‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் இசைக் கச்சேரி நடத்த ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல ஆயத்தமானார், ஏ.ஆர்.ரகுமான். `அகிம்சையை சொல்லிக் கொடுத்த திலீபன் நினைவு தினத்தில் கேளிக்கை கச்சேரியா?’ என தமிழ் அமைப்புகள் கொந்தளிக்க, கதிகலங்கியிருக்கிறது இசைக் குழு.இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, லண்டன் எனப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார். அதையொட்டி, வரும் 23ம் தேதி `டேக் இட் ஈஸி’ என்கிற தலைப்பில் ஜெர்மனியிலும் 24ம் தேதி ’மறக்குமா நெஞ்சம்’ என்கிற தலைப்பில் பிரான்சிலும் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில், ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து, நம்மிடம் பேசிய லண்டனில் வசிக்கும் முன்னாள் போராளி ஒருவர், ``பிரபாகரன் பிறந்ததினத்தை மாவீரர் நாளாகவும் திலீபன் நினைவு தினத்தை இன எழுச்சி நாளாகவும் புலம்பெயர் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதில், ஒருவார காலம், மாவீரர் நாள் நடக்கும். இன எழுச்சி நாள் 12 நாட்கள் நடக்கும்.தமிழ் ஈழத்துக்காக புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபன் கடந்த 15.9.1987 முதல் 26.9.1987ம் வரை 12 நாட்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல் வீரச்சாவு அடைந்தது வரலாறு. இந்த சம்பவம்தான் இந்திய அமைதிப்படைக்கும் புலிகளுக்குமான மோதலின் தொடக்கப்புள்ளி. இந்த தினத்தில் ஈழத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், புலம்பெயர் நாடுகளில் வாழும் எல்லா தமிழர்களும் வீடுகளில் சுப நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள், கேளிக்கைகளிலும் ஈடுபடமாட்டார்கள்..இந்நிலையில், `செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் ஜெர்மனி மற்றும் பாரீசில் ஏ.ஆர்.ரகுமானின் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளவர்களிடம் பொருளாதார வசதி கிடையாது. எனவே, ஈழத்தில் உள்ள செய்தி மீடியா நிறுவனம் இதற்கு உதவி செய்கிறது. `இன எழுச்சிநாளில் கேளிக்கை நிகழ்ச்சி நடத்துவதா?’ என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். இந்நிகழ்ச்சிக்காக ஒப்புக் கொண்ட, ஏ.ஆர். ரகுமானுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம்.குறிப்பாக, புலம்பெயர் நாடுகளில் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், லண்டன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 14 தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்கள் எழுதிய கடிதங்கள், ஈழ ஆதரவு மாணவர்களால் ரகுமான் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ரகுமானை மதிக்கிறோம், ஆனால், திலீபனை தொழுகிறோம், எனவே, இந்நிகழ்ச்சியை ரகுமான் புறக்கணிக்க வேண்டும்’’ என்றார்.ஏ.ஆர்.ரகுமானுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், ` இன எழுச்சி நாளில் கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி ஈழத்தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம். ஆஸ்கர் மேடையிலேயே தமிழில் பேசி உணர்வை வெளிப்படுத்திய நீங்கள், ஈழத்தமிழர்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிகழ்சியை ரத்து செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, ஒருவேளை நிகழ்ச்சி நடத்தப்பட்டால் விழா மேடையின் வாயிலில் திலீபன் பதாகையுடன் நின்று எதிர்ப்பு காட்டவும் தமிழ்க் குழுக்கள் திட்டமிட்டு வருகின்றன..தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் கடிதங்களை ஏ.ஆர்.ரகுமான் அலுவலகத்தில் ஒப்படைத்த மாணவர்களில் ஒருவரான ஆதவனிடம் பேசினோம், “இன எழுச்சி நாளில் கேளிக்கை நிகழ்ச்சி என்றவுடனேயே நாங்கள் நிகழ்ச்சியை தவிர்க்குமாறு ரகுமானுக்கு கடிதம் எழுதினோம், ஆனால், எதுவும் நடக்கவில்லை, மாறாக, டிக்கெட் விற்பனையை தொடங்கினார்கள். முழு வீச்சில் டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு வந்தன. நாங்களும் ரகுமானை சந்திக்க பல வழிகளில் முயற்சி செய்தோம்.நடிகர் சத்யராஜ் மூலமாகவும் முயற்சி செய்தோம், ஆனால், முடியவில்லை, எனவேதான், புலம்பெயர்ந்த 14 தமிழர் அமைப்புகளின் கடிதங்களை டவுன்லோட் செய்துகொண்டு அவரது அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு ஏ.ஆர்.ரகுமான் இல்லை, எனவே அவரது உதவியாளரிடம் விஷயத்தைச் சொல்லி கடிதங்களை ஒப்படைத்தோம்’’ என்றார்..இப்படியொரு எதிர்ப்பை ஏ.ஆர்.ரகுமானும் எதிர்பார்க்கவில்லை. எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, பிரான்சை சேர்ந்த ஷ்ருதிலயா என்ற நிறுவனம், `நாங்கள் ஐரோப்பா முழுவதிலும் அனிருத், இளையராஜா ஆகியோரின் இசைக்கச்சேரிகளை நடத்தியிருக்கிறோம். ஏ.ஆர்.ரகுமானை வைத்து நிகழ்ச்சி நடத்த கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவருக்கு வசதியான தேதியைக் கொடுத்தார். பொதுவெளியில் காணப்படும் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேதிகளை மாற்றி அமைக்க இருக்கிறோம். தமிழ் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட மாட்டோம்’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பிரான்சில் கச்சேரிக்கான தேதியை மாற்றிவிட்ட சூழலில், `ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அமைப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?’ என்பதை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுகுறித்து, விளக்கம் கேட்க ஏ.ஆர்.ரகுமான் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். நாம் கூறிய தகவல்களைக் கேட்டுக் கொண்ட அவரது உதவியாளர், இதுகுறித்து ரகுமானின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகக் கூறினார்.தமிழர்களின் உணர்வுகளை உரசாமல் இருந்தால் சரி!-அ.துரைசாமி