டெல்லியில் பேச்சுவார்த்தை, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என படுபிஸியாக இருக்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது, கோடநாடு வழக்கு. இதன் உச்சகட்டமாக, தனபாலின் வாக்குமூலத்தை வைத்து சி.பி.சி.ஐ.டி. முன்னெடுக்கும் அடுத்தகட்ட நகர்வுகள், அ.தி.மு.க முகாமின் ஹாட்லைன் டாபிக். ‘என் தம்பி கொல்லப்பட்டிருக்கிறான். சி.பி.சி.ஐ.டி. என்னை விசாரிக்க அழைத்தால் அனைத்தையும் சொல்வேன்’ என்று பேசி வந்தவர், ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால். இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தனபாலை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதன்படி, செப்டம்பர் 14ம் தேதி ஆஜரான தனபாலிடம் சுமார் எட்டு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.. ``விசாரணையில் என்ன நடந்தது?" என தனபாலிடம் கேட்டோம். ``அம்மாவின் பங்களாவில் தன்னை கொள்ளையடிக்கச் சொன்னது யார் என்பது உள்ளிட்ட தகவல்களை என் தம்பி என்கிட்ட சொன்னான். அந்தத் தகவல்களையும் அதுக்குப் பிறகு நடந்த விஷயங்களையும் ஆதாரமா வைத்து 50 பேர் லிஸ்ட்டை போலீஸ்கிட்ட கொடுத்திருக்கேன். இதுல, அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள், காவல்துறை அதிகாரிகளோட சில கூலிப்படையினரும் இருக்காங்க. அவங்க சொன்னபடி, கோடநாடு பங்களாவில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை அவங்ககிட்ட ஒப்படைச்சிருக்கான், கனகராஜ். ஆனா பேசுன பணத்தைத் தராமல் அவனை அடிச்சிருக்காங்க. அதுல, எஸ்.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருத்தரும் இருக்கார். மறுநாள், அவனை சமாதானப்படுத்தி உட்கார வெச்சு சரக்கு ஊத்தி கொடுத்திருக்காங்க. அதுல பாய்ஸன் இருக்குறதை புரிஞ்சுகிட்டு தப்பிச்சுட்டான். . அதன்பிறகு அயோத்தியாபட்டினம், ஆத்தூர்னு அடுத்தடுத்த நாள்கள்ல சமாதானம்கிற கூட்டிட்டுப் போய் சரக்கை ஊத்தி கொடுத்திருக்காங்க. பிறகு அவனை எங்கேயோ தூக்கிட்டுப்போயி கதையை முடிச்சுட்டாங்க. அப்புறம் ஆக்சிடெண்ட்ல செத்த மாதிரி ஹைவேஸ்ல கொண்டுவந்து போட்டுட்டாங்க. இதுதான் நடந்திருக்குது. என் தம்பி விபத்தில சாகலை. கொலைதான் நடந்திருக்குது” என்றார். `லிஸ்ட்ல யார் பெயரையெல்லாம் சொல்லியிருக்கீங்க?’ என்றோம். ``ஐந்து சூட்கேஸ் நிறைய ஆவணங்களைத்தான் கனகராஜ் டீம் எடுத்திருக்காங்க. சங்ககிரியில் எடப்பாடி மச்சான் வெங்கடேஷ்ட்ட மூணு கொடுத்துட்டு, சேலத்துல இளங்கோவன்கிட்ட மீதி இரண்டையும் கொடுத்திருக்கான் கனகராஜ். இந்த வேலையை முடிக்கச் சொன்னது எடப்பாடி பழனிசாமி டீம்தான். கோடநாடு கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் எடப்பாடி பழனிசாமி, மாஜி அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வேலுமணி அண்ணன் அன்பரசன், ஊட்டி சஜீவன், கோயமுத்தூர் அனுபவ் ரவி, நீலகிரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கப்பச்சி விநோத், ஆத்தூர் இளங்கோவன் ஆகியோர் பேரை கொடுத்திருக்கேன். மத்தவங்க, இவங்களுக்கு கீழே இயங்கியிருக்காங்க. இந்தச் சம்பவத்துல தொடர்புடையவங்க மட்டுமில்ல. விசாரணைங்கற பேர்ல இந்த வழக்கை திசைதிருப்பி, முடிச்சுக் கட்டவும் சில போலீஸ் அதிகாரிகள் முயற்சி பண்ணினாங்க. அவங்க பெயரையும் லிஸ்ட்ல சொல்லியிருக்கேன். கோடநாடு வழக்கு, சட்டம் ஒழுங்கு போலீஸ் டீம் கையிலிருந்தப்ப சேலத்துல விசாரணையின்போது என்னை அடிச்சு நொறுக்கினாங்க. வலியில அழுதுட்டேன். உடனே 108 ஆம்புலன்ஸை வரச்சொல்லி ஊசி போட்டாங்க. அதுக்குப் பிறகு ஒன்றரை நாள் என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியலை..என்கிட்ட என்னென்ன எழுதி வாங்குனாங்கன்னும் தெரியலை. இந்த விஷயத்தில் போலீஸோட அத்துமீறலும் அதிகார துஷ்பிரயோகமும் நிறைய இருக்குது. மேற்கு மண்டல முன்னாள் ஐ.ஜி. சுதாகர், ஓமலூர் டிஎஸ்.பி சங்கீதா, எடப்பாடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.பி.சி.ஐ.டி. முத்துமாணிக்கம் இவங்களை எல்லாம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரிக்கணும்” என்றார். ‘கனகராஜின் மரணத்தில் மர்மம்’ என்று தொடக்கத்திலேயே சந்தேகம் எழுப்பிய வழக்கறிஞர் விஜயனிடம் கேட்டபோது, “இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடப்பட்டிருக்கிறது. அதற்கு முக்கியத்துவம் தரப்படும் என நம்புகிறேன். தனபாலின் வாக்குமூலம் மிக முக்கியமானதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் இனி பல அதிரடி திருப்பங்கள் நடப்பதற்கான சாத்தியம் இருக்கிறது”என்றார்.. தனபாலின் குற்றச்சாட்டு குறித்து எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரிடம் பேச முயன்றோம். யாரும் பேச முன்வரவில்லை. இதையடுத்து, சஜீவனிடம் பேசியபோது, “ தொடக்கத்தில் இருந்தே என்னைத் தேவையில்லாம இழுத்துவிட்டுப் பேசுறாங்க. இப்ப தனபாலும் அதைத்தான் செய்திருக்கார். எனக்கும் இதற்கும் எந்தத் தொடர்புமில்லை” என்றார். நீலகிரி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரான கப்பச்சி விநோத்திடம் கேட்டபோது, “கோடநாடு சம்பவம் நடந்தபோது நான் நீலகிரி மாவட்டச் செயலாளரே கிடையாது. பாசறை பதவியில் சாதாரணமான நபராகத்தான் இருந்தேன். யாரோ என் பெயரை வேண்டுமென்றே பொய்யாக சொல்லுமாறு கூறியுள்ளனர். அதை தனபால் செய்துள்ளார்” என்றார்..அனுபவ் ரவியோ, ``தன்னை காப்பாத்திக்கிறதுக்காக ஏதேதோ வதந்தி, பொய்களைப் பேசியுள்ளார், தனபால். இதுவரை எவ்வளவோ சீனியர் போலீஸ் அதிகாரிகள் என்கிட்ட விசாரணை நடத்திட்டாங்க. எனக்கும் இதற்கும் துளியும் தொடர்பில்லை" என்றார்.அ.தி.மு.க.வின் சட்ட ஆலோசனைக் குழு நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, “இந்த வழக்கை அரசியல் ஆயுதமாக தி.மு.க. அரசு பயன்படுத்துகிறது. இந்தப் பூச்சாண்டிக்கு பயப்படாமல்தான் சி.பி.ஐ. விசாரணையை எடப்பாடி கேட்கிறார். தனபாலின் வாக்குமூலத்தை வைத்து ஏதாவது டிராமா பண்ண நினைத்தால் முழு தோல்வியை ஸ்டாலின் அரசு சந்திக்கும்” என்றார். ஆக, கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது, கோடநாடு விவகாரம். - எஸ்.ஷக்தி