`அது அரிசியே அல்ல.. பிளாஸ்டிக்' என வி.கே.சசிகலா வரையில் வெளுத்து வாங்கிவிட்டார்கள். ஆனாலும், செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் ரசாயன அரசியல், அரிசியிலும் தொடங்கிவிட்டதாக அலறுகின்றன, சூழல் அமைப்புகள்.தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசிகளாக கருப்புக் கவுனி, கிச்சிலி சம்பா, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டு யாணம், மூங்கிலரிசி ஆகியவவை உள்ளன. நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பசுமைப் புரட்சி வந்தபிறகு ஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, கோ 43, ஆடுதுறை 38, சிஆர் 1009 என சன்னம், மோட்டா ரகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரிசி வகைகள் சந்தையில் இறங்கிவிட்டன.`இந்த வகையான அரிசிகளில் போதிய ஊட்டச்சத்து இல்லை எனக் கூறி அதில் ரசாயனத்தைக் கலந்து செறிவூட்டும் வேலைகள் நடக்கின்றன. இதனால் வரும் பேராபத்தை அரசுகள் உணரவில்லை' என்பதுதான் சூழல் ஆர்வலர்களின் கவலை..குறிப்பாக, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, இந்திய மக்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க, ரேஷனில் வழங்கப்படும் அரிசியை செறிவூட்டி வழங்க இந்திய அரசு திட்டமிட்டது. தமிழ்நாட்டில் முதன்முதலாக திருச்சியில் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் முதலே இதற்கான சோதனைகள் தொடங்கிவிட்டன. இதனைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும் பொதுவிநியோக முறை, மதிய உணவுத் திட்டம் உள்பட அரசு சார்ந்த திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.செறிவூட்டப்பட்ட அரிசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து மற்றும் துத்தநாகச் சத்து ஆகிய 9 நுண்ணூட்டச் சத்துகள் அடங்கியுள்ளன என்றும் இதனைச் சாப்பிடுவதால், ரத்த உற்பத்தி அதிகரித்து, ரத்தசோகை நோய்க்குத் தீர்வு கிடைக்கும் என்று அரசு கூறிவருகிறது.ஆனால், இந்த அரிசியைக் கழுவும்போது தண்ணீரில் அரிசி மிதப்பதாகவும் வழக்கமான முறையில் வேகவைக்க முடியவில்லை என்றும் பல மாவட்டங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தானியங்களில் இரும்புச்சத்தை செறிவூட்டுவதன் மூலம் உடலில் ஃபெரிடின் போன்ற இரும்புச்சத்து சார்ந்த சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், ஹீமோகுளோபின் அளவையும் இது உயர்த்தாது என்றும் ஆய்வுகள் கூறுவதாக சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.குடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளை அழித்து பாக்டீரியா தொற்று எளிதில் ஏற்படவும் இந்த இரும்புச் சத்து வழிவகுக்கும். உடலில் இரும்புச் சத்து அதிகரித்தால் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படலாம். பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் உயர்ரத்த அழுத்தம் ஏற்படச் சாத்தியமுள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்..இந்நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் `பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த பிரபாகரனிடம் பேசினோம். ``மத்திய அரசு 15.3.2022 அன்று செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான நெறிமுறைகளை வெளியிட்டது. பயனாளிகளுக்கு தரமான செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கான நடைமுறைகளை மாநில அரசுகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் 2021ம் ஆண்டு விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் கொண்டு வரப்பட்டது. அதேநேரம், `தலசீமியா, சிக்கில் செல் அனீமியா (அரிவாள் செல் ரத்தசோகை) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இதை உண்ண வேண்டும்' என்னும் எச்சரிக்கை வாசகத்தை செறிவூட்டப்பட்ட அரிசிகள் அடங்கிய பைகளில் அச்சிட்டிருப்பது அவசியம் எனவும் அறிவுறுத்தியது.ஆனால், எந்த எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் இந்த அரிசி விநியோகிக்கப்படுகிறது. அதனால்தான், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் வழக்கு தொடர்ந்தார்'' என்கிறார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரிசி அடைக்கப்பட்டுள்ள கோணிப் பையில் இந்த எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது..`கோணிப் பையில் உள்ள எச்சரிக்கை வாசகம் நுகர்வோருக்கு எப்படி தெரியும்?' எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து செப்டம்பர் 21ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.அதேநேரம், `அரிசியை செறிவூட்டும் காப்புரிமையை பிரான்ஸ், பிரிட்டன், சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாட்டுக் கம்பெனிகள் வைத்துள்ளன. அவர்களிடம் இருந்து மட்டும்தான் நாம் செறிவூட்டும் ரசாயன மருந்துகளை வாங்கும் நிலை ஏற்படும். இந்தியாவில் சுதந்திரமாக அரிசியை உற்பத்தி செய்தாலும் செறிவூட்டுவதற்காக வெளிநாட்டு கம்பெனிகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும்' எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் எச்சரிக்கின்றனர்.செறிவூட்டப்பட்ட அரிசி எழுப்பும் சர்ச்சை குறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``இந்த அரிசியை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென்பது மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். இதனை வழங்குவது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மத்திய அரசு நடத்தியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், இதுகுறித்து மேலும் பேச முடியாது'' என்றதோடு முடித்துக் கொண்டார்.பேசினால்தானே மக்களின் பதற்றம் தணியும்? - ரய்யான் பாபு