதி கூறியதால் விடுவித்தோம். பஞ்சாயத்து தலைவர் மீதும் புகார் இருக்கிறது. அவர்மீது துறைரீதியான நடவடிக்கையும் தேவைப்பட்டால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் இப்போது பள்ளியில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார்.தாயுள்ளத்துடன் அணுக வேண்டிய திட்டத்திலும் தீண்டாமை பார்ப்பவர்களை என்ன பேர் சொல்லி அழைப்பது?-கரூர் அரவிந்த்