`தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என்ற வார்த்தையை அமைச்சர் துரைமுருகனின் `திடீர்' வேலூர் பாசத்தோடு முடிச்சுப்போட்டுப் பேசி வருகின்றனர், தி.மு.க.வினர். `நாடாளுமன்றத் தேர்தலில் கதிர் ஆனந்தின் வெற்றி குறித்து உளவுத்துறை கொடுத்த அறிக்கையே, துரைமுருகனின் உதறலுக்குக் காரணம்' என்கின்றனர், உடன்பிறப்புகள். ``என்ன நடக்கிறது?" என வேலூர் மாநகர, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்புவிடம் கேட்டோம். ``இதுநாள்வரை காட்பாடி தொகுதியைவிட்டு அருகில் இருக்கும் வேறெந்த தொகுதிக்கும் அமைச்சர் துரைமுருகன் சென்றதில்லை. அதில் அதிக அக்கறை காட்டவும் மாட்டார். ஆனால், இப்போது வேலூர் மீது திடீர் பாசம் காட்டத் தொடங்கியிருக்கிறார். காரணம் ரொம்ப சிம்பிள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேலூரில் அவரின் மகன் கதிர் ஆனந்தை களமிறக்க இருக்கிறார். கடந்தமுறை வெறும் எட்டாயிரம் ஓட்டுகளில் அவர் ஜெயித்தார். `இந்தமுறை அதிருப்தி அலை அதிகமாக வீசுவதால் கதிர் ஆனந்த் வெற்றி பெறுவது கடினம்' என உளவுத்துறை அறிக்கை கொடுத்திருக்கிறது. இந்தப் பதற்றத்தில்தான் வேலூருக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்..வேலூரில் தலைகாட்டிய துரைமுருகன், ‘இனி ஒவ்வொரு மாதமும் ஆறாம் தேதியை வேலூர் மாநகராட்சிக்கு ஒதுக்கிவிட்டேன். இங்கு மோசமான அதிகாரிகள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். நான் வந்து பட்டையை உரிப்பேன்’ என்கிறார். ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அக்கறை, அதிலும் இந்தமுறை ஜெயித்து இரண்டரை ஆண்டுகளில் காட்டாத அக்கறையை இப்போது காட்டுகிறார் என்றால் தேர்தல் மட்டும்தான் காரணம். சரி... அப்படியும் அவர் தனது பணியை சரியாகச் செய்தாரா என்றால், அதுவும் இல்லை. கிரீன் சர்க்கிள் அருகில் இருக்கும் பிரபல ஓட்டல் முன்பு வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மறுநாள் ஓட்டலுக்கு முன்பு ஜே.சி.பி.யைவிட்டு பள்ளம் தோண்டி வாகனங்களை நிறுத்த முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் செய்தனர். என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அடுத்த சில நாள்களில் பள்ளம் மூடப்பட்டது.அடுத்ததாக, திறப்புவிழாவுக்குத் தயார்நிலையில் இருந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் வழியே போன துரைமுருகன், `பார்க்கிங் வசதி இல்லை. எந்த கலெக்டர் இந்த தியேட்டருக்கு அனுமதி கொடுத்தது. நாளை காலை அந்த ஃபைலை எடுத்துக்கொண்டு வரவேண்டும்?' எனக் கொதித்தார். ஆனால், பத்தாவது நாளே அவரின் மகன் கதிர் ஆனந்த், அதே தியேட்டரை ரிப்பன் வெட்டி திறந்துவைக்கிறார். அந்தவரிசையில், `மாநகராட்சி சரியில்லை' எனக் கூறும் துரைமுருகனின் நடிப்பு, இந்தமுறை எடுபடாது" என்றார்..தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``இன்றுவரையில் காட்பாடி தி.மு.க. வேறு, வேலூர் தி.மு.க. வேறு என்றுதான் கட்சிக்காரர்கள் பிரிந்துகிடக்கின்றனர். இத்தனைக்கும் மாநகராட்சியின் 60 வார்டுகளில் 15 வார்டுகள் காட்பாடியில் வருகின்றன. மேயரால் அங்கு நுழைய முடியவில்லை. காட்பாடி தனி சமஸ்தானமாக இருக்கிறது, துரைமுருகனின் வீட்டுக்கு அருகில் மாவட்டச் செயலாளர் நந்தகுமார் இருந்தாலும் காட்பாடி அரசியலில் அவர் தலையிடுவது இல்லை. மேயர் சுஜாதாவை ஒருமுறை மாநகராட்சி அலுவலகத்தில், `உனக்கென்ன தெரியும் ஓரம் போ’ என்று அதட்டி ஒடுக்கினார், துரைமுருகன். காட்பாடி தி.மு.க.வினர் கொடுத்த டார்ச்சரால் மேயர் கண்ணீர்விட்டு அழுதார். அடுத்ததாக, சமீபத்தில் வேலூருக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தபோது சர்க்யூட் ஹவுஸில் தங்காமல் மாவட்டச் செயலாளர் நந்தகுமாரின் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இதை துரைமுருகன் ரசிக்கவில்லை" என்கின்றனர்..தொடர்ந்து பேசும்போது, `` வேலூர் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன. பாதாள சாக்கடைத் திட்டம் முடங்கிக் கிடக்கிறது. தமிழகத்திலேயே வேலூர் மாநகராட்சிதான் செயல்படாமல் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஆறாம் தேதி வேலூர் மாநகராட்சிக்கு என ஒதுக்கிவிட்டேன் என்கிறார். இரண்டரை ஆண்டுகளில் அவர் முறையாக வந்திருந்தால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஓரளவு நல்லமுறையில் நடந்திருக்கும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?" என்றனர். அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வினர் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் பெற அமைச்சர் துரைமுருகனின் எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய அவரின் உதவியாளர் அஸ்கர் அலி, ``பிறகு பேசுகிறேன்" என்றார். அதன்பிறகு அவரிடம் பேச முடியவில்லை. கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் பேச முயன்றோம். அவரிடம் இருந்து பதில் வரவில்லை. தேர்தல் முடியும்வரை வேலூரில் மட்டும்தான் சிக்னல் கிடைக்கும்போல! -அன்புவேலாயுதம்